நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

212 சொல்லதிகாரம் - பொதுவியல் (இ-ள்) பண்பை விளக்கு மொழிதொக்கனவும் - குணத்தை விளக் கிக் காட்டுதற்கான மொழி தொக்கனவும், ஒருபொருட் கிருபெயர் வந்தவும் - ஒரு பொருட்குரிய பெயர் ஒருங்கு வருவனவும், குணத் தொகை - பண்புத்தொகைநிலைத் தொடர்மொழியாம் என்றவாறு. உ-ம்: கருங்காக்கை, தண்ணீர், நறுமலர், தீம்பால், குறுங் கொற்றான், வட்டக்கல், உள்பொருள், இல்குணம் எனவும் கேழற்பன்றி, வேழக்கரும்பு, அளகைநகர், ஆனித்திங்கள், “அகரமுதல்” (தொல்.எழு.1), “சகரக்கிளவி” (தொல்.எழு. 62) எனவும் வரும். இவை விரிவுழி இரு திணைக்கும் ஐம்பாற்கும் பொதுவாகப் பெயரெச்ச வாய்பாடாய் விரியும். கருமையாகிய காக்கை, தண்மையாகிய நீர், நறிய மலர், தீவிய பால், குறிய கொற்றன், வட்டமாய கல், உளவாய பொருள், இலதாய குணம் எனவும் கேழலாகிய பன்றி, வேழமாகிய கரும்பு, அளகையாகிய நகர், ஆனியாகிய திங்கள், அகரமாகிய முதல், சகரமாகிய கிளவி எனவும் ஆய, ஆன ஆகிய பிறவும் விரியும். இவை பண்பை விளக்கும் மொழியாம். கேழற்பன்றி, வேழக்கரும்பு இருபெயரொட்டுப் பண்புத் தொகை இவை சாதிப்பண்புடைமையின் ஈண்டு வேண்டினார் என்க. “ஆதிபகவன்” (குறள்.1) என்பது இறுதிப் பெயரொட்டுப் பண்புத் தொகையாம். இவ்வாறன்றி ஒத்த பண்புபற்றி ஒற்றுமை குறித்து வரும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் உள. அவை கைத் தாமரை, கண்வேல், புருவச்சிலை என வரும். (14) உவமத் தொகை 365. உவம வுருபில துவமத் தொகையே. சூ-ம், முறையே உவமைத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) உவம வுருபிலது - பண்பு பயன் வினை என்பன பற்றி வரும் உவமவுருபு தோன்றாதது, உவமத் தொகையே - உவமத் தொகை நிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு. உ-ம்: பான்மொழி, குவளைக்கண், துடியிடை எனவும் மாரி வண்கை எனவும், சீயகங்கன் (நன்.பாயிரம்), புலிசாத்தன் என வும் பொற் றாமரை, குமிண்மூக்கு, கார்குழல் எனவும் வரும். இவை விரிவுழி பால் போலும் மொழி, குவளை போலும் கண் என விரியும். பாலைப் போலும் மொழி என உருபுத் தொகை யாய்க் கொள்ளற்க. (15)
212 சொல்லதிகாரம் - பொதுவியல் ( - ள் ) பண்பை விளக்கு மொழிதொக்கனவும் - குணத்தை விளக் கிக் காட்டுதற்கான மொழி தொக்கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவும் - ஒரு பொருட்குரிய பெயர் ஒருங்கு வருவனவும் குணத் தொகை - பண்புத்தொகைநிலைத் தொடர்மொழியாம் என்றவாறு . - ம் : கருங்காக்கை தண்ணீர் நறுமலர் தீம்பால் குறுங் கொற்றான் வட்டக்கல் உள்பொருள் இல்குணம் எனவும் கேழற்பன்றி வேழக்கரும்பு அளகைநகர் ஆனித்திங்கள் அகரமுதல் ( தொல்.எழு .1 ) சகரக்கிளவி ( தொல்.எழு . 62 ) எனவும் வரும் . இவை விரிவுழி இரு திணைக்கும் ஐம்பாற்கும் பொதுவாகப் பெயரெச்ச வாய்பாடாய் விரியும் . கருமையாகிய காக்கை தண்மையாகிய நீர் நறிய மலர் தீவிய பால் குறிய கொற்றன் வட்டமாய கல் உளவாய பொருள் இலதாய குணம் எனவும் கேழலாகிய பன்றி வேழமாகிய கரும்பு அளகையாகிய நகர் ஆனியாகிய திங்கள் அகரமாகிய முதல் சகரமாகிய கிளவி எனவும் ஆய ஆன ஆகிய பிறவும் விரியும் . இவை பண்பை விளக்கும் மொழியாம் . கேழற்பன்றி வேழக்கரும்பு இருபெயரொட்டுப் பண்புத் தொகை இவை சாதிப்பண்புடைமையின் ஈண்டு வேண்டினார் என்க . ஆதிபகவன் ( குறள் .1 ) என்பது இறுதிப் பெயரொட்டுப் பண்புத் தொகையாம் . இவ்வாறன்றி ஒத்த பண்புபற்றி ஒற்றுமை குறித்து வரும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் உள . அவை கைத் தாமரை கண்வேல் புருவச்சிலை என வரும் . ( 14 ) உவமத் தொகை 365. உவம வுருபில துவமத் தொகையே . சூ - ம் முறையே உவமைத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) உவம வுருபிலது - பண்பு பயன் வினை என்பன பற்றி வரும் உவமவுருபு தோன்றாதது உவமத் தொகையே - உவமத் தொகை நிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு . - ம் : பான்மொழி குவளைக்கண் துடியிடை எனவும் மாரி வண்கை எனவும் சீயகங்கன் ( நன்.பாயிரம் ) புலிசாத்தன் என வும் பொற் றாமரை குமிண்மூக்கு கார்குழல் எனவும் வரும் . இவை விரிவுழி பால் போலும் மொழி குவளை போலும் கண் என விரியும் . பாலைப் போலும் மொழி என உருபுத் தொகை யாய்க் கொள்ளற்க . ( 15 )