நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 25 கலை வினோதன் - அரிய கலைநூல்களிலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையான், அமரா பரணன் - பெரும் போரினையே புனைகலனாக உடையானென்னும் அழகமை பேரினை உடையான், மொழிந்தனனாக - சொன்னானாக, முன்னோர் நூலின் வழியே - பழை யோர் சொன்ன நூல் களின் வழியே, நன்னூற் பெயரின் வகுத்தனன் - நன்னூலென்னும் பெரிய பெயரினாலே செய்தனன் அவன் யாரோ வென்னில், பொன்மதிற் சனகைச் - பொன் மதில் புடைசூழ்ந்த சனகா புரத்து, சன்மதி முனியருள் - சன்மதியென்னும் நன்முனி அளித்த, பன்னருஞ் சிறப்பிற் - சொல்லுதற்கரிதாகிய பெருந்தன்மையினை யுடைய, பவணந்தியென்னு நாமத்து - பவணந்தியென்னும் பெயரினை யுடைய, இருந்தவத்தோனே - பெரிய தவத்தினை உடையவனாம் என்றவாறு. (1) பாயிரத்தின் பெயர்கள் 2. முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் (இ-ள்) முகவுரை - முகமாய் இருத்தலான் முகவுரை என்றும், பதி கம் - பல வகைப் பொருளையும் கூட்டிச் சொல்லுதலாற் பதிகம் என் றும், அணிந்துரை - நூற்கு இன்றியமையாத அலங்காரமாய் இருத்த லின் அணிந்துரை என்றும், நூன்முகம் - நூல் இலக்கணத்தைத் தோற் றுவித்தலால் நூன்முகம் என்றும், புறவுரை - நூற்குப் புறமாகிய இலக்கணத்தைத் தந்துரைத்தலாற் புறவுரை என்றும், தந்துரை - நூற்குப் புறமாகிய இலக்கணத்தைத் தந்துரைத் தலால் தந்துரை என்றும், நூற்கு முகமாய் இருத்தலின் நூலுரை என்றுமாம், புனைந் துரை - நூற்களாகியதும் ஆபரணமுமாய் இருத்தலாற் புனைந்துரை என்றுமாகி, பாயிரம் இவையனைத்தும் பாயிரத்துக்குள் காரணப் பெயர் என்றவாறு. (2) பாயிரத்தின் வகை 3. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே சூ-ம், அப்பாயிரம் இத்துணைப் பகுதியாமெனக் கூறுகின்றது (இ-ள்) பாயிரம் - மேற்கூறிய பாயிரம், பொதுச் சிறப்பென - பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமென, இரு பாற்றே - இரு வகைப்படும் என்றவாறு. (அரும்பதவுரை) பொதுப் பாயிரமாவது எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படுவது, சிறப்புப் பாயிரமாவது ஒரு நூன் முகத்து உரைக்கப்படுமெனக் கொள்க. (3)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 25 கலை வினோதன் - அரிய கலைநூல்களிலே பொழுதுபோக்கும் விளையாட்டாக உடையான் அமரா பரணன் - பெரும் போரினையே புனைகலனாக உடையானென்னும் அழகமை பேரினை உடையான் மொழிந்தனனாக - சொன்னானாக முன்னோர் நூலின் வழியே - பழை யோர் சொன்ன நூல் களின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் - நன்னூலென்னும் பெரிய பெயரினாலே செய்தனன் அவன் யாரோ வென்னில் பொன்மதிற் சனகைச் - பொன் மதில் புடைசூழ்ந்த சனகா புரத்து சன்மதி முனியருள் - சன்மதியென்னும் நன்முனி அளித்த பன்னருஞ் சிறப்பிற் - சொல்லுதற்கரிதாகிய பெருந்தன்மையினை யுடைய பவணந்தியென்னு நாமத்து - பவணந்தியென்னும் பெயரினை யுடைய இருந்தவத்தோனே - பெரிய தவத்தினை உடையவனாம் என்றவாறு . ( 1 ) பாயிரத்தின் பெயர்கள் 2 . முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் ( - ள் ) முகவுரை - முகமாய் இருத்தலான் முகவுரை என்றும் பதி கம் - பல வகைப் பொருளையும் கூட்டிச் சொல்லுதலாற் பதிகம் என் றும் அணிந்துரை - நூற்கு இன்றியமையாத அலங்காரமாய் இருத்த லின் அணிந்துரை என்றும் நூன்முகம் - நூல் இலக்கணத்தைத் தோற் றுவித்தலால் நூன்முகம் என்றும் புறவுரை - நூற்குப் புறமாகிய இலக்கணத்தைத் தந்துரைத்தலாற் புறவுரை என்றும் தந்துரை - நூற்குப் புறமாகிய இலக்கணத்தைத் தந்துரைத் தலால் தந்துரை என்றும் நூற்கு முகமாய் இருத்தலின் நூலுரை என்றுமாம் புனைந் துரை - நூற்களாகியதும் ஆபரணமுமாய் இருத்தலாற் புனைந்துரை என்றுமாகி பாயிரம் இவையனைத்தும் பாயிரத்துக்குள் காரணப் பெயர் என்றவாறு . ( 2 ) பாயிரத்தின் வகை 3. பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே சூ - ம் அப்பாயிரம் இத்துணைப் பகுதியாமெனக் கூறுகின்றது ( - ள் ) பாயிரம் - மேற்கூறிய பாயிரம் பொதுச் சிறப்பென - பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமென இரு பாற்றே - இரு வகைப்படும் என்றவாறு . ( அரும்பதவுரை ) பொதுப் பாயிரமாவது எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படுவது சிறப்புப் பாயிரமாவது ஒரு நூன் முகத்து உரைக்கப்படுமெனக் கொள்க . ( 3 )