அபிதான சிந்தாமணி

கிருஷ்ணது வபாயனன் - 447 கிருஷ்ணன் வும் காக்கும்படி ஒப்புவித்துச் சென்ற னன், அரசன், இந்தப் பார்ப்பினிக்கும் அவள் குழந்தைக்கும் ஆறு மாதத்திய ஆகா ரம் வைத்து வீட்டை முத்திரையிட்டு மறைந்தனன். யாத்திரை சென்ற வேதி யன் சில நாள் பொறுத்துத் திரும்பி மனை வியை யொப்புவிக்கக் கேட்க அரசன் நினைவுதோன்றி வீட்டைத் திறந்து பார்க் கையில் பார்ப்பினியும் குழந்தையும் இறந் திருக்கக் கண்டு திருவேங்கடஞ் சென்று திருமால் அங்கிரகத்தால் இருவரையும் உயிர்ப்பித்தவன், (திருவேங்கடத்தல - புராணம்.) கிருஷ்ணதுவபாயனன் - வியாசன். | கிருஷ்ணதேவராயர் - தொண்டை மண்ட லத்துச் சிற்றரசர், இவர் சபையில் விக டர் வேளாண்மகளிரைப்போல் நடித்த மையால் வேளாளர் கோபித்து இவரை மாய்த்தனர். இவர்மீது ஞானப்பிரகாச சுவாமிகள் கலம்பகஞ்செய் தனர். இவர்க்கு மந்திரி அம்பி அறம்வளர்த்தான் முதலி யார். இவர், காஞ்சிபுரத்தில் ஏகாம்பா நாதருக்குக் கோபுரமுதலிய திருப்பணிகள் செய்து வைத்தனர். இவர் காலம் சாலி வாகன சகம் (கச கூ). இவரைச் சந்திர கிரி ராசா என்பர். கிருஷ்ணமிரர் - ஒரு அத்வைத பிராமணர் - தேசிகருடன் வாதிட்டுத் தோற்றவர். கிருஷ்ணபாயன் - இவன் விஜயநகரம் ஆண் டவன், இவன் பிரபுடதேவராசாவிலிரு ந்து கசுவது அரசன். கிருஷ்ணராஜன் - 1. இவன் இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு நேசன். சூடாமணி நிகண்டில் புகழப்பட்டவன். 2. செஞ்சியை யாண்ட அரசன், கிருஷ்ண ர் - சுகர் புத்தர். கிருஷ்ணவேணி - ஒரு தீர்த்தம். கிருஷ்ணன்-1, ஆவணிமீ கிருஷ்ணபக்ஷம், அஷ்டமிதிதி, உரோகணி நக்ஷத்திரத்தில் வசுதேவருக்குத் தேவ கிவயிற்றில் திரு வவதரித்தவர். இவர் தமது பஞ்சாயுதத் துடன் தரிசனங்காட்டி அவ்விருகுரவரின் முற்பிறப் புணர்த்தித் தம்மை நந்தகோபர் மனைவியிடம்விடக் கட்டளையிட்டு அந்த ஆயர்பாடியில் வளர்ந்து வந்தனர். இவர் குழந்தைப் பருவத்தில், பூதனை, சகடா சுரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்று, கர்க்கியமுனிவரால் நாமகரணஞ் செயப்பெற்று, கோபிகைகளின், நவநீதம் உண்டு, தெருவில் மற்றக் குழந்தைகள் போல் மண் தின்றதைக்கண்ட தாய் பய முறுத்த அவளுக்கு இல்லையென்று தமது வாயைத் திறந்து தம்மிலடங்கிய அண் டங்க ளனைத்தையுங் காட்டினவர். இவர் வீடுவிட்டுத் தவழ்ந்து போதலைத் தடுக்கத் தாய் தாம்பினால் இடுப்பில் கட்ட அத்தாம் புகள் தமது இடுப்பிற்குப் பற்றாமைகாட் டிப் பிறகு அவள் உரலில் தாம்பினால் கட் டத் தவழ்ந்து மருதமரமாயிருந்த நளகூபா மணிக்கிரீவர்களுக்கு நற்கதி தந்து, நாவற் பழக்காரிக்கு அரிசியிட்டு மாணிக்கமாக்கி, கன்றுரு வடைந்துவந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக்கொன்று, கொக் குருவடைந்த பகாசுரனை வாய் பிளந்து, மலைப்பாம் புருக்கொண்ட அகாசுரன் வாயுட்புகுந்து கொன்று, பிரமன் மாயை யால் மறைத்த குமரர்களுக்கும் கன்றுக ளுக்கும் அந்தந்த வுருக்கொண்டு அந்தந்த வீட்டிலிருந்து, யமுனை நதியிலிருந்த களிங்கமடுவின் சலத்தை யுண்டிறந்த கோபாலரையுயிர்ப்பித்துத் தாம், அந்தமடு விற் குதித்து அவனுடன் தொந்த யுத்தம் செய்து கர்வ பங்கப்படுத்தி ஆயர்குறை முடித்து, காளியனென்னும் மடுக்கரை யில் வந்திருந்தவர்களைச் சூழ்ந்து தகிக்க வந்த காட்டுத் தீயை விழுங்கிப் பின்னொரு முறை காட்டுத் திக்குப் பயந்த கோபா லருக்கு அபயந்தந்து அவர்களைக் கண்ணை மூடச்செய்து தாமே அதனை விழுங்கி, அந்த ஆரண்யத்தை நீங்கிப் பாண்டீரம் என்னும் ஆலடி வந்து கோபாலரை யிந்தி ரனுக்கு யாகாதி கிர்த்தியங்கள் செய்யா திருக்கும்படி தடை செய்து, அதனால் கோபித்து இந்திரன் பெய்வித்த மழை யைக் கோவர்த்தன த்தைக் குடையாகத் தூக்கித் தடுத்துக் காத்து, காமதேனுவா லும் இந்திரனாலும் கோவிந்த பட்டாபி ஷேக மடைந்து, வருணப்பிரத்தியனால் கவரப்பட்ட நந்தகோபரை அவ்வுலகஞ் சென்று மீட்டுத் தந்து, தமது உலகை நந்தகோபருக்கும் கோபாலருக்கும் மடு வில் காட்டி, அம்பிகைபூசைக்குச் சென்ற நந்தகோபரை விழுங்கிய பாம்பைக் காலா லுந்தி நந்தகோபரை மீட்டவர். பின்னும் கோபிகைகளைக் கவர்ந்த சங்கசூடனைக் கொன்று சிரோமணியைப் பலராமருக் குக் கொடுத்து மகிழ்ந்தவர். இடபவுருக் கொண்ட அரிஷ்டனைக் கொம்பைப் பிடி
கிருஷ்ணது வபாயனன் - 447 கிருஷ்ணன் வும் காக்கும்படி ஒப்புவித்துச் சென்ற னன் அரசன் இந்தப் பார்ப்பினிக்கும் அவள் குழந்தைக்கும் ஆறு மாதத்திய ஆகா ரம் வைத்து வீட்டை முத்திரையிட்டு மறைந்தனன் . யாத்திரை சென்ற வேதி யன் சில நாள் பொறுத்துத் திரும்பி மனை வியை யொப்புவிக்கக் கேட்க அரசன் நினைவுதோன்றி வீட்டைத் திறந்து பார்க் கையில் பார்ப்பினியும் குழந்தையும் இறந் திருக்கக் கண்டு திருவேங்கடஞ் சென்று திருமால் அங்கிரகத்தால் இருவரையும் உயிர்ப்பித்தவன் ( திருவேங்கடத்தல - புராணம் . ) கிருஷ்ணதுவபாயனன் - வியாசன் . | கிருஷ்ணதேவராயர் - தொண்டை மண்ட லத்துச் சிற்றரசர் இவர் சபையில் விக டர் வேளாண்மகளிரைப்போல் நடித்த மையால் வேளாளர் கோபித்து இவரை மாய்த்தனர் . இவர்மீது ஞானப்பிரகாச சுவாமிகள் கலம்பகஞ்செய் தனர் . இவர்க்கு மந்திரி அம்பி அறம்வளர்த்தான் முதலி யார் . இவர் காஞ்சிபுரத்தில் ஏகாம்பா நாதருக்குக் கோபுரமுதலிய திருப்பணிகள் செய்து வைத்தனர் . இவர் காலம் சாலி வாகன சகம் ( கச கூ ) . இவரைச் சந்திர கிரி ராசா என்பர் . கிருஷ்ணமிரர் - ஒரு அத்வைத பிராமணர் - தேசிகருடன் வாதிட்டுத் தோற்றவர் . கிருஷ்ணபாயன் - இவன் விஜயநகரம் ஆண் டவன் இவன் பிரபுடதேவராசாவிலிரு ந்து கசுவது அரசன் . கிருஷ்ணராஜன் - 1 . இவன் இரண்டாம் விக்ரமாதித்தனுக்கு நேசன் . சூடாமணி நிகண்டில் புகழப்பட்டவன் . 2 . செஞ்சியை யாண்ட அரசன் கிருஷ்ண ர் - சுகர் புத்தர் . கிருஷ்ணவேணி - ஒரு தீர்த்தம் . கிருஷ்ணன் - 1 ஆவணிமீ கிருஷ்ணபக்ஷம் அஷ்டமிதிதி உரோகணி நக்ஷத்திரத்தில் வசுதேவருக்குத் தேவ கிவயிற்றில் திரு வவதரித்தவர் . இவர் தமது பஞ்சாயுதத் துடன் தரிசனங்காட்டி அவ்விருகுரவரின் முற்பிறப் புணர்த்தித் தம்மை நந்தகோபர் மனைவியிடம்விடக் கட்டளையிட்டு அந்த ஆயர்பாடியில் வளர்ந்து வந்தனர் . இவர் குழந்தைப் பருவத்தில் பூதனை சகடா சுரன் திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்று கர்க்கியமுனிவரால் நாமகரணஞ் செயப்பெற்று கோபிகைகளின் நவநீதம் உண்டு தெருவில் மற்றக் குழந்தைகள் போல் மண் தின்றதைக்கண்ட தாய் பய முறுத்த அவளுக்கு இல்லையென்று தமது வாயைத் திறந்து தம்மிலடங்கிய அண் டங்க ளனைத்தையுங் காட்டினவர் . இவர் வீடுவிட்டுத் தவழ்ந்து போதலைத் தடுக்கத் தாய் தாம்பினால் இடுப்பில் கட்ட அத்தாம் புகள் தமது இடுப்பிற்குப் பற்றாமைகாட் டிப் பிறகு அவள் உரலில் தாம்பினால் கட் டத் தவழ்ந்து மருதமரமாயிருந்த நளகூபா மணிக்கிரீவர்களுக்கு நற்கதி தந்து நாவற் பழக்காரிக்கு அரிசியிட்டு மாணிக்கமாக்கி கன்றுரு வடைந்துவந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக்கொன்று கொக் குருவடைந்த பகாசுரனை வாய் பிளந்து மலைப்பாம் புருக்கொண்ட அகாசுரன் வாயுட்புகுந்து கொன்று பிரமன் மாயை யால் மறைத்த குமரர்களுக்கும் கன்றுக ளுக்கும் அந்தந்த வுருக்கொண்டு அந்தந்த வீட்டிலிருந்து யமுனை நதியிலிருந்த களிங்கமடுவின் சலத்தை யுண்டிறந்த கோபாலரையுயிர்ப்பித்துத் தாம் அந்தமடு விற் குதித்து அவனுடன் தொந்த யுத்தம் செய்து கர்வ பங்கப்படுத்தி ஆயர்குறை முடித்து காளியனென்னும் மடுக்கரை யில் வந்திருந்தவர்களைச் சூழ்ந்து தகிக்க வந்த காட்டுத் தீயை விழுங்கிப் பின்னொரு முறை காட்டுத் திக்குப் பயந்த கோபா லருக்கு அபயந்தந்து அவர்களைக் கண்ணை மூடச்செய்து தாமே அதனை விழுங்கி அந்த ஆரண்யத்தை நீங்கிப் பாண்டீரம் என்னும் ஆலடி வந்து கோபாலரை யிந்தி ரனுக்கு யாகாதி கிர்த்தியங்கள் செய்யா திருக்கும்படி தடை செய்து அதனால் கோபித்து இந்திரன் பெய்வித்த மழை யைக் கோவர்த்தன த்தைக் குடையாகத் தூக்கித் தடுத்துக் காத்து காமதேனுவா லும் இந்திரனாலும் கோவிந்த பட்டாபி ஷேக மடைந்து வருணப்பிரத்தியனால் கவரப்பட்ட நந்தகோபரை அவ்வுலகஞ் சென்று மீட்டுத் தந்து தமது உலகை நந்தகோபருக்கும் கோபாலருக்கும் மடு வில் காட்டி அம்பிகைபூசைக்குச் சென்ற நந்தகோபரை விழுங்கிய பாம்பைக் காலா லுந்தி நந்தகோபரை மீட்டவர் . பின்னும் கோபிகைகளைக் கவர்ந்த சங்கசூடனைக் கொன்று சிரோமணியைப் பலராமருக் குக் கொடுத்து மகிழ்ந்தவர் . இடபவுருக் கொண்ட அரிஷ்டனைக் கொம்பைப் பிடி