நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

36 பாயிரம் கவும், செஞ்சொற் புலவனே சேயிழையா - நூல் நூற்கின்ற சேயி ழையே செய்யுள் செய்கின்ற புலவனாகவும், எஞ்சாத கையே வாயா கக் - நூல் நூற்பானது குறைபாடில்லாத கையே புலவரது வாயாக வும், கதிரே மதியாக - நூல் சேர்க்கின்ற கதிரே புலவரது மதியாகவும், மையிலா நூல் முடியுமாறு - அச்சேயிழை நூற்கின்ற நூலே புலவரது நூல் முடியும் முறையாம் என்றவாறு. (25) 26. உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. சூ-ம், இதுவுமது என்றவாறு. (இ-ள்) உரத்தின் வளம் பெருக்கி - மனத்தினது திண்ணிமையாயுள்ள வளத்தைப் பெருக்கி, உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் - பொருந்திய கோளை முதலாகிய குற்றப்பாடு மனத்தினது உடம்பின் வளத்தைக் கெடுத்து, பொல்லா மரத்தின் - கனக்கோட்டந் தீர்க்கு நூல் - குற்றம் பொருந்திய மரத்தினது கனத்தையும் கோணலையும் நீக்குவது நூலாம்; அஃதேபோல் - அந்நூல் மரத்தைச் செப்பம் செய்யு மாறு போல, மாந்தர் மனக்கோட்டந் தீர்க்கும் - மாந்தரது மனக் கோண லையும் புல்லிய செய்கையையும் நீங்கச் செய்வது, நூல் மாண்பு புலவராற் செய்யப்படும் நூலினது தன்மையாம் என்றவாறு. நூல்போல இதுவும் நூற்கப்படுதலானும் அந்நூல் போலச் செய்யப்படுதலினாலும் நூல் என்பது அடையடுத்து வந்த உவமை யாகுபெயராய குறியாயிற்று. (26) 27. ஆசிரியர் இலக்கணம் குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னூலுரை யாசிரிய யன்னே. சூ-ம், கற்கப்படுவோராகிய ஆசிரியர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) குலன் - உயர்ந்த குலத்தோனாகியும், அருள் - உயிர்களிடத் துத் தயவிரக்கம் உடையோனாகியும், தெய்வங் கொள்கை - நானே பிரமம் என்பது ல்லாமல் யாதொரு தெய்வ மேனும் கொண்டவ
36 பாயிரம் கவும் செஞ்சொற் புலவனே சேயிழையா - நூல் நூற்கின்ற சேயி ழையே செய்யுள் செய்கின்ற புலவனாகவும் எஞ்சாத கையே வாயா கக் - நூல் நூற்பானது குறைபாடில்லாத கையே புலவரது வாயாக வும் கதிரே மதியாக - நூல் சேர்க்கின்ற கதிரே புலவரது மதியாகவும் மையிலா நூல் முடியுமாறு - அச்சேயிழை நூற்கின்ற நூலே புலவரது நூல் முடியும் முறையாம் என்றவாறு . ( 25 ) 26. உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு . சூ - ம் இதுவுமது என்றவாறு . ( - ள் ) உரத்தின் வளம் பெருக்கி - மனத்தினது திண்ணிமையாயுள்ள வளத்தைப் பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் - பொருந்திய கோளை முதலாகிய குற்றப்பாடு மனத்தினது உடம்பின் வளத்தைக் கெடுத்து பொல்லா மரத்தின் - கனக்கோட்டந் தீர்க்கு நூல் - குற்றம் பொருந்திய மரத்தினது கனத்தையும் கோணலையும் நீக்குவது நூலாம் ; அஃதேபோல் - அந்நூல் மரத்தைச் செப்பம் செய்யு மாறு போல மாந்தர் மனக்கோட்டந் தீர்க்கும் - மாந்தரது மனக் கோண லையும் புல்லிய செய்கையையும் நீங்கச் செய்வது நூல் மாண்பு புலவராற் செய்யப்படும் நூலினது தன்மையாம் என்றவாறு . நூல்போல இதுவும் நூற்கப்படுதலானும் அந்நூல் போலச் செய்யப்படுதலினாலும் நூல் என்பது அடையடுத்து வந்த உவமை யாகுபெயராய குறியாயிற்று . ( 26 ) 27 . ஆசிரியர் இலக்கணம் குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னூலுரை யாசிரிய யன்னே . சூ - ம் கற்கப்படுவோராகிய ஆசிரியர் இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) குலன் - உயர்ந்த குலத்தோனாகியும் அருள் - உயிர்களிடத் துத் தயவிரக்கம் உடையோனாகியும் தெய்வங் கொள்கை - நானே பிரமம் என்பது ல்லாமல் யாதொரு தெய்வ மேனும் கொண்டவ