நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

26 பாயிரம் பொதுப் பாயிரம் 4. நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் சூ-ம், பொதுப் பாயிரம் இத்துணைப் பகுதிப்படுமெனக் கூறு கின்றது. (இ-ள்) நூலே - நூல் இலக்கணமும், நுவல்வோன் - ஆசிரியன் இலக்கணமும், நுவலும் திறனே - ஆசிரியன் கற்பிக்கும் இலக்கண மும், கொள்வோன் - சீடன் இலக்கணமும், கோடற் கூற்று - சீடன் கொள்ளும் முறைமை இலக்கணமும், ஆமைந்தும் - ஆகிய இவ் வைந்து இலக்கணமும், எல்லா நூற்கும் - எல்லா நூன்முகத்தும் பொருந்தும், இவை பொதுப் பாயிரம் - பொதுப் பாயிரம் இவையாம் என்றவாறு. (1) நூலின் இயல்பு 5. நூலி னியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே சூ-ம், நூலின் இலக்கணம் இஃதெனக் கூறியது. (இ-ள்) நூலின் இயல்பே நுவலின் - நூல் இலக்கணத்தைச் சொல் லின், ஓரிரு பாயிரம் தோற்றி - பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் முன்னுடைத்தாய், மும்மையின் ஒன்றாய் - மூன்று நூலின் ஒரு நூலாய், நாற்பொருள் பயத்தோடு - நால்வகைப் பொருளையும் பெறுவதாக, எழுமதம் தழுவி - எழுவகை மதமும் படவருவதாய், ஐயிரு குற்றமும் அகற்றி - பத்துக் குற்றமும் சாராது வருவதாய், அம் மாட்சியோடு - பத்துப் பெருமையொடுங்கூடி வருவதாய், எண்ணான்கு உத்தியின் - முப்பத்திரண்டு தந்திரவுத்தியுடனே வருவதாய், இயலே படலம் என்னும் உறுப்பினில் - இயலுறுப்புப் படலவுறுப்பு என்னும் இவ் விரண்டு உறுப்பினை உடையதாய், சூத்திரம் - சூத்திரப் பொருளா' கவும், காண்டிகை - காண்டிகைப் பொருளாகவும், விருத்தியாகும் -
26 பாயிரம் பொதுப் பாயிரம் 4. நூலே நுவல்வோ னுவலுந் திறனே கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும் எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் சூ - ம் பொதுப் பாயிரம் இத்துணைப் பகுதிப்படுமெனக் கூறு கின்றது . ( - ள் ) நூலே - நூல் இலக்கணமும் நுவல்வோன் - ஆசிரியன் இலக்கணமும் நுவலும் திறனே - ஆசிரியன் கற்பிக்கும் இலக்கண மும் கொள்வோன் - சீடன் இலக்கணமும் கோடற் கூற்று - சீடன் கொள்ளும் முறைமை இலக்கணமும் ஆமைந்தும் - ஆகிய இவ் வைந்து இலக்கணமும் எல்லா நூற்கும் - எல்லா நூன்முகத்தும் பொருந்தும் இவை பொதுப் பாயிரம் - பொதுப் பாயிரம் இவையாம் என்றவாறு . ( 1 ) நூலின் இயல்பு 5 . நூலி னியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே சூ - ம் நூலின் இலக்கணம் இஃதெனக் கூறியது . ( - ள் ) நூலின் இயல்பே நுவலின் - நூல் இலக்கணத்தைச் சொல் லின் ஓரிரு பாயிரம் தோற்றி - பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் முன்னுடைத்தாய் மும்மையின் ஒன்றாய் - மூன்று நூலின் ஒரு நூலாய் நாற்பொருள் பயத்தோடு - நால்வகைப் பொருளையும் பெறுவதாக எழுமதம் தழுவி - எழுவகை மதமும் படவருவதாய் ஐயிரு குற்றமும் அகற்றி - பத்துக் குற்றமும் சாராது வருவதாய் அம் மாட்சியோடு - பத்துப் பெருமையொடுங்கூடி வருவதாய் எண்ணான்கு உத்தியின் - முப்பத்திரண்டு தந்திரவுத்தியுடனே வருவதாய் இயலே படலம் என்னும் உறுப்பினில் - இயலுறுப்புப் படலவுறுப்பு என்னும் இவ் விரண்டு உறுப்பினை உடையதாய் சூத்திரம் - சூத்திரப் பொருளா ' கவும் காண்டிகை - காண்டிகைப் பொருளாகவும் விருத்தியாகும் -