நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 151 உடல்போல் - உயிருக்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல, பல சொல்லால் - திரிசொல் முதலாகிய பலவகைச் சொற்களினாலும், பொருட்கிடனாக பொருள் இருத்தற்கு இடனாக, உணர்வின் வல் லோர் - தங்கள் அறிவினாற் கற்று வல்லோர்கள், அணிபெறச் செய் வன - அலங்காரம் தோன்றச் செய்வன, செய்யுள் - செய்யுட்களாவன என்றவாறு. அரும்பதவுரை: பல சொல்லாவன பொருளாதி அறு வகைப் பெயர்களுள் வந்த பெயர்த் திரிசொல்லும், பவ்வீறும் மாரீறுமான படர்க்கை வினை முற்றும், அல், அன் என்னும் விரவுத்திணை தன்மையொருமை வினை முற்றும், அம், ஆம், எம் என்னும் விரவுத்திணைத் தன்மைப்பன்மை வினைமுற்றும், கு, டு, து, று, கும், நும், என்னும் ஈற்று வினைமுற்றும் இவ் வாறு வரும் வினைத் திரிசொல்லும், இடைத்திரிசொல்லும், உரித்திரி சொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும், எழுத் ததிகாரத்துள் செய்யுட்கென்று விதந்தோதினவும் எனக் கொள்க. சொல்லும் எழுத்தாற் பெறப்படுதலின் எழுத்துச் சொற் பொருள் அணி என்னும் நான்கினும் நடப்பது யாப்பு என்பதாயிற்று. ஆகவே ஐந்து அதிகாரங்களும் தம்முள் ஒன்றையொன்று இன்றியமையா வெனக்கொள்க. உ-ம்: கங்க னகன்மார்பன் கற்றோர்க் கினிதளிக்குஞ் செங்கனகம் வெள்ளைச் செழுமணிகள் - தங்கந் தெறித்தனவே போல்விளங்கு மீன்சூழ்ந்த திங்கள் எறிக்கு நிலா வன்றோ வினி என வரும். தொகையுரைச் செய்யுளாவது யாப்பிலக்கணத்திற் கூறிய எழுத்து, அசை, முதலிய ஏழும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது. (11) வெளிப்படை குறிப்பு 268. ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே முதறொகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை. . சூ-ம், மேல் வெளிப்படை குறிப்பு என்றார்; அவை இவையெனக் கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 151 உடல்போல் - உயிருக்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல பல சொல்லால் - திரிசொல் முதலாகிய பலவகைச் சொற்களினாலும் பொருட்கிடனாக பொருள் இருத்தற்கு இடனாக உணர்வின் வல் லோர் - தங்கள் அறிவினாற் கற்று வல்லோர்கள் அணிபெறச் செய் வன - அலங்காரம் தோன்றச் செய்வன செய்யுள் - செய்யுட்களாவன என்றவாறு . அரும்பதவுரை : பல சொல்லாவன பொருளாதி அறு வகைப் பெயர்களுள் வந்த பெயர்த் திரிசொல்லும் பவ்வீறும் மாரீறுமான படர்க்கை வினை முற்றும் அல் அன் என்னும் விரவுத்திணை தன்மையொருமை வினை முற்றும் அம் ஆம் எம் என்னும் விரவுத்திணைத் தன்மைப்பன்மை வினைமுற்றும் கு டு து று கும் நும் என்னும் ஈற்று வினைமுற்றும் இவ் வாறு வரும் வினைத் திரிசொல்லும் இடைத்திரிசொல்லும் உரித்திரி சொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் எழுத் ததிகாரத்துள் செய்யுட்கென்று விதந்தோதினவும் எனக் கொள்க . சொல்லும் எழுத்தாற் பெறப்படுதலின் எழுத்துச் சொற் பொருள் அணி என்னும் நான்கினும் நடப்பது யாப்பு என்பதாயிற்று . ஆகவே ஐந்து அதிகாரங்களும் தம்முள் ஒன்றையொன்று இன்றியமையா வெனக்கொள்க . - ம் : கங்க னகன்மார்பன் கற்றோர்க் கினிதளிக்குஞ் செங்கனகம் வெள்ளைச் செழுமணிகள் - தங்கந் தெறித்தனவே போல்விளங்கு மீன்சூழ்ந்த திங்கள் எறிக்கு நிலா வன்றோ வினி என வரும் . தொகையுரைச் செய்யுளாவது யாப்பிலக்கணத்திற் கூறிய எழுத்து அசை முதலிய ஏழும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது . ( 11 ) வெளிப்படை குறிப்பு 268. ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி ஆகு பெயரன் மொழிவினைக் குறிப்பே முதறொகை குறிப்போ டின்ன பிறவும் குறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை . . சூ - ம் மேல் வெளிப்படை குறிப்பு என்றார் ; அவை இவையெனக் கூறியது .