நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

272 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் அதிகாரப் புறநடை 460. சொற்றொறு மிற்றிதள் பெற்றியென் றளைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவும் தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே. சூ-ம், இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட் பகுதிக்கெல்லாம் ஆவ தோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்) சொற்றொறும் - சொற்றோறுந் தனித்தனியே, இற்றிதன் பெற்றியென்று - இஃது இன்ன சொல் இவ்வாறு சொலினென்று சொல்லப்புகின், அனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் - எல்லாச் சொற்களையும் நிறைவிலக்கணமாகத் தனித்தனியே சொல்லலுறின் வரம்பின்மையாகலின், சொற்றவற் றியலான் - ஈண்டுச் சொன்னவற்றின் இலக்கணத்தானே, மற்றைய பிறவும் - சொல்லாதவற்றையும் ஒப்பித்துக்கொண்டு, தெற்றென வுணர்தல் - விளங்க அறிதல், தெள்ளியோர் திறனே - உணர்வுடையோர்க்கு அழகாவது என்றவாறு. (20) நூலிற்குப் புறநடை 461. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே. சூ-ம், இந்நூலிற் சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்) பழையன கழிதலும் - முற்காலத்திலுள்ள சொற் களை...., புதியன புகுதலும் - இக்காலத்திற் சில புதிய சொற்களை வருவித்த லும், வழுவல கால வகையினானே - காலக் கூறுபாடு நோக்கக் குன் றக் கூறல் மிகைப்படக்கூறல் என்னும் குற்றம் ஆகாது என்றவாறு. அவை: ஒத்து, பின்றை, எவன், என்றா, நாலுகை, வெட்டினான், ஒலம், போழ், பூழைப்பூ இவை முதலானவை வழங்காதன என்க. அக்காலத்து இப்பொழுது என்றது இப்போது எனவும் இக் காலத்திற் பிறவும் வந்தன. (21) ஐந்தாவது உரிச்சொல்லியல் முடிந்தது. நன்னால் எழுத்துஞ் சொல்லுமாக இரு வகைக் காண்டிகையும் ஒரு வகையான் முடிந்தது. முருகன்றுணை.
272 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் அதிகாரப் புறநடை 460. சொற்றொறு மிற்றிதள் பெற்றியென் றளைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவும் தெற்றென வுணர்த றெள்ளியோர் திறனே . சூ - ம் இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட் பகுதிக்கெல்லாம் ஆவ தோர் புறநடை கூறுகின்றது . ( - ள் ) சொற்றொறும் - சொற்றோறுந் தனித்தனியே இற்றிதன் பெற்றியென்று - இஃது இன்ன சொல் இவ்வாறு சொலினென்று சொல்லப்புகின் அனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் - எல்லாச் சொற்களையும் நிறைவிலக்கணமாகத் தனித்தனியே சொல்லலுறின் வரம்பின்மையாகலின் சொற்றவற் றியலான் - ஈண்டுச் சொன்னவற்றின் இலக்கணத்தானே மற்றைய பிறவும் - சொல்லாதவற்றையும் ஒப்பித்துக்கொண்டு தெற்றென வுணர்தல் - விளங்க அறிதல் தெள்ளியோர் திறனே - உணர்வுடையோர்க்கு அழகாவது என்றவாறு . ( 20 ) நூலிற்குப் புறநடை 461. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே . சூ - ம் இந்நூலிற் சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதோர் புறநடை கூறுகின்றது . ( - ள் ) பழையன கழிதலும் - முற்காலத்திலுள்ள சொற் களை .... புதியன புகுதலும் - இக்காலத்திற் சில புதிய சொற்களை வருவித்த லும் வழுவல கால வகையினானே - காலக் கூறுபாடு நோக்கக் குன் றக் கூறல் மிகைப்படக்கூறல் என்னும் குற்றம் ஆகாது என்றவாறு . அவை : ஒத்து பின்றை எவன் என்றா நாலுகை வெட்டினான் ஒலம் போழ் பூழைப்பூ இவை முதலானவை வழங்காதன என்க . அக்காலத்து இப்பொழுது என்றது இப்போது எனவும் இக் காலத்திற் பிறவும் வந்தன . ( 21 ) ஐந்தாவது உரிச்சொல்லியல் முடிந்தது . நன்னால் எழுத்துஞ் சொல்லுமாக இரு வகைக் காண்டிகையும் ஒரு வகையான் முடிந்தது . முருகன்றுணை .