நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 153 கும் கல்லாதவர்க்கும் ஒப்ப, தம் பொருளை விளக்கும் தன்மைய - தத்தம் பொருள் விளங்கிக் கிடக்கும் தன்மையை உடையன, இயற் சொல் - இயற்சொல்லுக்கு இலக்கணம் என்றவாறு. (14) திரிசொல் 271. ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் சூ-ம், மேல் நிறுத்த முறையானே திரிசொல்லாவது கூறியது. (இ-ள்) ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் - ஒரு பொருளைக் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லா கியும் - பல பொருளைக் கருதிய ஒரு சொல்லாகியும், அரிதுணர் பொரு ளன - கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளாவன, திரிசொல்லாகும் - திரிசொற்று இலக்கணமாம் என்றவாறு. (15) திசைச்சொல் 272. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரட்டியிற் றமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் லென்ப. சூ-ம், திசைச்சொல் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) செந்தமிழ் நிலஞ்சேர் - செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்த, பன்னிரு நிலத்தினும் கொடுந்தமிழ் நிலமாகிய பன்னிரு நிலத்தினும், ஒன்பதிற்றிரட்டியில் - பதினெண் பாடைகளும் நிலைபெற்ற பதினெண் நிலத்தில், தமிழொழி நிலத்தினும் - இருவகைத் தமிழாம் ஒரு வகை மொழி நிலத்தையொழிந்த பதினேழு நிலத்திலும், தங்குறிப்பினவே - தத்தம் குறிப்பினவாய் வழங்குவனவற்றை, திசைச்சொல் என்ப - திசைச் சொல்லென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. (16) வடசொல் 273. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானு மியைவன வடசொல், சூ-ம், நிறுத்த முறையானே வடமொழி ஆமாறு கூறியது. (இ-ள்) பொதுவெழுத்தானும் - தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொது வெழுத்தானும், சிறப்பெழுத்தானும் - ஆரியத்திற்கேயுரிய எழுத்தானும்,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 153 கும் கல்லாதவர்க்கும் ஒப்ப தம் பொருளை விளக்கும் தன்மைய - தத்தம் பொருள் விளங்கிக் கிடக்கும் தன்மையை உடையன இயற் சொல் - இயற்சொல்லுக்கு இலக்கணம் என்றவாறு . ( 14 ) திரிசொல் 271. ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும் பலபொருள் குறித்த வொருசொல் லாகியும் அரிதுணர் பொருளன திரிசொல் லாகும் சூ - ம் மேல் நிறுத்த முறையானே திரிசொல்லாவது கூறியது . ( - ள் ) ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் - ஒரு பொருளைக் குறித்த பல சொல்லாகியும் பல பொருள் குறித்த ஒரு சொல்லா கியும் - பல பொருளைக் கருதிய ஒரு சொல்லாகியும் அரிதுணர் பொரு ளன - கல்லாதார்க்கு அறியலாகாப் பொருளாவன திரிசொல்லாகும் - திரிசொற்று இலக்கணமாம் என்றவாறு . ( 15 ) திசைச்சொல் 272. செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரட்டியிற் றமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் லென்ப . சூ - ம் திசைச்சொல் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) செந்தமிழ் நிலஞ்சேர் - செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் கொடுந்தமிழ் நிலமாகிய பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்றிரட்டியில் - பதினெண் பாடைகளும் நிலைபெற்ற பதினெண் நிலத்தில் தமிழொழி நிலத்தினும் - இருவகைத் தமிழாம் ஒரு வகை மொழி நிலத்தையொழிந்த பதினேழு நிலத்திலும் தங்குறிப்பினவே - தத்தம் குறிப்பினவாய் வழங்குவனவற்றை திசைச்சொல் என்ப - திசைச் சொல்லென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு . ( 16 ) வடசொல் 273. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானு மியைவன வடசொல் சூ - ம் நிறுத்த முறையானே வடமொழி ஆமாறு கூறியது . ( - ள் ) பொதுவெழுத்தானும் - தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொது வெழுத்தானும் சிறப்பெழுத்தானும் - ஆரியத்திற்கேயுரிய எழுத்தானும்