நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 41 (இ-ள்) ஈதல் இயல்பே - ஆசிரியர் சீடருக்கு நூலறிவைக் கற்பிக் கும் இலக்கணத்தை, இயம்புங் காலை - சொல்லுமிடத்து, காலமும் இடனும் - பொருத்தமாகச் சிறந்த ஓரையினும் சிறந்த இடத்தினும், வாலிதின் நோக்கிச் - தூய்தாக நோக்கி, சிறந்துழி இருந்து - இடம் பொருள் ஏவற்குக் குறை வராத இடத்திலிருந்து, தன் தெய்வம் வாழ்த்தி - தாம் தாம் கொண்ட தெய்வத்தை வாழ்த்தி, உரைக்கப் படும் பொருள் - மாணாக்கருக்கு உரைக்கப்படும் பொருளையெல் லாம், உள்ளத்து அமைத்து - தன்னுள்ளத்தின் கண்ணே ஒழுங்கு படச் சிந்தித்து நிறுத்தி, விரையான் - வருவதிற் கருத்தினை மட்டுப் படுத்தி வந்ததிற் சிந்தையைச் வெகுளான் - சினத்திற்குக் காரணம் மாணாக்கனிடத்து உளதாய போதும் அவ்வெகுளியைச் செய்யாதவனாய், விரும்பி - அறிவு உணர்த்தலிலேயே விருப்பம் தோற்றி, முகமலர்ந்து - முகமலர்ச்சியையும் தோற்றி, கொள்வோன் கொள்வகை அறிந்து - சீடன் கொள்ளத்தகும் அறிவு இவ்வளவென அறிந்து, அவன் உளங்கொளக் அவன் அறிவு ஏற்கும்படிக்கு, கோட்டமில் மனத்தின் - மனக்கோட்டம் இல்லாமல், நூல் கொடுத் தல் என்ப - நூலறிவைக் கொடுப்பதாமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. (37) 38. மாணாக்கர் ஆவார் தன்மக னாசான் மகனே மன்மகன் பொ ருணனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற்கு குரைப்பது நூலே. சூ-ம், கற்பிக்கப்படுவோராகிய சீடராவார் இவரெனக் கூறுகின்றது. (இ-ள்) தன் மகன் ஆசான் மகனே - தன் மகனுக்கும் ஆசான் மகனுக் கும், மன் மகன் பொருள் நனி கொடுப்போன் - மன் மகனுக்கும் பொருள் கொடுப்போனுக்கும், வழிபடுவோனே உரைகோளாளற்கு - வழிபடுவோர்க்கும் உரைகோளாளர்க்கும், உரைப்பது நூலே - இவ் வறுவர்க்கும் நூல் உரைக்க வேண்டுமுறையாம் என்றவாறு. (38) மாணாக்கர் வகை 39. அன்ன மாவே மண்ணொடு கிளியே இல்லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். சூ-ம், இவர் தன்மை மூன்று வகைப்படுமெனக் கூறுகின்றது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 41 ( - ள் ) ஈதல் இயல்பே - ஆசிரியர் சீடருக்கு நூலறிவைக் கற்பிக் கும் இலக்கணத்தை இயம்புங் காலை - சொல்லுமிடத்து காலமும் இடனும் - பொருத்தமாகச் சிறந்த ஓரையினும் சிறந்த இடத்தினும் வாலிதின் நோக்கிச் - தூய்தாக நோக்கி சிறந்துழி இருந்து - இடம் பொருள் ஏவற்குக் குறை வராத இடத்திலிருந்து தன் தெய்வம் வாழ்த்தி - தாம் தாம் கொண்ட தெய்வத்தை வாழ்த்தி உரைக்கப் படும் பொருள் - மாணாக்கருக்கு உரைக்கப்படும் பொருளையெல் லாம் உள்ளத்து அமைத்து - தன்னுள்ளத்தின் கண்ணே ஒழுங்கு படச் சிந்தித்து நிறுத்தி விரையான் - வருவதிற் கருத்தினை மட்டுப் படுத்தி வந்ததிற் சிந்தையைச் வெகுளான் - சினத்திற்குக் காரணம் மாணாக்கனிடத்து உளதாய போதும் அவ்வெகுளியைச் செய்யாதவனாய் விரும்பி - அறிவு உணர்த்தலிலேயே விருப்பம் தோற்றி முகமலர்ந்து - முகமலர்ச்சியையும் தோற்றி கொள்வோன் கொள்வகை அறிந்து - சீடன் கொள்ளத்தகும் அறிவு இவ்வளவென அறிந்து அவன் உளங்கொளக் அவன் அறிவு ஏற்கும்படிக்கு கோட்டமில் மனத்தின் - மனக்கோட்டம் இல்லாமல் நூல் கொடுத் தல் என்ப - நூலறிவைக் கொடுப்பதாமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . ( 37 ) 38 . மாணாக்கர் ஆவார் தன்மக னாசான் மகனே மன்மகன் பொ ருணனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற்கு குரைப்பது நூலே . சூ - ம் கற்பிக்கப்படுவோராகிய சீடராவார் இவரெனக் கூறுகின்றது . ( - ள் ) தன் மகன் ஆசான் மகனே - தன் மகனுக்கும் ஆசான் மகனுக் கும் மன் மகன் பொருள் நனி கொடுப்போன் - மன் மகனுக்கும் பொருள் கொடுப்போனுக்கும் வழிபடுவோனே உரைகோளாளற்கு - வழிபடுவோர்க்கும் உரைகோளாளர்க்கும் உரைப்பது நூலே - இவ் வறுவர்க்கும் நூல் உரைக்க வேண்டுமுறையாம் என்றவாறு . ( 38 ) மாணாக்கர் வகை 39 . அன்ன மாவே மண்ணொடு கிளியே இல்லிக் குடமா டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர் . சூ - ம் இவர் தன்மை மூன்று வகைப்படுமெனக் கூறுகின்றது .