நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 265 (இ-ள்) சிதலெறும் பாதி - கறையானையும் எறும்பையும் முதலாக வுடையன, மூக்கறிவின் - முற்கூறிய இரண்டினொடு முக்காலும் அறியும், மூவறிவுயிர் - மூவறிவையுடைய உயிர்களாம் என்றவாறு. நாலறிவுயிர் 447. தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர். சூ-ம், நாலறிவுயிர் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) தும்பிவண் டாதி - தும்பியையும் வண்டையும் முதலாக வுடையவை, கண்ணறிவின் - முற்கூறிய மூன்று அறிவினோடுங் கண்ணாலும் அறியும், நாலறிவுயிர் - நாலறிவுயிர்களாம் என்றவாறு. (7) ஐயறிவுயிர் 448. வானவர் மக்க ணரகர் விலங்குபுள் ஆதி செவியறிவொ டையறி வுயிரே. சூ-ம், ஐயறிவுயிர் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) வானவர் மக்கள் - தேவரையும் மக்களையும், நரகர் விலங்கு - நரகரையும் விலங்கையும், புள் ஆதி - புள்ளையும் முதலாகவுடை யவை, செவியறிவொடு - முற்கூறிய நாலறிவினோடுஞ் செவி யாலும் அறியும், ஐயறி வுயிரே - ஐந்தறிவினையுடைய உயிர்களாம் என்றவாறு. (8) உயிரில் பொருள் 449. உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடன்முத லனைத்து முயிரில் பொருளே. சூ-ம், உயிரில் பொருளாவது இன்னதெனக் கூறுகின்றது. (இ-ள்) உணர்விய லாமுயிர் - அறிவு மயமாயுள்ள உயிர், ஒன்று மொழித்த - ஒன்றையும் ஒழித்து ஒழிந்து நின்ற, உடன்முத - லனைத் தும் - உடம்பும் முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம், உயிரில் - பொருளே - உயிர் இல்லாத பொருள்களாம் என்றவாறு. (9) புறநடை 450. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 265 ( - ள் ) சிதலெறும் பாதி - கறையானையும் எறும்பையும் முதலாக வுடையன மூக்கறிவின் - முற்கூறிய இரண்டினொடு முக்காலும் அறியும் மூவறிவுயிர் - மூவறிவையுடைய உயிர்களாம் என்றவாறு . நாலறிவுயிர் 447. தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர் . சூ - ம் நாலறிவுயிர் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) தும்பிவண் டாதி - தும்பியையும் வண்டையும் முதலாக வுடையவை கண்ணறிவின் - முற்கூறிய மூன்று அறிவினோடுங் கண்ணாலும் அறியும் நாலறிவுயிர் - நாலறிவுயிர்களாம் என்றவாறு . ( 7 ) ஐயறிவுயிர் 448. வானவர் மக்க ணரகர் விலங்குபுள் ஆதி செவியறிவொ டையறி வுயிரே . சூ - ம் ஐயறிவுயிர் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) வானவர் மக்கள் - தேவரையும் மக்களையும் நரகர் விலங்கு - நரகரையும் விலங்கையும் புள் ஆதி - புள்ளையும் முதலாகவுடை யவை செவியறிவொடு - முற்கூறிய நாலறிவினோடுஞ் செவி யாலும் அறியும் ஐயறி வுயிரே - ஐந்தறிவினையுடைய உயிர்களாம் என்றவாறு . ( 8 ) உயிரில் பொருள் 449. உணர்விய லாமுயி ரொன்று மொழித்த உடன்முத லனைத்து முயிரில் பொருளே . சூ - ம் உயிரில் பொருளாவது இன்னதெனக் கூறுகின்றது . ( - ள் ) உணர்விய லாமுயிர் - அறிவு மயமாயுள்ள உயிர் ஒன்று மொழித்த - ஒன்றையும் ஒழித்து ஒழிந்து நின்ற உடன்முத - லனைத் தும் - உடம்பும் முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிரில் - பொருளே - உயிர் இல்லாத பொருள்களாம் என்றவாறு . ( 9 ) புறநடை 450. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே யுடலுயிர் .