நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 173) எட்டாம் வேற்றுமை 302. எட்ட னுருபே யெய்துபெய ரீற்றின் றிரிபு குன்றன் மிகுத லியல்பயற் றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே. சூ-ம், எட்டாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) எட்டனுருபே - எட்டாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற் றுமைக்கு உருபாவது, எய்து பெயரீற்றின் - விளி ஏற்கும் பெயரின் ஈற்றது, திரிபு குன்றல் மிகுதல் - திரிதலும் கெடுதலும் மிகுதலும், இயல்பயற் றிரிபுமாம் - இயல்பாதலும் அயனின்றதன் திரிவுமாம்; பொருள் - அதற்குப் பொருள், படர்க்கையோரை - படர்க்கையிடத் தாரை, தன் முகமாகத் தானழைப்பதுவே - ஒருவன் தனக்கு எதிர்முக மாகத் தான் அழைக்கை என்றவாறு அரும்பதவுரை: “எய்துபெயர்" எனவே எய்தாத பெயரும் உள என்பதாம்; அவை போக்கிச் சொல்லு தும். “படர்க்கையோரை" எனவே தன்மை முன்னிலையார் ஈண்டே விலக்கப்பட்டார். (46) விளியேற்கும் பெயர்கள் 303. இ உ ஊவோ டையோ ன ளரல யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு ணஃகா னாவி றாகும் பொதுப்பெயர் ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன. சூ-ம், மேல் விளியேற்கும் பெயரென்றார்; அவை இவையெனத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்) இ உ ஊவோ டையோ ன ள ரலய - இ உ ஊ ஐ ஓ ன ளர ல ய என்னும், ஈற்றுயர்திணை - இப்பத்து எழுத்தும் ஈறாகவுடைய உயர்திணைப் பெயரும், ஓரவல் லிவற்றொடு - ஓகாரமும் ரகாரமு மான இரண்டு எழுத்தும் ஒழித்து நின்ற எட்டெழுத்துடனே, ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர் - ணகரமும் ஆகாரமுங்கூட இப்பத் தெழுத்தும் ஈறாகவுடைய பொதுப்பெயரும், ஞநவொழி யனைத்தீற் ற ஃறிணை - ஞகரமும் நகரமும் ஒழித்து ஒழிந்த இருபத்தொரு எழுத் தும் ஈறாகவுடைய அஃறிணைப் பெயரும், விளிப்பன - விளி ஏற்பன வாம் என்றவாறு. 1.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 173 ) எட்டாம் வேற்றுமை 302. எட்ட னுருபே யெய்துபெய ரீற்றின் றிரிபு குன்றன் மிகுத லியல்பயற் றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே . சூ - ம் எட்டாம் வேற்றுமை இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) எட்டனுருபே - எட்டாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற் றுமைக்கு உருபாவது எய்து பெயரீற்றின் - விளி ஏற்கும் பெயரின் ஈற்றது திரிபு குன்றல் மிகுதல் - திரிதலும் கெடுதலும் மிகுதலும் இயல்பயற் றிரிபுமாம் - இயல்பாதலும் அயனின்றதன் திரிவுமாம் ; பொருள் - அதற்குப் பொருள் படர்க்கையோரை - படர்க்கையிடத் தாரை தன் முகமாகத் தானழைப்பதுவே - ஒருவன் தனக்கு எதிர்முக மாகத் தான் அழைக்கை என்றவாறு அரும்பதவுரை : எய்துபெயர் எனவே எய்தாத பெயரும் உள என்பதாம் ; அவை போக்கிச் சொல்லு தும் . படர்க்கையோரை எனவே தன்மை முன்னிலையார் ஈண்டே விலக்கப்பட்டார் . ( 46 ) விளியேற்கும் பெயர்கள் 303. ஊவோ டையோ ளரல யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு ணஃகா னாவி றாகும் பொதுப்பெயர் ஞநவொழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன . சூ - ம் மேல் விளியேற்கும் பெயரென்றார் ; அவை இவையெனத் தொகுத்துக் கூறுகின்றது . ( - ள் ) ஊவோ டையோ ரலய - ளர என்னும் ஈற்றுயர்திணை - இப்பத்து எழுத்தும் ஈறாகவுடைய உயர்திணைப் பெயரும் ஓரவல் லிவற்றொடு - ஓகாரமும் ரகாரமு மான இரண்டு எழுத்தும் ஒழித்து நின்ற எட்டெழுத்துடனே ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர் - ணகரமும் ஆகாரமுங்கூட இப்பத் தெழுத்தும் ஈறாகவுடைய பொதுப்பெயரும் ஞநவொழி யனைத்தீற் ஃறிணை - ஞகரமும் நகரமும் ஒழித்து ஒழிந்த இருபத்தொரு எழுத் தும் ஈறாகவுடைய அஃறிணைப் பெயரும் விளிப்பன - விளி ஏற்பன வாம் என்றவாறு . 1 .