நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

232 சொல்லதிகாரம் - பொதுவியல் வென்றல், நெருப்புத் தகதகவென்றல், வாயு கலகலவென்றல், ஆகாயங் கங்கமென்றல், “வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும், பச்சோலைக் கில்லை யொலி” (நாலடி.256) “இரட்டைக் கிளவி” என்றமையால் இரண்டின் இறவா என்க. (45) 396. ஒருபொருட் பலபெயர் பிரிவில வரையார். சூ-ம், ஒரு பொருட்கண் வரும் பலபெயர்க்கு ஆவதோர் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) ஒருபொருட் பலபெயர் - ஒரு பொருளைக் கருதி வரும் பல பெயர், பிரிவில - அப்பொருளை நீங்காவாயின; வரையார் - ஒரு பொருட்குப் பல பெயர் வந்ததென்று கடியார் புலவர் என்றவாறு. உ-ம்: “வையைக் கிழவன் வயங்குதார் மார்பன்” எனப் பிரி வின்றி இரு பெயர் வந்தது. அரசனைக் காணச் செல்லு ஐம்புல யானையே வாசல் மந்திரியொடு வாய்மை கூற நட என இவை ஒரு பொருட் பல பெயர் பிரிக்கப்படுதலிற் கடிவர் என்க. (46) 397. ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா. சூ-ம், ஒரு பொருட்படும் பல பெயர் வழுவன்று என்பது கூறு கின்றது. (இ-ள்) ஒருபொருட் பன்மொழி - ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள், சிறப்பினின் - அப்பொருளைச் சிறப்பித்து வருதலான், வழா - வழுவென்று நீக்கப்படா என்றவாறு. உ-ம்: அவன்தான், அதுதான், மீமிசை, அகன்மார்பன், உயர்ந் தோங்கும் பெருவரை, மழவிளநரை, நரையிளங்கன்று, “குழிந் தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி” (நாலடி.49), கேழற்பன்றி, வேழக்கரும்பு, “நனிபெரிதும் பெறக்கண்ள ளென்றிவளை வெஃகண்மின்” (நாலடி.17) என வரும். (47) மரபு வழுவாமற் காத்தல் 398. இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்பொருள் வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும். சூ-ம், மரபு வழுவற்கவெனக் கூறுகின்றது. (இ-ள்) இனைத்தென் றறிபொருள் - இத்துணைத்தென்று வரை யறுத்து உணரப்படும் பொருளாதி எப்பொருள்களும், உலகினிலாப்
232 சொல்லதிகாரம் - பொதுவியல் வென்றல் நெருப்புத் தகதகவென்றல் வாயு கலகலவென்றல் ஆகாயங் கங்கமென்றல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி ( நாலடி .256 ) இரட்டைக் கிளவி என்றமையால் இரண்டின் இறவா என்க . ( 45 ) 396. ஒருபொருட் பலபெயர் பிரிவில வரையார் . சூ - ம் ஒரு பொருட்கண் வரும் பலபெயர்க்கு ஆவதோர் இயல்பு கூறு கின்றது . ( - ள் ) ஒருபொருட் பலபெயர் - ஒரு பொருளைக் கருதி வரும் பல பெயர் பிரிவில - அப்பொருளை நீங்காவாயின ; வரையார் - ஒரு பொருட்குப் பல பெயர் வந்ததென்று கடியார் புலவர் என்றவாறு . - ம் : வையைக் கிழவன் வயங்குதார் மார்பன் எனப் பிரி வின்றி இரு பெயர் வந்தது . அரசனைக் காணச் செல்லு ஐம்புல யானையே வாசல் மந்திரியொடு வாய்மை கூற நட என இவை ஒரு பொருட் பல பெயர் பிரிக்கப்படுதலிற் கடிவர் என்க . ( 46 ) 397. ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா . சூ - ம் ஒரு பொருட்படும் பல பெயர் வழுவன்று என்பது கூறு கின்றது . ( - ள் ) ஒருபொருட் பன்மொழி - ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொற்கள் சிறப்பினின் - அப்பொருளைச் சிறப்பித்து வருதலான் வழா - வழுவென்று நீக்கப்படா என்றவாறு . - ம் : அவன்தான் அதுதான் மீமிசை அகன்மார்பன் உயர்ந் தோங்கும் பெருவரை மழவிளநரை நரையிளங்கன்று குழிந் தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி ( நாலடி .49 ) கேழற்பன்றி வேழக்கரும்பு நனிபெரிதும் பெறக்கண்ள ளென்றிவளை வெஃகண்மின் ( நாலடி .17 ) என வரும் . ( 47 ) மரபு வழுவாமற் காத்தல் 398. இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்பொருள் வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும் . சூ - ம் மரபு வழுவற்கவெனக் கூறுகின்றது . ( - ள் ) இனைத்தென் றறிபொருள் - இத்துணைத்தென்று வரை யறுத்து உணரப்படும் பொருளாதி எப்பொருள்களும் உலகினிலாப்