நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 261 உ-ம்: ... ... “உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யோனே” என வியங்கோட்கண் அசையாய் வந்தது. (20) முன்னிலை அசைச்சொற்கள் 439. மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவி யாழமுன் னிலையசை. சூ-ம், முன்னிலையிடத்து வரும் இடைச்சொல் கூறுகின்றது. (இ-ள்) மியா - “கேண்மியாவே”, இக - "காணிகமென”, மோ - “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறு.2) மதி - “செல்மதி பாங்கி”, அத்தை - “குறுங்களிச் சொல்லத்தை”, இத்தை - “அளிபோன்று பாடித்தை", வாழிய - “காணிய வாழிய மலைச்சாரல்”, மாள - "சிறுமை தவிர்ந்தீக மாள”, ஈ - “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே” (அகம்.46), யாழ - “நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழ” (கலி-7), முன்னிலையசை - இப்பத்திடைச்சொல்லும் முன்னிலை அசைச்சொல்லாய் வரும் என்றவாறு. (21) . அசைநிலை மொழிகள் 440. யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின் குரை யோரும் போலு மிருந்திட் டன்றாந் தாந்தாள் கின்றநின் றசைமொழி. சூ-ம், அசைநிலைக்கண் வரும் இடைச்சொல் இத்தனையெனக் கூறுகின்றது. (இ-ள்) யா - “தோழியா சுவாகதம் போத வீங்கென (சீவக.1021), கா - “இவளிவட் காண்டிகா” (கலி.99), பிற - “ஆயனையல்லை பிறவோ” (கலி.108), பிறக்கு - “எண்ணிப் பிறக்கனுட் செல்லான் பெருந்தவப் பட்டான்”, அரோ - “கூர்வாமரோ”, போம் - - “வாழா தென்போ மென்ற”, மாது - “விளிந்தன்று மாதவர்” (நற்.178), இகும் - “கண்டிகு மல்லமோ” (ஐங்.121-28),சின் - “உணர்ந்தி சினேரே”, குரை - “அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே" (புறம்.5), ஓரும் - “அஞ்சுவ தோரு மறனே யொருவனை, வஞ்சிப்ப தோரு மவா” (குறள்.366), போலும் - “வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும்”, இருந்து - “நனவென் றெழுந்திருந்தேன்”
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 261 - ம் : ... ... உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே என வியங்கோட்கண் அசையாய் வந்தது . ( 20 ) முன்னிலை அசைச்சொற்கள் 439. மியாயிக மோமதி யத்தை யித்தை வாழிய மாளவி யாழமுன் னிலையசை . சூ - ம் முன்னிலையிடத்து வரும் இடைச்சொல் கூறுகின்றது . ( - ள் ) மியா - கேண்மியாவே இக - காணிகமென மோ - காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ( குறு .2 ) மதி - செல்மதி பாங்கி அத்தை - குறுங்களிச் சொல்லத்தை இத்தை - அளிபோன்று பாடித்தை வாழிய - காணிய வாழிய மலைச்சாரல் மாள - சிறுமை தவிர்ந்தீக மாள - சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே ( அகம் .46 ) யாழ - நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழ ( கலி -7 ) முன்னிலையசை - இப்பத்திடைச்சொல்லும் முன்னிலை அசைச்சொல்லாய் வரும் என்றவாறு . ( 21 ) . அசைநிலை மொழிகள் 440. யாகா பிறபிறக் கரோபோ மாதிகும் சின் குரை யோரும் போலு மிருந்திட் டன்றாந் தாந்தாள் கின்றநின் றசைமொழி . சூ - ம் அசைநிலைக்கண் வரும் இடைச்சொல் இத்தனையெனக் கூறுகின்றது . ( - ள் ) யா - தோழியா சுவாகதம் போத வீங்கென ( சீவக .1021 ) கா - இவளிவட் காண்டிகா ( கலி .99 ) பிற - ஆயனையல்லை பிறவோ ( கலி .108 ) பிறக்கு - எண்ணிப் பிறக்கனுட் செல்லான் பெருந்தவப் பட்டான் அரோ - கூர்வாமரோ போம் - - வாழா தென்போ மென்ற மாது - விளிந்தன்று மாதவர் ( நற் .178 ) இகும் - கண்டிகு மல்லமோ ( ஐங்.121-28 ) சின் - உணர்ந்தி சினேரே குரை - அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே ( புறம் .5 ) ஓரும் - அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா ( குறள் .366 ) போலும் - வடுவென்ற கண்ணாய் வருந்தினை போலும் இருந்து - நனவென் றெழுந்திருந்தேன்