நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

104 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் தகர், பன்றியென உவமைப் பண்பு கொள் பெயரெச்சம் இயல் பாயின. செய்ய, சிறிய, சேய, தீய, வெய்ய, புதிய, மேல, திண்ணிய, உண்ணிய, நுண்ணிய கமலம், சரோருகம், தாமரை, பங்கயம் எனப் பண்பு கொள் பெயரெச்சம் இயல்பாயின. உண்ணாத, தின்னாத குதிரை, செந்நாய், தகர், பன்றியென எதிர்மறைப் பெயரெச்சம் இயல்பாயின. உண்டன, தின்றன, நல்லன, தீயன, வாழ்க, செல்க குதிரை, செந்நாய், தகர், பன்றியெனத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று முன்னும் இயல்பாயின. சாத்தன், கொற்றன் குதிரை, செந்நாய், தகர், பன்றியென ஆறனுருபின்முன் இயல்பாயின. சில, பல, உள, இல, அல, சில்ல, பல்ல, உள்ள, இல்ல, அல்ல குதிரை, செந்நாய், தகர், பன்றியென அஃறிணைப் பன்மை முன் இயல்பாயின. அம்மகொற்றா, சாத்தா, தேவா, பூதா என உரையசை இடைச்சொல் முன் இயல்பாயின. (17) 168. வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. சூ-ம், எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமற் காத்த லும் கூறியது. (இ-ள்) வாழிய என்பதன் - வாழியவென்று சொல்லப்படும் வியங் கோள் வினைமுற்றின், ஈற்றுயிர்மெய் ஏகலும் உரித்து - இறுதிக் கண்ணே நின்ற யகர உயிர்மெய் கெட்டு முடிதலும் உரித்து, அஃது ஏகினும் இயல்பே - அது கெட்டு இகரவிறாய் நின்றாலும் ஆண்டும் இயல்பேயாம் என்றவாறு. அரும்பதவுரை: உம்மை எதிர்மறைக்கண்ணாதலான் கெடாமை யும் உரித்தாகலும் இயல்பிகந்துபடாமையும் கொள்க. வரு மொழி வரையாமையின் நாற்கணமும் வரினும் கெடுதலும் கெடாமலும் கொள்க. உ-ம்: வாழிய, வாழி கொற்றா, சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மன்னா, வளவா, யவனா, அபயா எனவும் வரும். (18) 169. சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி. சூ-ம், இதுவுமது. (இ-ள்) சாவவென் மொழி - சாவவென்று சொல்லப்படும் செயவென் னும் வாய்பாட்டு வினையெச்சத்து, ஈற்றுயிர்மெய் - இறுதிக்கண் நின்ற வகர உயிர்மெய், சாதலும் விதி - கெட்டு நிற்றலும் விதியாம் என்றவாறு. அ பதவுரை: “சாதலும் விதி”யெனவே கெடாமல் நிற்றலே வலியுடைத்து என்க.
104 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் தகர் பன்றியென உவமைப் பண்பு கொள் பெயரெச்சம் இயல் பாயின . செய்ய சிறிய சேய தீய வெய்ய புதிய மேல திண்ணிய உண்ணிய நுண்ணிய கமலம் சரோருகம் தாமரை பங்கயம் எனப் பண்பு கொள் பெயரெச்சம் இயல்பாயின . உண்ணாத தின்னாத குதிரை செந்நாய் தகர் பன்றியென எதிர்மறைப் பெயரெச்சம் இயல்பாயின . உண்டன தின்றன நல்லன தீயன வாழ்க செல்க குதிரை செந்நாய் தகர் பன்றியெனத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று முன்னும் இயல்பாயின . சாத்தன் கொற்றன் குதிரை செந்நாய் தகர் பன்றியென ஆறனுருபின்முன் இயல்பாயின . சில பல உள இல அல சில்ல பல்ல உள்ள இல்ல அல்ல குதிரை செந்நாய் தகர் பன்றியென அஃறிணைப் பன்மை முன் இயல்பாயின . அம்மகொற்றா சாத்தா தேவா பூதா என உரையசை இடைச்சொல் முன் இயல்பாயின . ( 17 ) 168. வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே . சூ - ம் எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமற் காத்த லும் கூறியது . ( - ள் ) வாழிய என்பதன் - வாழியவென்று சொல்லப்படும் வியங் கோள் வினைமுற்றின் ஈற்றுயிர்மெய் ஏகலும் உரித்து - இறுதிக் கண்ணே நின்ற யகர உயிர்மெய் கெட்டு முடிதலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே - அது கெட்டு இகரவிறாய் நின்றாலும் ஆண்டும் இயல்பேயாம் என்றவாறு . அரும்பதவுரை : உம்மை எதிர்மறைக்கண்ணாதலான் கெடாமை யும் உரித்தாகலும் இயல்பிகந்துபடாமையும் கொள்க . வரு மொழி வரையாமையின் நாற்கணமும் வரினும் கெடுதலும் கெடாமலும் கொள்க . - ம் : வாழிய வாழி கொற்றா சாத்தா தேவா பூதா ஞெள்ளா நாகா மன்னா வளவா யவனா அபயா எனவும் வரும் . ( 18 ) 169. சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி . சூ - ம் இதுவுமது . ( - ள் ) சாவவென் மொழி - சாவவென்று சொல்லப்படும் செயவென் னும் வாய்பாட்டு வினையெச்சத்து ஈற்றுயிர்மெய் - இறுதிக்கண் நின்ற வகர உயிர்மெய் சாதலும் விதி - கெட்டு நிற்றலும் விதியாம் என்றவாறு . பதவுரை : சாதலும் விதி யெனவே கெடாமல் நிற்றலே வலியுடைத்து என்க .