நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 215 பொற்றொடி, துடியிடை, மொழிமறை என்பன. அவற்றை யுரையாரையும் ஒப்பாரையும் குறித்தமையிற் புறமொழி சிறந் தன. பிறவுமன்ன. (19) இடத்தொகையும் பெயர்த்தொகையும் 370. வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும் மெல்லொற்று வரிளே பெயர்த்தொகை யாகும். சூ-ம், அத்தொகைநிலைத் தொடர்மொழிக்கு ஏற்பதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) வல்லொற்று வரினே - தொகைச் சொற்களுள் வல்லொற்று வந்தால், இடத்தொகை யாகும் - பெயரொடு இடம் தொக்க தொகை நிலைத் தொடர்மொழியாம்; மெல்லொற்று வரினே - அத் தொகைச் சொற்களின் மெல்லொற்று இடையே வந்தால், பெயர்த்தொகை யாகும் - பெயரொடு பெயர் தொக்க தொகை நிலைத் தொடர்மொழி யாம் என்றவாறு. உ-ம்: வடுகக்கண்ணன் என இடையே வல்லொற்று வந்தால் வடுகநாட்டில் பிறந்த கண்ணன் என்றும், வடுகங்கண்ணன் என இடையே மெல்லொற்று வந்தால் வடுகற்கு மகனாகிய கண் ணன் என்றும் பொருளாம். சோனகக்கொற்றன், சோனகங்கொற்றன்; யாவுகச் சாத்தன், யாவுகஞ்சாத்தன்; கொங்கணத்தேவன், கொங்கணந்தேவன்; ஈழப் பூதன், ஈழம்பூதன் என இடந்தொக்கதும் பெயர் தொக்கதுமாய்க் கொள்க. இவற்றை உருபும் பொருளும் உடன்றொக்க தொகை எனக் காண்க. இவை எழுத்து முடிபேனும் தொகை அதிகாரப்பட்டமையால் ஈண்டே வைத்தார் என்க. (20) உயர்திணை உம்மைத்தொகை 371. உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே. சூ-ம், உயர்திணையிடத்து வந்த உம்மைத்தொகைக்கு ஏற்ப தோர் இயல்பு கூறிற்று. (இ-ள்) உயர்திணை யும்மைத் தொகை - உயர்திணைப் பெயரிடத்து வந்த உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழி, பல ரீறே பலரைக் காட்டும் ரகரவொற்றாக நிற்கும் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 215 பொற்றொடி துடியிடை மொழிமறை என்பன . அவற்றை யுரையாரையும் ஒப்பாரையும் குறித்தமையிற் புறமொழி சிறந் தன . பிறவுமன்ன . ( 19 ) இடத்தொகையும் பெயர்த்தொகையும் 370. வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும் மெல்லொற்று வரிளே பெயர்த்தொகை யாகும் . சூ - ம் அத்தொகைநிலைத் தொடர்மொழிக்கு ஏற்பதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) வல்லொற்று வரினே - தொகைச் சொற்களுள் வல்லொற்று வந்தால் இடத்தொகை யாகும் - பெயரொடு இடம் தொக்க தொகை நிலைத் தொடர்மொழியாம் ; மெல்லொற்று வரினே - அத் தொகைச் சொற்களின் மெல்லொற்று இடையே வந்தால் பெயர்த்தொகை யாகும் - பெயரொடு பெயர் தொக்க தொகை நிலைத் தொடர்மொழி யாம் என்றவாறு . - ம் : வடுகக்கண்ணன் என இடையே வல்லொற்று வந்தால் வடுகநாட்டில் பிறந்த கண்ணன் என்றும் வடுகங்கண்ணன் என இடையே மெல்லொற்று வந்தால் வடுகற்கு மகனாகிய கண் ணன் என்றும் பொருளாம் . சோனகக்கொற்றன் சோனகங்கொற்றன் ; யாவுகச் சாத்தன் யாவுகஞ்சாத்தன் ; கொங்கணத்தேவன் கொங்கணந்தேவன் ; ஈழப் பூதன் ஈழம்பூதன் என இடந்தொக்கதும் பெயர் தொக்கதுமாய்க் கொள்க . இவற்றை உருபும் பொருளும் உடன்றொக்க தொகை எனக் காண்க . இவை எழுத்து முடிபேனும் தொகை அதிகாரப்பட்டமையால் ஈண்டே வைத்தார் என்க . ( 20 ) உயர்திணை உம்மைத்தொகை 371. உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே . சூ - ம் உயர்திணையிடத்து வந்த உம்மைத்தொகைக்கு ஏற்ப தோர் இயல்பு கூறிற்று . ( - ள் ) உயர்திணை யும்மைத் தொகை - உயர்திணைப் பெயரிடத்து வந்த உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழி பல ரீறே பலரைக் காட்டும் ரகரவொற்றாக நிற்கும் என்றவாறு .