நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

206 சொல்லதிகாரம் - பொதுவியல் குறைத்தான் மரத்தை, வந்தான் சாத்தனோடு, கொடுத்தான் சாத்தற்கு, நீங்கினான் சாத்தனின், ஆடை சாத்தனது, சென்றான் சாத்தன்கண், வா சாத்தா என முதலினும் வந்தன. உண்டான் சாத்தன், உண்டாள் சாத்தி, சாத்தன் உண்டான், சாத்தி உண்டாள் என முதலினும் ஈற்றினும் முற்று வந்தது என்க. உண்டு வந்தான், உண்டு வந்தாள், வந்தான் உண்டு, வந்தாள் உண்டு என வினையெச்சம் முதலினும் ஈற்றினும் வந்தன. பெயரெச்சம் ஈற்றிலன்றி முதலின் வாராவெனக் கடாவிடை காட்டி மறுக்க. (6) 357. ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே. சூ-ம், பெயர்ச்சொல் வினைச்சொற்கட்கு எய்தியதோர் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) ஒருமொழி - ஒரு பெயர்ச்சொல்லும் ஒரு வினைச்சொல்லும் நின்றே, ஒழிதன் இனம் - ஒழிந்த தன்னினங்களையும், கொளற் குரித்தே - தழுவுதற்கு உரித்தாம் என்றவாறு. உ-ம்: “தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடி” (நாலடி. 43), நஞ்சுண்டான் சாவான், பார்ப்பான் கள்ளுண்ணான் என நின்ற ஒரு மொழிக்கு இனமான தீம்பூ, இலவங்கம், சாதி முதலானவும் தின்று எனவும் நஞ்சுண்டாள் சாவாள், பார்ப்பனி கள்ளுண்ணாள் எனவும் ஒழிந்த பாலினும் வந்து தமக்கு இனமானவற்றையும் தழுவின. (7) 358. பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே. சூ-ம், பொதுப்பெயர்க்கும் பொதுவினைக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) பொதுப்பெயர் வினைகளின் - திணை பால் இடங்கட்குப் பொதுவாய் நின்ற பெயர் வினைகளுடைய, பொதுமை நீக்கும் - பொதுமையை நீக்கி ஒன்றற்கு உரித்தாக்கும், மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே - அவற்றின்மேல் வரும் பொதுவல்லாத சிறப்புப் பெயரும் சிறப்பு வினையும் என்றவாறு. உ-ம்: சாத்தன் இவன் மகன், சாத்தன் இதன் மகன்; முடவன் இவன் மகன், முடவன் இதன் மகன்; முடக்கொற்றன் இவன் மகன், முடக்கொற்றன் இதன் மகன்; தந்தை இவன், தந்தை இது எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரிமை செய்தன. யான் யாம் நீ நீர் முதலான இரு திணைப் பொதுப் பெயர்.
206 சொல்லதிகாரம் - பொதுவியல் குறைத்தான் மரத்தை வந்தான் சாத்தனோடு கொடுத்தான் சாத்தற்கு நீங்கினான் சாத்தனின் ஆடை சாத்தனது சென்றான் சாத்தன்கண் வா சாத்தா என முதலினும் வந்தன . உண்டான் சாத்தன் உண்டாள் சாத்தி சாத்தன் உண்டான் சாத்தி உண்டாள் என முதலினும் ஈற்றினும் முற்று வந்தது என்க . உண்டு வந்தான் உண்டு வந்தாள் வந்தான் உண்டு வந்தாள் உண்டு என வினையெச்சம் முதலினும் ஈற்றினும் வந்தன . பெயரெச்சம் ஈற்றிலன்றி முதலின் வாராவெனக் கடாவிடை காட்டி மறுக்க . ( 6 ) 357. ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே . சூ - ம் பெயர்ச்சொல் வினைச்சொற்கட்கு எய்தியதோர் இயல்பு கூறு கின்றது . ( - ள் ) ஒருமொழி - ஒரு பெயர்ச்சொல்லும் ஒரு வினைச்சொல்லும் நின்றே ஒழிதன் இனம் - ஒழிந்த தன்னினங்களையும் கொளற் குரித்தே - தழுவுதற்கு உரித்தாம் என்றவாறு . - ம் : தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடி ( நாலடி . 43 ) நஞ்சுண்டான் சாவான் பார்ப்பான் கள்ளுண்ணான் என நின்ற ஒரு மொழிக்கு இனமான தீம்பூ இலவங்கம் சாதி முதலானவும் தின்று எனவும் நஞ்சுண்டாள் சாவாள் பார்ப்பனி கள்ளுண்ணாள் எனவும் ஒழிந்த பாலினும் வந்து தமக்கு இனமானவற்றையும் தழுவின . ( 7 ) 358. பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே . சூ - ம் பொதுப்பெயர்க்கும் பொதுவினைக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) பொதுப்பெயர் வினைகளின் - திணை பால் இடங்கட்குப் பொதுவாய் நின்ற பெயர் வினைகளுடைய பொதுமை நீக்கும் - பொதுமையை நீக்கி ஒன்றற்கு உரித்தாக்கும் மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே - அவற்றின்மேல் வரும் பொதுவல்லாத சிறப்புப் பெயரும் சிறப்பு வினையும் என்றவாறு . - ம் : சாத்தன் இவன் மகன் சாத்தன் இதன் மகன் ; முடவன் இவன் மகன் முடவன் இதன் மகன் ; முடக்கொற்றன் இவன் மகன் முடக்கொற்றன் இதன் மகன் ; தந்தை இவன் தந்தை இது எனச் சிறப்புப் பெயர் ஒரு திணைக்கு உரிமை செய்தன . யான் யாம் நீ நீர் முதலான இரு திணைப் பொதுப் பெயர் .