நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 31 யார்க்கும் விளக்கமாகிய உதாரணங்களைப் பெற வைத்தலும், நூலிற்கு அழகெனும் பத்தே - இப்பத்துக் குணப்பெருமையும் பட வருவது நூலுக்கு அழகாம் என்றவாறு. (14) 15. முப்பத்திரண்டு உத்தி நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே தொகுத்துச் கட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல் இரட்டுற மொழித லேதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல் உரைத்து மென்ற லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த றன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே சூ-ம், உத்தி முப்பத்திரண்டாவது இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) நுதலிப் புகுதல் உய்த்துணர வைப்பு எனக்கூறிய முப் பத்திரண்டு நூலினது உத்தியாம் என்றவாறு. (15) 16. உத்தி இலக்கணம் நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி சூ-ம், தந்திர உத்திக்கு இலக்கணம் இன்னதெனக் கூறுகின்றது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 31 யார்க்கும் விளக்கமாகிய உதாரணங்களைப் பெற வைத்தலும் நூலிற்கு அழகெனும் பத்தே - இப்பத்துக் குணப்பெருமையும் பட வருவது நூலுக்கு அழகாம் என்றவாறு . ( 14 ) 15 . முப்பத்திரண்டு உத்தி நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே தொகுத்துச் கட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல் இரட்டுற மொழித லேதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல் உரைத்து மென்ற லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த றன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே சூ - ம் உத்தி முப்பத்திரண்டாவது இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) நுதலிப் புகுதல் உய்த்துணர வைப்பு எனக்கூறிய முப் பத்திரண்டு நூலினது உத்தியாம் என்றவாறு . ( 15 ) 16 . உத்தி இலக்கணம் நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி சூ - ம் தந்திர உத்திக்கு இலக்கணம் இன்னதெனக் கூறுகின்றது .