நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

150 சொல்லதிகாரம் - பெயரியல் கும், எனுமுத்தகுதியோடு - ) - என இம் மூவகைத் தகுதி வழக்கினொடுங் கூட, ஆறாம் வழக்கியல் - வழக்கு நெறி ஆறு வகைப்படும் என்ற வாறு. உ-ம்: நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என இலக்கணமுடைய வழக்கு இல்முன் என்பதனை முன்றிலென்றும், புறவிலா என்ப தனை விலாப்புறம் என்றும், கோவில் என்பதனைக் கோயி லென்றும், பொதுவில் என்பதனைப் பொதியிலென்றும், கண்மீ என்பதனை மீகண்ணென்றும், யாவர் என்பதனை யாரென்றும், எவன் என்பதனை என்னென்றும் இப்பெற்றியான் வருவது இலக்கணப் போலி வழக்கு. அருமருந்தன்னான் என்பதனை அருமந்தான் என்றும், நாட்டுவித்தான் என்பதனை நாட்டியத்தா னென்றும், மலையனாடு என்பதனை மலாடு என்றும், சோழ னாடு சோணாடு என்றும், பாண்டிய நாட்டைப் பாண்டி நாடென் றும், கிழங்கன்னபழஞ்சோறு கிழங்கம் பழஞ்சோறு எனவும், மண்கட்டி மண்ணாங்கட்டி, பொற்கட்டி பொன்னாங்கட்டி எனவும் இப்பெற்றியான் வருவன மரூஉ மொழி வழக்கு, கண்கழீஇ வருதும், கான்மேல் நீர் பெய்து வருதும், வாய் பூசி வருதும், கை குறியராய் இருந்தார், பொறையுயிர்த்தார் என இவ்வாறு வருவன இடக்கரடக்கல் வழக்கு. செத்தாரைத் துஞ்சினாரென் றும், ஓலையைத் திருமுகமென்றும், காராட்டை வெள்ளாடென் றும், இடுகாட்டை நன்காடென்றும், இல்லதுக்கு அமுதுபடி நிறைந்திருந்ததென்றும், கொடுக்க மெத்தவென்றும் இவ் வாறு வருவன மங்கல வழக்கு, பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றும், வண்ணக்கார் காரத்தை நீலமென்றும், யாகைப் பாகர் ஆடையைக் காரையென்றும், வேடர் கள்ளைச் சொல் விளம்பியென்றும், இழிசினர் சோற்றைச் சொன்றியென்றும், ஈழநாட்டார் வைக்கோலைக் கந்தென்றும் இவைபோலவும் குழூஉக்குறி வழக்கு. வழக்காவது சில சொல் பிறந்த காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று; இஃது பொருளை உணர்த்திற்று; *து இன்பத்தை உணர்த்திற்று; இஃது வீட்டை உணர்த்திற்று ... (10) செய்யுள் 267. பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள். சூ-ம், மேற் செய்யுள் என்றார்; அவை இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) பல்வகைத் தாதுவின் - தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேதநீர் என்னும் சத்த தாதுக்களினாலே, உயிர்க்கு
150 சொல்லதிகாரம் - பெயரியல் கும் எனுமுத்தகுதியோடு - ) - என இம் மூவகைத் தகுதி வழக்கினொடுங் கூட ஆறாம் வழக்கியல் - வழக்கு நெறி ஆறு வகைப்படும் என்ற வாறு . - ம் : நிலம் நீர் தீ வளி ஆகாயம் என இலக்கணமுடைய வழக்கு இல்முன் என்பதனை முன்றிலென்றும் புறவிலா என்ப தனை விலாப்புறம் என்றும் கோவில் என்பதனைக் கோயி லென்றும் பொதுவில் என்பதனைப் பொதியிலென்றும் கண்மீ என்பதனை மீகண்ணென்றும் யாவர் என்பதனை யாரென்றும் எவன் என்பதனை என்னென்றும் இப்பெற்றியான் வருவது இலக்கணப் போலி வழக்கு . அருமருந்தன்னான் என்பதனை அருமந்தான் என்றும் நாட்டுவித்தான் என்பதனை நாட்டியத்தா னென்றும் மலையனாடு என்பதனை மலாடு என்றும் சோழ னாடு சோணாடு என்றும் பாண்டிய நாட்டைப் பாண்டி நாடென் றும் கிழங்கன்னபழஞ்சோறு கிழங்கம் பழஞ்சோறு எனவும் மண்கட்டி மண்ணாங்கட்டி பொற்கட்டி பொன்னாங்கட்டி எனவும் இப்பெற்றியான் வருவன மரூஉ மொழி வழக்கு கண்கழீஇ வருதும் கான்மேல் நீர் பெய்து வருதும் வாய் பூசி வருதும் கை குறியராய் இருந்தார் பொறையுயிர்த்தார் என இவ்வாறு வருவன இடக்கரடக்கல் வழக்கு . செத்தாரைத் துஞ்சினாரென் றும் ஓலையைத் திருமுகமென்றும் காராட்டை வெள்ளாடென் றும் இடுகாட்டை நன்காடென்றும் இல்லதுக்கு அமுதுபடி நிறைந்திருந்ததென்றும் கொடுக்க மெத்தவென்றும் இவ் வாறு வருவன மங்கல வழக்கு பொற்கொல்லர் பொன்னைப் பறியென்றும் வண்ணக்கார் காரத்தை நீலமென்றும் யாகைப் பாகர் ஆடையைக் காரையென்றும் வேடர் கள்ளைச் சொல் விளம்பியென்றும் இழிசினர் சோற்றைச் சொன்றியென்றும் ஈழநாட்டார் வைக்கோலைக் கந்தென்றும் இவைபோலவும் குழூஉக்குறி வழக்கு . வழக்காவது சில சொல் பிறந்த காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று ; இஃது பொருளை உணர்த்திற்று ; * து இன்பத்தை உணர்த்திற்று ; இஃது வீட்டை உணர்த்திற்று ... ( 10 ) செய்யுள் 267. பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வின் வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள் . சூ - ம் மேற் செய்யுள் என்றார் ; அவை இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) பல்வகைத் தாதுவின் - தோல் இரத்தம் இறைச்சி மேதை எலும்பு மச்சை சுவேதநீர் என்னும் சத்த தாதுக்களினாலே உயிர்க்கு