நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

260 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்த்தே என வரும். (17) அந்தில் ஆங்கு என்னும் இடைச்சொற்கள் 436. அந்திலாங் கசைநிலை யிடப்பொரு எவ்வே. சூ-ம், அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டு இடைச்சொல்லும் வரு மிடம் கூறுகின்றது. (இ-ள்) அந்திலாங்கு - அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டு இடைச் சொல்லும், அசைநிலை - அசைநிலைப் பொருண்மைக் கண்ணும், இடப்பொருளவ்வே - இடப்பொருண்மைக்கண்ணும் வரும் என்றவாறு. உ-ம்: “அந்திற், கழலினன் கச்சினன்” (அகம்.76) என்பது அசைநிலை. “வருமோ சேயிழை யந்திற், காழுநற் காணி' (குறு.293) என்பது அவ்விடத்தென வந்து இடப்பொருட்டு “ஆங்கத், திறனல்ல யங்கழற யாரை நகுமிம், மகனல்லான் பெற்றமகன்” (கலி.86) என்பது அசைநிலை. “ஆங்காங் காயினுங் காண்டக” என்பது இடம். (18) அம்ம என்னும் இடைச்சொல் 437. அம்ம உரையசை கேண்மினென் றாகும். சூ-ம், அம்மவென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) அம்ம - அம்மவென்று சொல்லப்படும் இடைச் சொல், உரை யசை - உரையசைக்கண்ணது ஆயினும், கேண்மினென்றாகும் - கேண் மின் என்று முன்னிலையேவற் பொருட்கண்ணதாயும் வரும் என்ற வாறு. உ-ம்: "பயனின்று மன்றம்ம காமம்” (கலி.142) என்பது அசைநிலை. "அம்ம வாழி தோழி” (நற்.158, குறு.104; ஐங் 31-40) எனக் கேளென்னும் பொருட்கண் வந்தது. (19) மா என்னும் இடைச்சொல் 438, மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். சூ-ம், மாவென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) மாவென் கிளவி - மாவென்று சொல்லப்படும் இடைச்சொல், வியங்கோ ளசைச் சொல் - வியங்கோட்கண் அசைச்சொல்லாய் வரும் என்றவாறு.
260 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்த்தே என வரும் . ( 17 ) அந்தில் ஆங்கு என்னும் இடைச்சொற்கள் 436. அந்திலாங் கசைநிலை யிடப்பொரு எவ்வே . சூ - ம் அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டு இடைச்சொல்லும் வரு மிடம் கூறுகின்றது . ( - ள் ) அந்திலாங்கு - அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டு இடைச் சொல்லும் அசைநிலை - அசைநிலைப் பொருண்மைக் கண்ணும் இடப்பொருளவ்வே - இடப்பொருண்மைக்கண்ணும் வரும் என்றவாறு . - ம் : அந்திற் கழலினன் கச்சினன் ( அகம் .76 ) என்பது அசைநிலை . வருமோ சேயிழை யந்திற் காழுநற் காணி ' ( குறு .293 ) என்பது அவ்விடத்தென வந்து இடப்பொருட்டு ஆங்கத் திறனல்ல யங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்றமகன் ( கலி .86 ) என்பது அசைநிலை . ஆங்காங் காயினுங் காண்டக என்பது இடம் . ( 18 ) அம்ம என்னும் இடைச்சொல் 437. அம்ம உரையசை கேண்மினென் றாகும் . சூ - ம் அம்மவென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) அம்ம - அம்மவென்று சொல்லப்படும் இடைச் சொல் உரை யசை - உரையசைக்கண்ணது ஆயினும் கேண்மினென்றாகும் - கேண் மின் என்று முன்னிலையேவற் பொருட்கண்ணதாயும் வரும் என்ற வாறு . - ம் : பயனின்று மன்றம்ம காமம் ( கலி .142 ) என்பது அசைநிலை . அம்ம வாழி தோழி ( நற் .158 குறு .104 ; ஐங் 31-40 ) எனக் கேளென்னும் பொருட்கண் வந்தது . ( 19 ) மா என்னும் இடைச்சொல் 438 மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல் . சூ - ம் மாவென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) மாவென் கிளவி - மாவென்று சொல்லப்படும் இடைச்சொல் வியங்கோ ளசைச் சொல் - வியங்கோட்கண் அசைச்சொல்லாய் வரும் என்றவாறு .