நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

180 சொல்லதிகாரம் - பெயரியல் உ-ம்: கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான், கைவிரற்கண் மடக்கினான், கையது விரல் மடக்கி னான் எனவும் வந்தன. நெற்குப்பை என்றால் நெல்லினது குப்பை, குப்பையது நெல் என இரண்டாவது வேறில்லாதது காண்க. (59) உருபு மயக்கம் 316. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள் செள் மருங்கின் வேற்றுமை சாரும். சூ-ம், உருபுகள் ஒரு சார் அதன் பொருண்மேலன்றி மயங்கி வருதலும் உடையவென வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) யாதனுருபிற் கூறிற்றாயினும் - ஓருருபிற் சொல்லப்பட்டதே ஒரு சொல் ஆமினும் அச்சொற்கு அவ்வுருபின் பொருளே பொரு ளென்று கொள்ளற்க; பொருள்சென் மருங்கின் - அச்சொல்லின் பொருள் அவ்வுருபிற்கு ஏற்குமோவென்று அப்பொருள் நோக்கும் உருபு அறிந்து, வேற்றுமை சாரும் - அவ்வேற்றுமை உருபே கொள்க என்றவாறு. உ-ம்: “கிளையரி னாணற் கிழங்கு மணற்கின்ற; முளையோ ரன்ன முள்ளெயிற்றுப் பேழ்வாய்” (அகம்.212) என நான்காம் வேற்றுமை வந்ததாயினும் அதனை ஏழாம் வேற்றுமையாகக் கொள்க. “நாகு வேயொடு நக்கு வீங்குதோள்" என இதனுள் ஒடுவை ஐயாகக் கொள்க. “ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன்” என ஆலை ஐயாகக் கொள்க. பிறவுமன்ன. இவை உருபு மயக்கம்; பிறவுமன்ன. (60) செய்யுட்கண் உருபு திரிதல் 317. ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும் ஆகா வஃறிணைக் கானல் லாதன. சூ-ம், அவ்வுருபுகள் செய்யுள் விகாரப்படுமெனக் கூறுகின்றது. (இ-ள்) ஐயான்கு - ஐயுருபும் ஆனுருபும் குவ்வுருபும் என்னும் மூன் றும், செய்யுட்கு அவ்வுமாகும் - செய்யுட்கண் அகரமாகியும் நிற்கப் பெறும்; ஆகா அஃறிணைக் கானல் லாதன - அஃறிணைக் கணாமே யெனில் ஆனல்லாத ஐயுருபும் குவ்வுருபும் திரியாவாம் என்றவாறு. உ-ம்: “காவ லோனைக் களிறஞ் சும்மே” என்பது “காவ லோளக் களிறஞ் சும்மே” என்றும், “புலவரான்” என்பது “புலவரான” என்றும், “கடிநிலை யின்றே யாசிரி யர்க்கு” என்பது “கடிநிலை யின்றே யாசிரி - யர்க்க” (தொல்.எழு.390) என்றும்
180 சொல்லதிகாரம் - பெயரியல் - ம் : கோட்டை நுனிக்கட் குறைத்தான் கோட்டை நுனியைக் குறைத்தான் கைவிரற்கண் மடக்கினான் கையது விரல் மடக்கி னான் எனவும் வந்தன . நெற்குப்பை என்றால் நெல்லினது குப்பை குப்பையது நெல் என இரண்டாவது வேறில்லாதது காண்க . ( 59 ) உருபு மயக்கம் 316. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள் செள் மருங்கின் வேற்றுமை சாரும் . சூ - ம் உருபுகள் ஒரு சார் அதன் பொருண்மேலன்றி மயங்கி வருதலும் உடையவென வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) யாதனுருபிற் கூறிற்றாயினும் - ஓருருபிற் சொல்லப்பட்டதே ஒரு சொல் ஆமினும் அச்சொற்கு அவ்வுருபின் பொருளே பொரு ளென்று கொள்ளற்க ; பொருள்சென் மருங்கின் - அச்சொல்லின் பொருள் அவ்வுருபிற்கு ஏற்குமோவென்று அப்பொருள் நோக்கும் உருபு அறிந்து வேற்றுமை சாரும் - அவ்வேற்றுமை உருபே கொள்க என்றவாறு . - ம் : கிளையரி னாணற் கிழங்கு மணற்கின்ற ; முளையோ ரன்ன முள்ளெயிற்றுப் பேழ்வாய் ( அகம் .212 ) என நான்காம் வேற்றுமை வந்ததாயினும் அதனை ஏழாம் வேற்றுமையாகக் கொள்க . நாகு வேயொடு நக்கு வீங்குதோள் என இதனுள் ஒடுவை ஐயாகக் கொள்க . ஆலத்தினால் அமிர்தாக்கிய கோன் என ஆலை ஐயாகக் கொள்க . பிறவுமன்ன . இவை உருபு மயக்கம் ; பிறவுமன்ன . ( 60 ) செய்யுட்கண் உருபு திரிதல் 317. ஐயான்குச் செய்யுட் கவ்வு மாகும் ஆகா வஃறிணைக் கானல் லாதன . சூ - ம் அவ்வுருபுகள் செய்யுள் விகாரப்படுமெனக் கூறுகின்றது . ( - ள் ) ஐயான்கு - ஐயுருபும் ஆனுருபும் குவ்வுருபும் என்னும் மூன் றும் செய்யுட்கு அவ்வுமாகும் - செய்யுட்கண் அகரமாகியும் நிற்கப் பெறும் ; ஆகா அஃறிணைக் கானல் லாதன - அஃறிணைக் கணாமே யெனில் ஆனல்லாத ஐயுருபும் குவ்வுருபும் திரியாவாம் என்றவாறு . - ம் : காவ லோனைக் களிறஞ் சும்மே என்பது காவ லோளக் களிறஞ் சும்மே என்றும் புலவரான் என்பது புலவரான என்றும் கடிநிலை யின்றே யாசிரி யர்க்கு என்பது கடிநிலை யின்றே யாசிரி - யர்க்க ( தொல்.எழு .390 ) என்றும்