நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 223 யடுபோர்ச் சோழர்” (அகம்.96), "ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்” (மலைபடு.218), யான் எம்மூர் புகுவன் எனவும் அவருள் அவனல்லன் மருளா எனவும் உயர்திணை ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கின. நான் சாத்தன், நாங்கள் வெள்ளாளர், வருவேன் அல்லன் எனத் தன்மை படர்க்கை தழீஇயின்; முன்னிலை படர்க்கை தழீஇயயிற்று. நீயோ அவனோ யாரிது செய்தார்? யானோ நீனோ யாரிது செய் தார்? யானோ நீயோ அவனோ யாரிது செய்தார் என ஓரிடம் பலவிடம் தழுவின. பிறவுமன்ன. (29) இடம் வழுமாற் காத்தல் 380. தரல்வரல் கொடை செலல் சாரும் படர்க்கை எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும். சூ-ம், இடம் வழுவற்கவென வழுக்காத்தல் கூறுகின்றது. (இ-ள்) தரல்வரல் கொடைசெலல் - தரல் வரல் கொடை செலல் என்னும் இந்நான்கு சொல்லும், சாரும் படர்க்கை - படர்க்கை இடத் துக்கு உரித்தாம்; எழுவா மிரண்டும் - அந்நான்கு சொல்லின் எழுவா யில் நின்ற தரல் வரல் என்னும் இரண்டு சொல்லும், எஞ்சிய வேற்கும் - ஒழிந்த தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும் ஏற்கும் என்ற வாறு. உ.ம்: அவர்க்கு ஆடை சென்றது. செலல் எனப் படர்க்கைப் பெயர் ஏற்று வந்தது. எனக்கு ஆடை தந்தார் - தரல்; எனக்கு ஆடை வந்தது - வரல்; நினக்கு ஆடை தந்தார், நினக்கு ஆடை வந்தது எனத் தன்மை முன் னிலை ஏற்றன. எனக்கு ஆடை கொடுத்தார், எனக்கு ஆடை சென்றது, நினக்கு ஆடை கொடுத்தார், நினக்கு ஆடை செலுத்தினார் எனவும் வருமா லோவெனின் அவை பாராமுகமாகக் கருதி வரும் என்க. அபிமுக மாகக் கருதி வாரா என்க. (30) காலக் கூறுபா 381. இறப்பெதிர்வு நிகழ்பெனக் கால மூன்றே. சூ-ம், காலவழு அமைப்பான் எடுத்துக்கொண்டார்; இது காலக் கூறு பாடு கூறுகின்றது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 223 யடுபோர்ச் சோழர் ( அகம் .96 ) ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின் ( மலைபடு .218 ) யான் எம்மூர் புகுவன் எனவும் அவருள் அவனல்லன் மருளா எனவும் உயர்திணை ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கின . நான் சாத்தன் நாங்கள் வெள்ளாளர் வருவேன் அல்லன் எனத் தன்மை படர்க்கை தழீஇயின் ; முன்னிலை படர்க்கை தழீஇயயிற்று . நீயோ அவனோ யாரிது செய்தார் ? யானோ நீனோ யாரிது செய் தார் ? யானோ நீயோ அவனோ யாரிது செய்தார் என ஓரிடம் பலவிடம் தழுவின . பிறவுமன்ன . ( 29 ) இடம் வழுமாற் காத்தல் 380. தரல்வரல் கொடை செலல் சாரும் படர்க்கை எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும் . சூ - ம் இடம் வழுவற்கவென வழுக்காத்தல் கூறுகின்றது . ( - ள் ) தரல்வரல் கொடைசெலல் - தரல் வரல் கொடை செலல் என்னும் இந்நான்கு சொல்லும் சாரும் படர்க்கை - படர்க்கை இடத் துக்கு உரித்தாம் ; எழுவா மிரண்டும் - அந்நான்கு சொல்லின் எழுவா யில் நின்ற தரல் வரல் என்னும் இரண்டு சொல்லும் எஞ்சிய வேற்கும் - ஒழிந்த தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும் ஏற்கும் என்ற வாறு . உ.ம் : அவர்க்கு ஆடை சென்றது . செலல் எனப் படர்க்கைப் பெயர் ஏற்று வந்தது . எனக்கு ஆடை தந்தார் - தரல் ; எனக்கு ஆடை வந்தது - வரல் ; நினக்கு ஆடை தந்தார் நினக்கு ஆடை வந்தது எனத் தன்மை முன் னிலை ஏற்றன . எனக்கு ஆடை கொடுத்தார் எனக்கு ஆடை சென்றது நினக்கு ஆடை கொடுத்தார் நினக்கு ஆடை செலுத்தினார் எனவும் வருமா லோவெனின் அவை பாராமுகமாகக் கருதி வரும் என்க . அபிமுக மாகக் கருதி வாரா என்க . ( 30 ) காலக் கூறுபா 381. இறப்பெதிர்வு நிகழ்பெனக் கால மூன்றே . சூ - ம் காலவழு அமைப்பான் எடுத்துக்கொண்டார் ; இது காலக் கூறு பாடு கூறுகின்றது .