நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

மூன்றாவது பொதுவியல் கடவுள் துணை பெயர் வினைகளின் இலக்கணம் 351. இருதிணை. யாண்பெணு ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே. சூ -ம், பொதுவாகிய பெயர்க்கும் பொதுவாகிய வினைக்கும் எய்திய தோர் இலக்கணம் கூறியது. (இ-ள்) இரு திணை - உயர்திணைமிடத்தும் அஃறிணையிடத்தும், ஆண் பெண்ணுள் - ஆண்மைப் பொருளினும் பெண்மைப் பொருளி னும், ஒன்றனை யொழிக்கும் - ஒன்றனையொன்று ஒழிந்து நிற்கும், பெயரும் வினையும் - அவ்விரு பாற்கும் பொதுவான பெயர்ச்சொல் லும் வினைச்சொல்லும், குறிப்பினானே - சொல்லுவான் குறிப்பினால் என்றவாறு. உ-ம்: வடுகரசர் ஆயிரமக்களை உடையர் எனவும் இவை பத்து மானிடத்தின் முலைப்பால் எனவும் உயர்திணைப் பெண்ணொழி பொதுப் பெயரும் ஆணொழி பொதுப் பெயரும் வந்தன. அரசர் ஆயிரமக்களொடு தாவடி போயினார், இன்று இச்சேரியாரும் அச்சேரியாரும் பொருவார் எனவும் இவ்வூரார் எல்லாரும் தைந் நீராடின் ஆடுப எனவும் உயர்திணைப் பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தன. நம்மரசன் ஆயிரம் யானையை உடையன் எனவும் இவ்வூர் வணிகன் நூறு எருமை உடையன் எனவும் அஃறிணைப் பெண்ணொழி பெயரும் ஆணொழி பெயரும் வந்தன. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழுதன, இவ் வூர்ப் பெற்றமெல்லாம் கறக்கும் என அஃறிணைப் பெண் ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தன. (1) 352. பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளு ளூரித்தே.
மூன்றாவது பொதுவியல் கடவுள் துணை பெயர் வினைகளின் இலக்கணம் 351. இருதிணை . யாண்பெணு ளொன்றனை யொழிக்கும் பெயரும் வினையுங் குறிப்பி னானே . சூ -ம் பொதுவாகிய பெயர்க்கும் பொதுவாகிய வினைக்கும் எய்திய தோர் இலக்கணம் கூறியது . ( - ள் ) இரு திணை - உயர்திணைமிடத்தும் அஃறிணையிடத்தும் ஆண் பெண்ணுள் - ஆண்மைப் பொருளினும் பெண்மைப் பொருளி னும் ஒன்றனை யொழிக்கும் - ஒன்றனையொன்று ஒழிந்து நிற்கும் பெயரும் வினையும் - அவ்விரு பாற்கும் பொதுவான பெயர்ச்சொல் லும் வினைச்சொல்லும் குறிப்பினானே - சொல்லுவான் குறிப்பினால் என்றவாறு . - ம் : வடுகரசர் ஆயிரமக்களை உடையர் எனவும் இவை பத்து மானிடத்தின் முலைப்பால் எனவும் உயர்திணைப் பெண்ணொழி பொதுப் பெயரும் ஆணொழி பொதுப் பெயரும் வந்தன . அரசர் ஆயிரமக்களொடு தாவடி போயினார் இன்று இச்சேரியாரும் அச்சேரியாரும் பொருவார் எனவும் இவ்வூரார் எல்லாரும் தைந் நீராடின் ஆடுப எனவும் உயர்திணைப் பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தன . நம்மரசன் ஆயிரம் யானையை உடையன் எனவும் இவ்வூர் வணிகன் நூறு எருமை உடையன் எனவும் அஃறிணைப் பெண்ணொழி பெயரும் ஆணொழி பெயரும் வந்தன . இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழுதன இவ் வூர்ப் பெற்றமெல்லாம் கறக்கும் என அஃறிணைப் பெண் ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தன . ( 1 ) 352. பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ வாகலுஞ் செய்யுளு ளூரித்தே .