நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

130 எழுத்ததிகாரம் - மெய்மீற்றுப் புணரியல் உ-ம்: தமிழப்பல்லவ தாசா, தமிழக்கூத்து, சேரி, தோட்டம், பிள்ளை எனவும் தாழக்கோல் எனவும் வரும். உம்மையால் தமிழ்க்கூத்து, தாழ்க்கோல் எனவும் வரும். (22) 225. கீழின் முன் வன்மை விகற்பமு மாகும். சூ-ம், திசையை உணர்த்தும் கீழென்னும் ழகரவீற்றுப் புணர்ச்சி கூறி யது. (இ-ள்) கீழின்முன் - கீழென்னும் நிலைமொழி ஈறாக நின்ற ழகார வீற்று முன், வன்மை - வருமொழி முதல் வல்லினம் வந்தால், விகற் பமுமாகும் - ஒரு கால் இயல்பாயும் ஒரு கால் மிக்கும் உறழ்ந்தும் முடியும் என்றவாறு. உ-ம்: கீழ்க்குளம், கீழ்குளம், சேரி, துறை, பாடி என வரும். அல்வழிக்கும் ஒப்பன கொள்க. (23) லகர ளகர ஈறு 226. லளவேற் றுமையிற் றடவு மல்வழி அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி மேவி எணவு மிடைவரி ளியல்பும் ஆகு மிருவழி யானு மென்ப. சூ-ம், லகார ளகார ஒற்றிறு புணருமாறு கூறியது. (இ-ள்) லள - நிலைமொழி ஈறாக நின்ற லகார ளகார மெய்கள், வேற் றுமையில் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, றடவும் - லகா ரம் றகாரமும் ளகாரம் டகாரமுமாய்ப் புணர்தலுமாம், அல்வழி அல் வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, அவற்றோ டுறழ்வும் - றகார டகாரத்துடனே உறழ்வனவும், வலிவரினாம் - வருமொழி முதல் வல் லினம் வந்தால், ஆம் என்றதனை முன்னே கூட்டுக, மெலிமேவின் - லகர ளகர ஈற்றின் முன்னே வருமொழி முதல் மெல்லினம் வந்தால், னணவும் - லகரம் னகரமும் ளகரம் ணகரமுமாம், இடைவரின் - வருமொழி முதல் இடையினம் வந்தால், இயல்புமாகும் - நிலை மொழி ஈறு விகாரப்படாமல் இயல்பாய் முடியும், இருவழியானும் என்ப - இரு வழிப் புணர்ச்சியினுமென்று சொல்லுவர் புலவர் என்ற வாறு. உ-ம்: கல், முள் குறை, சிறை, தலை, புறம் என வேற்றுமைக் கண் திரிந்தன. கல் குறிது கற்குறிது, முள் குறிது முட்குறிது, சிறிது, தீது, பெரிது என அல்வழிக்கள் உறழ்ந்தன. கல், முள்
130 எழுத்ததிகாரம் - மெய்மீற்றுப் புணரியல் - ம் : தமிழப்பல்லவ தாசா தமிழக்கூத்து சேரி தோட்டம் பிள்ளை எனவும் தாழக்கோல் எனவும் வரும் . உம்மையால் தமிழ்க்கூத்து தாழ்க்கோல் எனவும் வரும் . ( 22 ) 225. கீழின் முன் வன்மை விகற்பமு மாகும் . சூ - ம் திசையை உணர்த்தும் கீழென்னும் ழகரவீற்றுப் புணர்ச்சி கூறி யது . ( - ள் ) கீழின்முன் - கீழென்னும் நிலைமொழி ஈறாக நின்ற ழகார வீற்று முன் வன்மை - வருமொழி முதல் வல்லினம் வந்தால் விகற் பமுமாகும் - ஒரு கால் இயல்பாயும் ஒரு கால் மிக்கும் உறழ்ந்தும் முடியும் என்றவாறு . - ம் : கீழ்க்குளம் கீழ்குளம் சேரி துறை பாடி என வரும் . அல்வழிக்கும் ஒப்பன கொள்க . ( 23 ) லகர ளகர ஈறு 226. லளவேற் றுமையிற் றடவு மல்வழி அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி மேவி எணவு மிடைவரி ளியல்பும் ஆகு மிருவழி யானு மென்ப . சூ - ம் லகார ளகார ஒற்றிறு புணருமாறு கூறியது . ( - ள் ) லள - நிலைமொழி ஈறாக நின்ற லகார ளகார மெய்கள் வேற் றுமையில் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே றடவும் - லகா ரம் றகாரமும் ளகாரம் டகாரமுமாய்ப் புணர்தலுமாம் அல்வழி அல் வழிப் பொருட் புணர்ச்சிக்கண்ணே அவற்றோ டுறழ்வும் - றகார டகாரத்துடனே உறழ்வனவும் வலிவரினாம் - வருமொழி முதல் வல் லினம் வந்தால் ஆம் என்றதனை முன்னே கூட்டுக மெலிமேவின் - லகர ளகர ஈற்றின் முன்னே வருமொழி முதல் மெல்லினம் வந்தால் னணவும் - லகரம் னகரமும் ளகரம் ணகரமுமாம் இடைவரின் - வருமொழி முதல் இடையினம் வந்தால் இயல்புமாகும் - நிலை மொழி ஈறு விகாரப்படாமல் இயல்பாய் முடியும் இருவழியானும் என்ப - இரு வழிப் புணர்ச்சியினுமென்று சொல்லுவர் புலவர் என்ற வாறு . - ம் : கல் முள் குறை சிறை தலை புறம் என வேற்றுமைக் கண் திரிந்தன . கல் குறிது கற்குறிது முள் குறிது முட்குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக்கள் உறழ்ந்தன . கல் முள்