நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 191 (இள்) முன்னிலை முன்னர் - ஒருமை முன்னிலை மொழியிடத்து, ஈய மேயும் - ஈகாரமும் ஏகாரமும், அந்நிலை மரபின் - அவ்விடத்துத் தமக் கேற்ற, மெய்யூர்ந்து வருமே - ஒற்றெழுத்தைச் சேர்ந்து வருவனவும் சிலவுள என்றவாறு. உ-ம்: “சென்றீ பெருமாநிற் றகைக்குநர் யாரே” (அகம்.46), "அட்டிலோலை தொட்டனை நின்மே” (நற்.300) என வரும். இது புணர்ச்சி விதி அண்மையின் ஈண்டை வைத்தார் என்க. (17) முன்னிலைப் பன்மை வினைமுற்று 336. இர்ஈ ரீற்ற விரண்டு மிகுதிணைப் பன்மை முன்னிலை மின்னவற் றேவல். சூ-ம், விரவுத் திணை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது. (இ-ள்) இர்ஈரீற்ற விரண்டும் - இர்,ஈர் என்னும் இவ்விரண்டு விகுதி மினையும் ஈறாகவுடைய மொழிகள், இருதிணைப் பன்மை முன்னிலை - விரவுத்தினை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; மின்னவற்றேவல் - மின் விகுதியை ஈறாக வுடைய மொழிகள் விரவுத் திணை முன்னிலைப் பன்மையாய் ஏவற் பொருண்மையின் வரும் என்றவாறு. உ-ம்: உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர்; உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர்; உண்மின் என இம்மூவிகுதி சேர்ந்த விரவுத் திணை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினை முற்று. தாரினிர், தரையினிர், காரினிர், காலினிர், வலியினிர் எனவும் தாரினீர், தரையினீர், காரினீர், காலினீர், வலியினீர் எனவும் இவ்விரு விகுதி சேர்ந்த விரவுத் திணை முன்னிலைப் பன்மைக் குறிப்புவினை வந்தன. (18) வியங்கோள் வினைமுற்று 337. கயவொரு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப. சூ-ம், வியங்கோட் டெரிநிலை வினைமுற்று வருமாறு கூறுகின்றது. (இ-ள்) கயவொடு ரவ்வொற் றீற்ற - ககர யகரங்களையும் ரகார வொற்றையும் இம்மூன்று விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள், வியங்கோள் - வியங்கோட் டெரிநிலை வினைமுற்றாம்; இயலு
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 191 ( இள் ) முன்னிலை முன்னர் - ஒருமை முன்னிலை மொழியிடத்து ஈய மேயும் - ஈகாரமும் ஏகாரமும் அந்நிலை மரபின் - அவ்விடத்துத் தமக் கேற்ற மெய்யூர்ந்து வருமே - ஒற்றெழுத்தைச் சேர்ந்து வருவனவும் சிலவுள என்றவாறு . - ம் : சென்றீ பெருமாநிற் றகைக்குநர் யாரே ( அகம் .46 ) அட்டிலோலை தொட்டனை நின்மே ( நற் .300 ) என வரும் . இது புணர்ச்சி விதி அண்மையின் ஈண்டை வைத்தார் என்க . ( 17 ) முன்னிலைப் பன்மை வினைமுற்று 336. இர்ஈ ரீற்ற விரண்டு மிகுதிணைப் பன்மை முன்னிலை மின்னவற் றேவல் . சூ - ம் விரவுத் திணை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினை முற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது . ( - ள் ) இர்ஈரீற்ற விரண்டும் - இர் ஈர் என்னும் இவ்விரண்டு விகுதி மினையும் ஈறாகவுடைய மொழிகள் இருதிணைப் பன்மை முன்னிலை - விரவுத்தினை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; மின்னவற்றேவல் - மின் விகுதியை ஈறாக வுடைய மொழிகள் விரவுத் திணை முன்னிலைப் பன்மையாய் ஏவற் பொருண்மையின் வரும் என்றவாறு . - ம் : உண்டனிர் உண்ணாநின்றனிர் உண்குவிர் ; உண்டீர் உண்ணாநின்றீர் உண்பீர் ; உண்மின் என இம்மூவிகுதி சேர்ந்த விரவுத் திணை முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினை முற்று . தாரினிர் தரையினிர் காரினிர் காலினிர் வலியினிர் எனவும் தாரினீர் தரையினீர் காரினீர் காலினீர் வலியினீர் எனவும் இவ்விரு விகுதி சேர்ந்த விரவுத் திணை முன்னிலைப் பன்மைக் குறிப்புவினை வந்தன . ( 18 ) வியங்கோள் வினைமுற்று 337. கயவொரு ரவ்வொற் றீற்ற வியங்கோள் இயலு மிடம்பா லெங்கு மென்ப . சூ - ம் வியங்கோட் டெரிநிலை வினைமுற்று வருமாறு கூறுகின்றது . ( - ள் ) கயவொடு ரவ்வொற் றீற்ற - ககர யகரங்களையும் ரகார வொற்றையும் இம்மூன்று விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள் வியங்கோள் - வியங்கோட் டெரிநிலை வினைமுற்றாம் ; இயலு