நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

110 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் முற்றுகரவீற்றுச் சிறப்புவிதி 180. வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி. சூ-ம், குற்றுகரத்துள் வன்றொடரல்லாத ஐந்துக்கும் எய்தியது ஒரு வழி விலக்கல் கூறியது. (இ-ள்) வன்றொடரல்லன முன் - வன்றொடரொழிந்த ஐந்து குற்றுகர ஈற்றின் முன்னும், மிகா அல்வழி - வந்த வல்லினம் மிகாது இயல்பாய் முடியும் அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: நாகு, எஃகு, வரகு, குரங்கு, தெள்கு கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் முறையே இயல்பாயின. உறங்குகின்றான் துஞ்சுகின்றான், உண்டுபோயினான், எறிந்துபோயினான் என்பன முதலாயினவும் கொள்க. சுக்குக்கடிது, பதக்குப் பெரிது என வன்றொடர் மிக்கவாறு காண்க. (30) 181. இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. சூ-ம், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறியது. (இ-ள்) இடைத்தொடர் ஆய்தத்தொடர் - இடைத்தொடர்க் குற்றுகர மும் ஆய்தத்தொடர்க் குற்றுகரத்தின் முன்னும், ஒற்றிடையின் மிகா நெடில் - இடையே ஒற்று மிகாத நெடிற்றொடர்க் குற்றுகரத்தின் முன் னும், உயிர்த்தொடர் முன் - உயிர்த்தொடர்க் குற்றுகரத்தின் முன்னும், மிகா வேற்றுமை - வல்லினம் வந்தால் வேற்றுமைக்கண் இயல்பாம் என்றவாறு. உ-ம்: தெள்கு, எஃகு கடுமை, சிறுமை, தீமை; பெருமை என வும்; நாகுகால், செவி, தலை, புறம் எனவும்; காசு, காது, காபு கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் ஒற்றிடையிலே மிகாத நெடிற்றொடர்க் குற்றுகரம் இயல்பாயின. வரகு கதிர், சோறு, தாள், பதர் எனவும்; முரசு, மருது, துரபு கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் ஒற்று இடையிலே மிகாத உயிர்த்தொடர்க் குற்றுகரத்தின் முன் இயல்பாயின. இவை இயல்பாம் எனவே வன்றொடரும் மெற்றொடரும் ஒற்றிடை யிலே மிகும் நெடிற்றொடர் உயிர்த்தொடர் இரண்டும் உயிரீற்றுப் பொதுவிதியான் மிக்கு முடியுமென்க. அவை கொக்குக் கால், குரங் குக்கால், ஆட்டுக்கால், முயிற்றுக்கால், செவி, தலை, புறம் என வரும். (31)
110 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் முற்றுகரவீற்றுச் சிறப்புவிதி 180. வன்றொட ரல்லன முன்மிகா வல்வழி . சூ - ம் குற்றுகரத்துள் வன்றொடரல்லாத ஐந்துக்கும் எய்தியது ஒரு வழி விலக்கல் கூறியது . ( - ள் ) வன்றொடரல்லன முன் - வன்றொடரொழிந்த ஐந்து குற்றுகர ஈற்றின் முன்னும் மிகா அல்வழி - வந்த வல்லினம் மிகாது இயல்பாய் முடியும் அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : நாகு எஃகு வரகு குரங்கு தெள்கு கடிது சிறிது தீது பெரிது எனவும் முறையே இயல்பாயின . உறங்குகின்றான் துஞ்சுகின்றான் உண்டுபோயினான் எறிந்துபோயினான் என்பன முதலாயினவும் கொள்க . சுக்குக்கடிது பதக்குப் பெரிது என வன்றொடர் மிக்கவாறு காண்க . ( 30 ) 181. இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை . சூ - ம் எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறியது . ( - ள் ) இடைத்தொடர் ஆய்தத்தொடர் - இடைத்தொடர்க் குற்றுகர மும் ஆய்தத்தொடர்க் குற்றுகரத்தின் முன்னும் ஒற்றிடையின் மிகா நெடில் - இடையே ஒற்று மிகாத நெடிற்றொடர்க் குற்றுகரத்தின் முன் னும் உயிர்த்தொடர் முன் - உயிர்த்தொடர்க் குற்றுகரத்தின் முன்னும் மிகா வேற்றுமை - வல்லினம் வந்தால் வேற்றுமைக்கண் இயல்பாம் என்றவாறு . - ம் : தெள்கு எஃகு கடுமை சிறுமை தீமை ; பெருமை என வும் ; நாகுகால் செவி தலை புறம் எனவும் ; காசு காது காபு கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் ஒற்றிடையிலே மிகாத நெடிற்றொடர்க் குற்றுகரம் இயல்பாயின . வரகு கதிர் சோறு தாள் பதர் எனவும் ; முரசு மருது துரபு கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் ஒற்று இடையிலே மிகாத உயிர்த்தொடர்க் குற்றுகரத்தின் முன் இயல்பாயின . இவை இயல்பாம் எனவே வன்றொடரும் மெற்றொடரும் ஒற்றிடை யிலே மிகும் நெடிற்றொடர் உயிர்த்தொடர் இரண்டும் உயிரீற்றுப் பொதுவிதியான் மிக்கு முடியுமென்க . அவை கொக்குக் கால் குரங் குக்கால் ஆட்டுக்கால் முயிற்றுக்கால் செவி தலை புறம் என வரும் . ( 31 )