நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

42 பாயிரம் (இ-ள்) அன்னம் ஆவே - அன்னமும் ஆவும் போல்வார் தலை மாணாக்கர், மண்ணொடு கிளியே - மண்ணும் கிளியும் போல்வார் இடை மாணாக்கர், இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி - இல்லிக் குடமும் ஆடும் எருமையும் நெய்யரியும் போல்வார் கடை மாணாக்கர், அன்னர் - போல்வார் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக, தலை இடை கடை மாணாக்கர் - தலை மாணாக்கர் இடை மாணாக்கர் கடை மாணாக்கர் என முன்னிறுத்திய முப்பகுதியினும் கூட்டுக. பாலும் நீரும் பிரிப்பது அன்னம்; நீர்த்துறை சென்று நீர் கலக்காமல் அருந்துவது பசு; குசவன் வனைந்த வடிவுப் பண்பேயன்றித் தாமொரு வடிவுப் பண்பு கொள்ளாதது மண்; பன்னாளும் பயிற்றிய சொல்லே யன்றி வேறொன்றும் கூறாதது கிளி; சொரிந்த நீரையெல்லாம் கீழ்ச் சொரிந்துவிடல் இல்லிக் குடம்; ஓரிடத்தில் வயிறு நிறைக்கும் களைகள் இருக்கப் பலவிடத்திற் களையினும் சென்று வயிறு நிறைவு படாதது ஆடு; நீர்த்துறை கடக்க விழுந்து வெள்ளிய நீரைக் கலக்கி அருந்துவது எருமை; நல்ல நெய்யைப் புறத்திட்டு அழுக்கை ஏற்றுக்கொள்வது நெய்யரி. நல்லலை அகத்திட்டு நவை புறத்திடுவது நெய்யரி மாண்பென நேர்ந்தன கொளலே எனத் தலை மாணாக்கர் என்றும் சொல்வர். (39) 40.. மாணாக்கர் ஆகாதவர் களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் றறுகணன் பாவி படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. சூ-ம், கற்பிக்கப்படாத மாணாக்கராவார் இவரெனக் கூறுகின்றது. (இ-ள்), களி - எப்போதும் பயனின்றிக் களிப்பானுக்கும், மடி - கரு தியவற்றைச் செய்யுங்காலத்து முயற்சியின்றிச் சோம்பறை ஆவானுக் கும், மானி - எஞ்ஞான்றும் தன்னிலையில் தாழாமையும் தெய்வத் தால் தாழ்வு வரினும் உயிர் வாழாமையும் உடையான் ஆவானுக்கும், காமி - பிறர்க்குரிய பொருளைக் காம மயக்கத்தான் வவ்வக் கருது வானுக்கும், கள்வன் - பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொரு ளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதுவானுக்கும், பிணியன் - பழவினையாலன்றி உணவு செயல்கள் முதலாய காரணத்தான் வாதம் முதலிய பிணிகளை உடையானுக்கும், ஏழை - கேடு வறுமை பழி பாவங்களென்னும் ஆகாவொழுக்கத்தில் ஆசையுடைமையும் ஆக்கம் செல்வம் புகழ் அறங்களென்னும் நன்மைகளைக் கெடுத்துக்
42 பாயிரம் ( - ள் ) அன்னம் ஆவே - அன்னமும் ஆவும் போல்வார் தலை மாணாக்கர் மண்ணொடு கிளியே - மண்ணும் கிளியும் போல்வார் இடை மாணாக்கர் இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி - இல்லிக் குடமும் ஆடும் எருமையும் நெய்யரியும் போல்வார் கடை மாணாக்கர் அன்னர் - போல்வார் என்பதனை எல்லாவற்றோடும் கூட்டுக தலை இடை கடை மாணாக்கர் - தலை மாணாக்கர் இடை மாணாக்கர் கடை மாணாக்கர் என முன்னிறுத்திய முப்பகுதியினும் கூட்டுக . பாலும் நீரும் பிரிப்பது அன்னம் ; நீர்த்துறை சென்று நீர் கலக்காமல் அருந்துவது பசு ; குசவன் வனைந்த வடிவுப் பண்பேயன்றித் தாமொரு வடிவுப் பண்பு கொள்ளாதது மண் ; பன்னாளும் பயிற்றிய சொல்லே யன்றி வேறொன்றும் கூறாதது கிளி ; சொரிந்த நீரையெல்லாம் கீழ்ச் சொரிந்துவிடல் இல்லிக் குடம் ; ஓரிடத்தில் வயிறு நிறைக்கும் களைகள் இருக்கப் பலவிடத்திற் களையினும் சென்று வயிறு நிறைவு படாதது ஆடு ; நீர்த்துறை கடக்க விழுந்து வெள்ளிய நீரைக் கலக்கி அருந்துவது எருமை ; நல்ல நெய்யைப் புறத்திட்டு அழுக்கை ஏற்றுக்கொள்வது நெய்யரி . நல்லலை அகத்திட்டு நவை புறத்திடுவது நெய்யரி மாண்பென நேர்ந்தன கொளலே எனத் தலை மாணாக்கர் என்றும் சொல்வர் . ( 39 ) 40 .. மாணாக்கர் ஆகாதவர் களிமடி மானி காமி கள்வன் பிணிய னேழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித் தடுமா றுளத்தன் றறுகணன் பாவி படிறனின் னோர்க்குப் பகரார் நூலே . சூ - ம் கற்பிக்கப்படாத மாணாக்கராவார் இவரெனக் கூறுகின்றது . ( - ள் ) களி - எப்போதும் பயனின்றிக் களிப்பானுக்கும் மடி - கரு தியவற்றைச் செய்யுங்காலத்து முயற்சியின்றிச் சோம்பறை ஆவானுக் கும் மானி - எஞ்ஞான்றும் தன்னிலையில் தாழாமையும் தெய்வத் தால் தாழ்வு வரினும் உயிர் வாழாமையும் உடையான் ஆவானுக்கும் காமி - பிறர்க்குரிய பொருளைக் காம மயக்கத்தான் வவ்வக் கருது வானுக்கும் கள்வன் - பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொரு ளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதுவானுக்கும் பிணியன் - பழவினையாலன்றி உணவு செயல்கள் முதலாய காரணத்தான் வாதம் முதலிய பிணிகளை உடையானுக்கும் ஏழை - கேடு வறுமை பழி பாவங்களென்னும் ஆகாவொழுக்கத்தில் ஆசையுடைமையும் ஆக்கம் செல்வம் புகழ் அறங்களென்னும் நன்மைகளைக் கெடுத்துக்