நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 205 தெரிநிலை வினைப் பெயரெச்சங்களும் குறிப்பு வினையெச்சங் களும், கொள்ளும் பெயர்வினை மிடை - தாந்தாங் கொள்ளும் பெயர் வினைக்கு நடுவே, பிற வரலுமா மேற்பன - ஆண்டைக்கு ஏற்பனவான பிற சொற்களும் வரப்பெறும் என்றவாறு. உ-ம்: சாத்தன் இன்று பகல் வயிறார உண்டான், அறத்தை அழகு பெறச் செய்தான், வாளான் மருவாரை மாய வெட்டினான், தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப்பு எடுத்தான், மலை யினின்று உருண்டு புரண்டு வீழ்ந்தான், சாத்தனது மத்தகக் களிற்று யானை, ஊர்க்கண் உயர்ந்த ஒளி மணி மாடம், சாத்தா கூத்தற்குக் கூறை எடுத்துக் கொடு என வரும். “பாடினான் தேவகீதம் பண்ணினுக் கரசன்” (சீவக.2052), “அழுதான் மன னொந் துணங்கிழையே” என வரும். “இரங்கின நன்மை யுள்ள வென்றோழி” என வரும். பெரிய வெங்க ளருந்தவ முனிவர் என வரும். பிறந்து வெகுநாட் பூமியிலே யிருந்தான், “உப்பின்றிப் புற்கை யுண்கமா கொற்கை யோனே” என வினைப்புணர்ச்சி மினும் இடைப் பிறவரல் காண்க. "ஏற்பன” எனவே ஏலாதன வரப்பெறா என்பதாம். அவை வல்ல மெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்பதனுள் வல்லமெறிதல் பெருவழுதி மேற்றேயெனில் நல்லிளங் கோசர் தந்தை என்பதனை இடை நிறுவின் ஏலாதாம் வல்லமெறிந்த மல்லல் யானைப் பெருவழுதி நல்லிளங் கோசர் தந்தையெனின் ஏற்பதாம். பிறவுமன்ன. (5) முடிக்குஞ்சொல் நிற்குமிடம் 356. எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும். சூ-ம், உருபும் வினையும் கொண்டு முடியும் பெயரும் வினையும் நிற்கும் இடம் கூறுகின்றது. (இ-ள்) எச்சப் பெயர்வினை - உருபு, முற்று, பெயரெச்சம், வினை யெச்சம் என்பனவற்றிற்கு எச்சமாய் வரும் பெயரும் வினையும், எய் தும் ஈற்றினும் - அவற்றின் ஈற்றின்கண்ணே வந்து நிற்கும் என்ற வாறு. உம்மையால் முதலினுறழ வருமென்க. உ-ம்: சாத்தன் வந்தான், மரத்தைக் குறைத்தான், சாத்தனோடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் நீங்கினான், சாத்தனது ஆடை, சாத்தற்கட் சென்றான், சாத்தா வா என உருபு கொள்ளும் பெயர் வினைகள் ஈற்றில் வந்தன. வந்தாள் சாத்தன்,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 205 தெரிநிலை வினைப் பெயரெச்சங்களும் குறிப்பு வினையெச்சங் களும் கொள்ளும் பெயர்வினை மிடை - தாந்தாங் கொள்ளும் பெயர் வினைக்கு நடுவே பிற வரலுமா மேற்பன - ஆண்டைக்கு ஏற்பனவான பிற சொற்களும் வரப்பெறும் என்றவாறு . - ம் : சாத்தன் இன்று பகல் வயிறார உண்டான் அறத்தை அழகு பெறச் செய்தான் வாளான் மருவாரை மாய வெட்டினான் தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப்பு எடுத்தான் மலை யினின்று உருண்டு புரண்டு வீழ்ந்தான் சாத்தனது மத்தகக் களிற்று யானை ஊர்க்கண் உயர்ந்த ஒளி மணி மாடம் சாத்தா கூத்தற்குக் கூறை எடுத்துக் கொடு என வரும் . பாடினான் தேவகீதம் பண்ணினுக் கரசன் ( சீவக .2052 ) அழுதான் மன னொந் துணங்கிழையே என வரும் . இரங்கின நன்மை யுள்ள வென்றோழி என வரும் . பெரிய வெங்க ளருந்தவ முனிவர் என வரும் . பிறந்து வெகுநாட் பூமியிலே யிருந்தான் உப்பின்றிப் புற்கை யுண்கமா கொற்கை யோனே என வினைப்புணர்ச்சி மினும் இடைப் பிறவரல் காண்க . ஏற்பன எனவே ஏலாதன வரப்பெறா என்பதாம் . அவை வல்ல மெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்பதனுள் வல்லமெறிதல் பெருவழுதி மேற்றேயெனில் நல்லிளங் கோசர் தந்தை என்பதனை இடை நிறுவின் ஏலாதாம் வல்லமெறிந்த மல்லல் யானைப் பெருவழுதி நல்லிளங் கோசர் தந்தையெனின் ஏற்பதாம் . பிறவுமன்ன . ( 5 ) முடிக்குஞ்சொல் நிற்குமிடம் 356. எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும் . சூ - ம் உருபும் வினையும் கொண்டு முடியும் பெயரும் வினையும் நிற்கும் இடம் கூறுகின்றது . ( - ள் ) எச்சப் பெயர்வினை - உருபு முற்று பெயரெச்சம் வினை யெச்சம் என்பனவற்றிற்கு எச்சமாய் வரும் பெயரும் வினையும் எய் தும் ஈற்றினும் - அவற்றின் ஈற்றின்கண்ணே வந்து நிற்கும் என்ற வாறு . உம்மையால் முதலினுறழ வருமென்க . - ம் : சாத்தன் வந்தான் மரத்தைக் குறைத்தான் சாத்தனோடு வந்தான் சாத்தற்குக் கொடுத்தான் சாத்தனின் நீங்கினான் சாத்தனது ஆடை சாத்தற்கட் சென்றான் சாத்தா வா என உருபு கொள்ளும் பெயர் வினைகள் ஈற்றில் வந்தன . வந்தாள் சாத்தன்