நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

270 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் “கடிவினை முடிகென நொடியினில்” என மணத்தின்கண்ணும், கரிப் பின் - "கடி மிளகு தின்ற கல்லாமந்தி” எனக் கரிப்பின் கண்ணும், ஆகும் - என இப்பதின்மூன்று பொருண்மைக் கண்ணும் வரும் என்றவாறு. (16) சொல்லுதல் தொழிற்பண்பிற்குரிய உரிச்சொற்கள் 457. மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை கூற்றுப் புகறன்மொழி கிளவி விளம்பறை பாட்டு பகர்ச்சி யியம்பல் சொல்லே. சூ-ம், சொற் றொழிற்பண்பு இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) மாற்றம் - “கோவலர் வாய், மாற்ற முணர்ந்து” (சீவக.432), நுவற்சி - “இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" (திருமுருகு . 182), செப்பு - “தெருண்டா ரவை செப்பலுற்றேன்” (சீவக.6), உரை - “உரைப்பா ருரைப்பவை யெல்லாம்” (குறள்.232), கரை - “அறங் கரை நாவி னான்மறை முற்றிய" (தொல். பாயிரம்), நொடி “ஆமிழையாள் தானொடியும்” (பு.வெ.335), இசை - “நண்பெரு வாமி, லிசையேன் புக்கு” (பொருந.66-67), கூற்று - “உற்றது பிறர்கள் கூற உணர்ந்தனை”, புகறல் - “புகன்ற வன்றியும் புறமிக வருமே”, மொழி - “காமஞ் செப்பாது கண்டது மொழிமோ” (குறு.2), கிளவி - "களக்குங் கிளவி பாண கேளினி”, விளம்பு - “மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்” (நன்.63), அறை - “வையை யென் றறையுந ருளராயின்” (கலி.30), பாட்டு - “ஒருவன், செய்தி கொன்றோர்க் . அறம்பா டின்றே” (புறம்.34), பகர்ச்சி - “கழனி நீர்நாடன் பாவை வார்த்தை பகர்குற்றேன்”, இயம்பல் - “ஏற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே" (சீவக.432), சொல்லே - எனக் கூறிய இப்பதினாறுஞ் சொற்றொழிற் பண்பாம் என்றவாறு. (17) ஒலித்தல் தொழிற் பண்பிற்குரிய உரிச்சொற்கள் 458. முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை இரக்கழுங் கியம்ப லிமிழ் குளி றதிர்குலைர கனைசிலை சும்மை கவ்வை கம்பலை அரவ மார்ப்பொ டின்னன வோசை. சூ-ம், ஒலித்தல் தொழிற் பண்பு இவையௌக் கூறியது. (இ-ள்) முழக்கு - “முழங்கு மின்னீர் மேகம், இரட்டு - “குடிஞை யிரட்டும்” (மலைபடு.141), ஒலி - “ஒல்லென் றொலிக்கு மொலி புனலூரற்கு” (ஐந்திணை.28), கலி - “கலிகெழு மூதூர்” (புறம். 52), இசை - “பறையிசை யருவி” (புறம்.126), துவை - “அருவி
270 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் கடிவினை முடிகென நொடியினில் என மணத்தின்கண்ணும் கரிப் பின் - கடி மிளகு தின்ற கல்லாமந்தி எனக் கரிப்பின் கண்ணும் ஆகும் - என இப்பதின்மூன்று பொருண்மைக் கண்ணும் வரும் என்றவாறு . ( 16 ) சொல்லுதல் தொழிற்பண்பிற்குரிய உரிச்சொற்கள் 457. மாற்ற நுவற்சிசெப் புரைகரை நொடியிசை கூற்றுப் புகறன்மொழி கிளவி விளம்பறை பாட்டு பகர்ச்சி யியம்பல் சொல்லே . சூ - ம் சொற் றொழிற்பண்பு இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) மாற்றம் - கோவலர் வாய் மாற்ற முணர்ந்து ( சீவக .432 ) நுவற்சி - இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ( திருமுருகு . 182 ) செப்பு - தெருண்டா ரவை செப்பலுற்றேன் ( சீவக .6 ) உரை - உரைப்பா ருரைப்பவை யெல்லாம் ( குறள் .232 ) கரை - அறங் கரை நாவி னான்மறை முற்றிய ( தொல் . பாயிரம் ) நொடி ஆமிழையாள் தானொடியும் ( பு.வெ .335 ) இசை - நண்பெரு வாமி லிசையேன் புக்கு ( பொருந.66-67 ) கூற்று - உற்றது பிறர்கள் கூற உணர்ந்தனை புகறல் - புகன்ற வன்றியும் புறமிக வருமே மொழி - காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ( குறு .2 ) கிளவி - களக்குங் கிளவி பாண கேளினி விளம்பு - மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர் ( நன் .63 ) அறை - வையை யென் றறையுந ருளராயின் ( கலி .30 ) பாட்டு - ஒருவன் செய்தி கொன்றோர்க் . அறம்பா டின்றே ( புறம் .34 ) பகர்ச்சி - கழனி நீர்நாடன் பாவை வார்த்தை பகர்குற்றேன் இயம்பல் - ஏற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே ( சீவக .432 ) சொல்லே - எனக் கூறிய இப்பதினாறுஞ் சொற்றொழிற் பண்பாம் என்றவாறு . ( 17 ) ஒலித்தல் தொழிற் பண்பிற்குரிய உரிச்சொற்கள் 458. முழக்கிரட் டொலிகலி யிசைதுவை பிளிறிரை இரக்கழுங் கியம்ப லிமிழ் குளி றதிர்குலைர கனைசிலை சும்மை கவ்வை கம்பலை அரவ மார்ப்பொ டின்னன வோசை . சூ - ம் ஒலித்தல் தொழிற் பண்பு இவையௌக் கூறியது . ( - ள் ) முழக்கு - முழங்கு மின்னீர் மேகம் இரட்டு - குடிஞை யிரட்டும் ( மலைபடு .141 ) ஒலி - ஒல்லென் றொலிக்கு மொலி புனலூரற்கு ( ஐந்திணை .28 ) கலி - கலிகெழு மூதூர் ( புறம் . 52 ) இசை - பறையிசை யருவி ( புறம் .126 ) துவை - அருவி