நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 219 பாடல், சாத்தன்கண் வந்தான், அதுகொல் தோழி, நனி பேதை, பாம்பு பாம்பு என முறையே காண்க. “காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" (நன்.363) என்றமையால் காலந் தோன்றும் பெயரெச்சம் தொகாநிலையாம் என்க. (23) வழுநிலைகள் 374. திணையே பாலிடம் பொழுது வினாவிடை மரபா மேழு மயங்கிளாம் வழுவே. சூ-ம், வழாநிலையும் வழுநிலையும் கூறுகின்றது. (இ-ள்) திணையே பாலிடம் - இரு திணையும் ஐம் பாலும் மூன்று டமும், பொழுது வினாவிடை - முக்காலமும் மரபும் - மரபு காரணமாக வரும் பெயர்களும், ஆமேழும் - ஆகிய இவ்வேழும், மயங்கினும் வழுவே - தத்தம் இயல்பின்றி வரின் அவை வழுக்களாம் என்றவாறு. மயங்கின் வழுநிலை எனவே மயங்காத வழாநிலையாம் என்க. உ-ம்: அவன் வந்தது தனித்திணை வழு. அவன் வந்தாள் பால்வழு. அவன் வந்தேன் இடவழு. பண்டு, அன்று, நெருநல் இறந்தகாலப் பேர்; இன்று, இப்பொழுது நிகழ்காலப் பேர்; நாளை, இனிமேல் எதிர்காலப் பெயர். முக்காலப் பேரோடு முக்கால வினை மயங்குவது கால வழுவாம். அவை வந்தான் நாளை, வாராநின்றான் நாளை, வருவான் நெருநல், நாளை வந்தான், நெருநல் வாராநின்றான், நாளை வாராநின்றான், நெரு நல் வருவன் என வினை மேற் பெயரும் பெயர்மேல் வினையு மாய் மயங்கியது காலவழு. இன்று வந்தான், இன்று வருவான் என வழங்குவனவும் வழு வாமோ எனின், இன்றென்பது இற்றைநாளையன்றே! அத்தினத்தி னில் நிகழ்ந்தமையை நோக்க ஏனைக் காலங்களும் உளவாகலின் வழுவன்றி என்க. வினா வழுவாவது: கறக்கின்ற எருமை பாலோ? சினையோ? ஒரு விரல் காட்டி இது சிறிதோ? பெரிதோ? இத்தொடக்கத்தன என்க. செப்பு வழுவாவது: பட்டுக்கோட்டைக்கு வழியெங்கே என்றால் கொட்டைப்பாக்கு முந்நூறு; குருக்கள் வீட்டுக்கு வழி கேட்கத் துலுக்க வீடு என்பது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 219 பாடல் சாத்தன்கண் வந்தான் அதுகொல் தோழி நனி பேதை பாம்பு பாம்பு என முறையே காண்க . காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ( நன் .363 ) என்றமையால் காலந் தோன்றும் பெயரெச்சம் தொகாநிலையாம் என்க . ( 23 ) வழுநிலைகள் 374. திணையே பாலிடம் பொழுது வினாவிடை மரபா மேழு மயங்கிளாம் வழுவே . சூ - ம் வழாநிலையும் வழுநிலையும் கூறுகின்றது . ( - ள் ) திணையே பாலிடம் - இரு திணையும் ஐம் பாலும் மூன்று டமும் பொழுது வினாவிடை - முக்காலமும் மரபும் - மரபு காரணமாக வரும் பெயர்களும் ஆமேழும் - ஆகிய இவ்வேழும் மயங்கினும் வழுவே - தத்தம் இயல்பின்றி வரின் அவை வழுக்களாம் என்றவாறு . மயங்கின் வழுநிலை எனவே மயங்காத வழாநிலையாம் என்க . - ம் : அவன் வந்தது தனித்திணை வழு . அவன் வந்தாள் பால்வழு . அவன் வந்தேன் இடவழு . பண்டு அன்று நெருநல் இறந்தகாலப் பேர் ; இன்று இப்பொழுது நிகழ்காலப் பேர் ; நாளை இனிமேல் எதிர்காலப் பெயர் . முக்காலப் பேரோடு முக்கால வினை மயங்குவது கால வழுவாம் . அவை வந்தான் நாளை வாராநின்றான் நாளை வருவான் நெருநல் நாளை வந்தான் நெருநல் வாராநின்றான் நாளை வாராநின்றான் நெரு நல் வருவன் என வினை மேற் பெயரும் பெயர்மேல் வினையு மாய் மயங்கியது காலவழு . இன்று வந்தான் இன்று வருவான் என வழங்குவனவும் வழு வாமோ எனின் இன்றென்பது இற்றைநாளையன்றே ! அத்தினத்தி னில் நிகழ்ந்தமையை நோக்க ஏனைக் காலங்களும் உளவாகலின் வழுவன்றி என்க . வினா வழுவாவது : கறக்கின்ற எருமை பாலோ ? சினையோ ? ஒரு விரல் காட்டி இது சிறிதோ ? பெரிதோ ? இத்தொடக்கத்தன என்க . செப்பு வழுவாவது : பட்டுக்கோட்டைக்கு வழியெங்கே என்றால் கொட்டைப்பாக்கு முந்நூறு ; குருக்கள் வீட்டுக்கு வழி கேட்கத் துலுக்க வீடு என்பது .