நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 271 பாய... துவைத்தன", பிளிறு - “பிளிறுவார் முரசம்” (சீ'.450), இரை - “இரைக்கு மஞ்சிறைப் பறவைகள்” (சூளா. கல்யாணச்.51), இரக்கு - "இரங்குமுரசி னினஞ்சால் யானை" (புறம்.137), அமுங்கு "மாரி யழுங்கன் மூதூர்" (அகம்.122), இயம்பல் - "காலை முரச மதிலியம்ப”, இமிழ் - "இமிழ் கடல் வளை ள இய வீண்டகன் கிடக்கை” (புறம்.19), குளிறு - “குளிறு முரசங்குணில் (பு.வெ.48), அதிர் - "களிறு களித்த திருங்கார்" (பு.வெ. 37), குரை - “குரைபுனற் கன்னி...” (சீவக.39), கனை - “கனைபுன லூரன்", சிலை - "சிலைத்தார் முரசம்” (புறம்.36), சும்மை - "தள்ளாத சும்மை மிகுதக்கண் நாடு” (சீவக.20), கவ்வை - “கவ்வைநீர் வேலி (பு.வெ.83), கம்பலை - ”வினைக் கம்பலை மனைச்சிலம்பவும்", அரவம் - “அறைகட லரவத்தானை” (சூளா. சீயவதை.108), ஆர்ப் பொடு - “ஆர்த்தபல் லியக்குழாம்" (சூளா. தூது.45), இன்னன - இவ்விருபத்திரண்டும் இவை போல்வன பிறவும், ஓசை - ஒலித்தல் தொழிற் பண்பாம் என்றவாறு. இவ்விரு வகைப் பண்பும் பெயரையும் வினையையும் விட்டு நீங்காமையும் காட்டிய உதாரணங்களிலே கண்டுகொள்க. “பல வகைப் பண்பும் பகர்பெய ராகி” என்றமையால் இவ்விருவகைப் பண் புப் பெயர்களுள்ளும் உருபேற்றலும் தனியே நிற்றலும் உளவென்க. (18) உரியியலுக்குப் புறநடை 459. இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கலர் முதலா நல்லோர் ருரிச்சொலி னயந்தனர் கொளலே. சூ-ம், இவ்வியலுக்கு உரியதோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்) இன்னது - இவ்வெழுத்து இச்சொல் இப்பொருள், இன்னுழி - இவ்வெழுத்தினிடத்து சொல்லிடத்துப் பொருளிடத்து, இன்னணமி யலும் - இவ்வாறு ஆம், என்றிசை நூலுள் - என்று இலக்கணம் சொல்லு நாலுள், குண குனிப் பெயர்கள் - உலகிலுள்ள பொருள்கட் கும் ( கனங்கட்கும் தனித்தனியே, சொல்லாம் பரத்தலிற் - சொல்ல லுற்றால் அனைத்தும் பெருகுதலின் ஈண்டுச் சொல்லாமை, பிங்கலர் முதலா நல்லோர் - பிங்கலர் முதலான புலவர்களால், உரிச்சொலின் - சொல்லப்பட்ட உரிச்சொற் பனுவல்களுள், நயந்தனர் கொளலே இன்னதற்கு இது பெயரன விரித்துக் கூறினர்; அறிந்து கொள்க என்றவாறு. (19)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 271 பாய ... துவைத்தன பிளிறு - பிளிறுவார் முரசம் ( சீ'.450 ) இரை - இரைக்கு மஞ்சிறைப் பறவைகள் ( சூளா . கல்யாணச் .51 ) இரக்கு - இரங்குமுரசி னினஞ்சால் யானை ( புறம் .137 ) அமுங்கு மாரி யழுங்கன் மூதூர் ( அகம் .122 ) இயம்பல் - காலை முரச மதிலியம்ப இமிழ் - இமிழ் கடல் வளை இய வீண்டகன் கிடக்கை ( புறம் .19 ) குளிறு - குளிறு முரசங்குணில் ( பு.வெ .48 ) அதிர் - களிறு களித்த திருங்கார் ( பு.வெ. 37 ) குரை - குரைபுனற் கன்னி ... ( சீவக .39 ) கனை - கனைபுன லூரன் சிலை - சிலைத்தார் முரசம் ( புறம் .36 ) சும்மை - தள்ளாத சும்மை மிகுதக்கண் நாடு ( சீவக .20 ) கவ்வை - கவ்வைநீர் வேலி ( பு.வெ .83 ) கம்பலை - வினைக் கம்பலை மனைச்சிலம்பவும் அரவம் - அறைகட லரவத்தானை ( சூளா . சீயவதை .108 ) ஆர்ப் பொடு - ஆர்த்தபல் லியக்குழாம் ( சூளா . தூது .45 ) இன்னன - இவ்விருபத்திரண்டும் இவை போல்வன பிறவும் ஓசை - ஒலித்தல் தொழிற் பண்பாம் என்றவாறு . இவ்விரு வகைப் பண்பும் பெயரையும் வினையையும் விட்டு நீங்காமையும் காட்டிய உதாரணங்களிலே கண்டுகொள்க . பல வகைப் பண்பும் பகர்பெய ராகி என்றமையால் இவ்விருவகைப் பண் புப் பெயர்களுள்ளும் உருபேற்றலும் தனியே நிற்றலும் உளவென்க . ( 18 ) உரியியலுக்குப் புறநடை 459. இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கலர் முதலா நல்லோர் ருரிச்சொலி னயந்தனர் கொளலே . சூ - ம் இவ்வியலுக்கு உரியதோர் புறநடை கூறுகின்றது . ( - ள் ) இன்னது - இவ்வெழுத்து இச்சொல் இப்பொருள் இன்னுழி - இவ்வெழுத்தினிடத்து சொல்லிடத்துப் பொருளிடத்து இன்னணமி யலும் - இவ்வாறு ஆம் என்றிசை நூலுள் - என்று இலக்கணம் சொல்லு நாலுள் குண குனிப் பெயர்கள் - உலகிலுள்ள பொருள்கட் கும் ( கனங்கட்கும் தனித்தனியே சொல்லாம் பரத்தலிற் - சொல்ல லுற்றால் அனைத்தும் பெருகுதலின் ஈண்டுச் சொல்லாமை பிங்கலர் முதலா நல்லோர் - பிங்கலர் முதலான புலவர்களால் உரிச்சொலின் - சொல்லப்பட்ட உரிச்சொற் பனுவல்களுள் நயந்தனர் கொளலே இன்னதற்கு இது பெயரன விரித்துக் கூறினர் ; அறிந்து கொள்க என்றவாறு . ( 19 )