நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

ஐந்தாவது உருபு புணரியல் உருபுகள் 239. ஒருவ னொருத்திபல ரொன்று பலவென வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான் குருபு முறழ்தர நாற்பதா முருபே. சூ-ம், வேற்றுமை உருபு பொருந்துமிடமும் அவற்றது தொகையும் கூறியது. (இ-ள்) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென - ஒருவனென்றும் ஒருத்தியென்றும் பலரென்றும் ஒன்றென்றும் பலவென்றும், வரு பெயர் ஐந்தொடு - வருகிற இவ்வைந்து பெயருடனும், பெயர்முதல் இரு நான்கு உருபும் உறழ்தர பெயர் வேற்றுமை முதலாக விளி வேற் றுமை ஈறாக நின்ற எட்டு வேற்றுமை உருபினையும் உறழ, நாற் பதாம் உருபே - வேற்றுமை உருபுகள் நாற்பதாம் என்றவாறு. உ-ம்: நம்பி, நம்பியை, நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பி யது, நம்பிகள், நம்பியே என உயர்திணை ஆணொருமை யோடு எட்டுருபும் வந்தன. ஒழிந்த நாற்பெயரோடு ஒட்டுக. (1) உருபுகள் வரும் இடம் 240. பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே. சூ-ம், வேற்றுமையுருபு வருமிடம் கூறியது. (இ-ள்) பெயர்வழித் - எவ்வகைப் பெயர்க்கும் பின்னாக, தம் பொருள் தர - தம் பொருளைத் தோற்றுவித்தற்கு, வரும் உருபே - வேற்றுமை உருபுகள் வரும் என்றவாறு. உ-ம்: நம்பி, நம்பியை, நம்பியால், நம்பிக்கு, நம்பியின், நம்பி யது, நம்பிகண், நம்பியே என வரும். (2)
ஐந்தாவது உருபு புணரியல் உருபுகள் 239. ஒருவ னொருத்திபல ரொன்று பலவென வருபெய ரைந்தொடு பெயர்முத லிருநான் குருபு முறழ்தர நாற்பதா முருபே . சூ - ம் வேற்றுமை உருபு பொருந்துமிடமும் அவற்றது தொகையும் கூறியது . ( - ள் ) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென - ஒருவனென்றும் ஒருத்தியென்றும் பலரென்றும் ஒன்றென்றும் பலவென்றும் வரு பெயர் ஐந்தொடு - வருகிற இவ்வைந்து பெயருடனும் பெயர்முதல் இரு நான்கு உருபும் உறழ்தர பெயர் வேற்றுமை முதலாக விளி வேற் றுமை ஈறாக நின்ற எட்டு வேற்றுமை உருபினையும் உறழ நாற் பதாம் உருபே - வேற்றுமை உருபுகள் நாற்பதாம் என்றவாறு . - ம் : நம்பி நம்பியை நம்பியால் நம்பிக்கு நம்பியின் நம்பி யது நம்பிகள் நம்பியே என உயர்திணை ஆணொருமை யோடு எட்டுருபும் வந்தன . ஒழிந்த நாற்பெயரோடு ஒட்டுக . ( 1 ) உருபுகள் வரும் இடம் 240. பெயர்வழித் தம்பொரு டரவரு முருபே . சூ - ம் வேற்றுமையுருபு வருமிடம் கூறியது . ( - ள் ) பெயர்வழித் - எவ்வகைப் பெயர்க்கும் பின்னாக தம் பொருள் தர - தம் பொருளைத் தோற்றுவித்தற்கு வரும் உருபே - வேற்றுமை உருபுகள் வரும் என்றவாறு . - ம் : நம்பி நம்பியை நம்பியால் நம்பிக்கு நம்பியின் நம்பி யது நம்பிகண் நம்பியே என வரும் . ( 2 )