அபிதான சிந்தாமணி

உணவாதி வகைகள் 231 உணவாதி வகைகள் அமைந்த பாகசாலையில் சமைப்போன் அசோகியாய்த் தேகபுஷ்டி யுள்ளானாய், பதார்த்த இலக்ஷணம் அறிந்தவனாய், நற் குலத் துதித்தவனாய் உள்ளவன், தான் ஸ்நானஞ்செய்து அரையில் சிறு துண்டும் மேலில் சிறு துண்டும் உடையவனாய்ச் சிகையை நன்றாய்த்தட்டி உதறி அவிழா முடியிட்டு நகங்களை நன்றாகச் சுத்திசெய்து கைகால் அலம்பி அடுக்களையில் பிரவே சித்துச் சுத்தபாத்திரங்களாகிய பாகபாத் திரங்களை உபயோகப்படுத்த வேண்டும். பாகபாத்திரங்களுக்கு உரிய கருவிகளா வன. அகப்பை , கரண்டி , உரல், முறம், சல்லடை, அம்மி, குழவி, மாக்குழவி, இருப்புவாணா, சில்லிக்கரண்டி, அரிவாள் மணை முதலிய. பித்தளைப் பாத்திரங்கள் இருக்கின் ஈயம் பூசப்பட்டனவாக இருத் தல் வேண்டும். சாதம் சமைக்கும் லக்ஷண மாவது : செம்மையாகக் குத்தித் தவிடு போக்கிய அரிசியை உமி, கல் முதலிய இல்லாமல் பலமுறை அலம்பி, அதன் குற்றங்கள் நீங்கும் அளவும் அரித்துப் பின் தூய்மையை உடையதென அறிந்து அரிசியிலும் மூன்று பாகங் கொள்ளத்தக்க அளவுள்ள பாத்திரத்தில் வைத்த உலையில் அரிசியை ஒருமிக்கப் பெய்து அடிக்கடி துழாவிப் பதத்தில் பாலாவது நெய்யா வது சிறிது விட்டுத் துழாவி வடிப்பதத்தில் வடி தட்டால் வடிகுழிக்கு மேலிட்டு வடி த்து விடல் வேண்டும். வடித்த சாதத்தில் கஞ்சியிருக்கு மேல் சோகத்தை விளைக்கு மாதலின் அக்கஞ்சி சுவறச் சிறிது நெரு ப்பை வெளியிற்றள்ளி அதன்மீது சாத பாத்திரத்தை வடியுமட்டும் வைத்தல் தகுதியாம். இவ்வகை சமைக்காத அன் னம், எண்வகைக் குற்றங்களுக்குள்ளாகி உண்பவனை ரோகியாக்கும். அதற்கு எண் வகைத் தோஷங்களாவன : அஸ்திரீதம். பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷுமிதம், தக்தம், வீரூபம், அநர்த்து ஜம் என்பன வாம். இவற்றுள் அஸ்திரீதம், கஞ்சி சுற் றிக்கொண்ட அன்னம். இதைப் புசிப் போர்க்கு ஆமயம் முதலிய ரோகங்களுண் டாம். பிச்சளம், அளிந்த அன்னம், இதைப் புசிப்போர்க்குக் குன்மாதிரோகங் களுண்டாம். அசுசி, புழு, மயிர், சேர்ந்த அன்னம், இதைப் புசிப்போர்க்கு வாய்தீர் ஒழுகல் உண்டாம். குவதிகம், நருக்கரிசி பட்ட அன்னம் இதைப் புசிப்போர்க்கு அஜீரண ரோகமுண்டாம். சுஷமி தம், சிறிது வெந்தும் வேகாத அன்னம், இதைப் புசிப்போர்க்கு இரத்தபீடனம் உண்டா கும். தக்தமாவது காந்தின அன்னம், இதைப் புசிப்போர்க்கு இந்திரிய நாச முண்டாம். விரூபம் விறைத்த அன்னம், இதைப் புசிப்போர்க்கு ஆயுள்க்ஷணம் உண் டாகும். அனர்த்துஜம் பழஞ்சாதம், இதை உண்போர்க்கு அதி நித்திரை சீதாதிரோ கங்கள் உண்டாம். இவ்வகை அன்னமும், பலகாரங்களும் சமைக்கும் அரிசியாவன. ஈர்க்குச் சம்பா, புழுகு சம்பா, கைவரைச் சம்பா, செஞ்சம்பா, மல்லிகைச்சம்பா, குண்டுசம்பா. இலுப்பைப்பூச்சம்பா, மணிச் சம்பா, வளை தடிச் சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுசம்பா, சீரகச்சம்பா, காளான் சம்பா, மைச்சம்பா, கோடைச் சம்பா, காடைச் சம்பா, குன்று மணிச் சம்பா, அன்னமழகி அரிசி, கார் அரிசி, மணக்கத்தை அரிசி வாலான், கருங்குரு வை, சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமை யரிசி, கம்பரிசி, சாமையரிசி, தினையரிசி, சோள அரிசி, வரகரிசி, கேழ்வரகரிசி; இவையன்றிக் கேடி லிச்சம்பா, கவிங்கஞ் சம்பா, கனகம் சம்பா, கலப்புச்சம்பா, கம் பஞ்சம்பா, காடைக்கழுத்தன் சம்பா, கோ டன் சம்பா, பாசடைச்சம்பா, சன்னசம்பா, சின்னசம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக் காய்ச்சம்பா, சுகு தாச்சம்பா, செம்பாளைச் சம்பா, சொரியஞ்சம்பா, திருவாங்கச்சம் பா, துய்யமல்லிகைச்சம்பா, பாலாஞ்சம்பா, பெருஞ்சம்பா, பேய்வள்ளைச்சம்பா, பை கோச்சம்பா, மங்கஞ்சம்பா, மணல்வாரிக் சம்பா, மலைகுலிக்கிச்சம்பா, மாவாம்பைச் சம்பா, முனைவெள்ளைச்சம்பா, கார்த்தி கைக்கார், முட்டைக்கார், சித்திரைக் கார், கருமோசனம், 'வெள்ளை மோசனம், வால்மோசனம், பொச்சாரி, அருஞ்சோதி, இரங்கமாட்டான், ஈசரக்கோவை, பிச்ச வாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட் டரிசி , குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்கவரிசி முதலிய பலவாம், இவற்றால் பலவி தமாகிய சுத்தான்னங்கள், சித்ரான்னங்கள், பலகாரங்கள் செய்து இலைக்கறிகள், காய்கள், பிஞ்சுகள், கனி கள், பயறுகள் முதலியவற்றை ஐங்காய மிட்டுச் சமைத்த இணையுடன் அருந்துக. அவவாறு அருந்தின உடற்கு நோய்கள் வரா,
உணவாதி வகைகள் 231 உணவாதி வகைகள் அமைந்த பாகசாலையில் சமைப்போன் அசோகியாய்த் தேகபுஷ்டி யுள்ளானாய் பதார்த்த இலக்ஷணம் அறிந்தவனாய் நற் குலத் துதித்தவனாய் உள்ளவன் தான் ஸ்நானஞ்செய்து அரையில் சிறு துண்டும் மேலில் சிறு துண்டும் உடையவனாய்ச் சிகையை நன்றாய்த்தட்டி உதறி அவிழா முடியிட்டு நகங்களை நன்றாகச் சுத்திசெய்து கைகால் அலம்பி அடுக்களையில் பிரவே சித்துச் சுத்தபாத்திரங்களாகிய பாகபாத் திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் . பாகபாத்திரங்களுக்கு உரிய கருவிகளா வன . அகப்பை கரண்டி உரல் முறம் சல்லடை அம்மி குழவி மாக்குழவி இருப்புவாணா சில்லிக்கரண்டி அரிவாள் மணை முதலிய . பித்தளைப் பாத்திரங்கள் இருக்கின் ஈயம் பூசப்பட்டனவாக இருத் தல் வேண்டும் . சாதம் சமைக்கும் லக்ஷண மாவது : செம்மையாகக் குத்தித் தவிடு போக்கிய அரிசியை உமி கல் முதலிய இல்லாமல் பலமுறை அலம்பி அதன் குற்றங்கள் நீங்கும் அளவும் அரித்துப் பின் தூய்மையை உடையதென அறிந்து அரிசியிலும் மூன்று பாகங் கொள்ளத்தக்க அளவுள்ள பாத்திரத்தில் வைத்த உலையில் அரிசியை ஒருமிக்கப் பெய்து அடிக்கடி துழாவிப் பதத்தில் பாலாவது நெய்யா வது சிறிது விட்டுத் துழாவி வடிப்பதத்தில் வடி தட்டால் வடிகுழிக்கு மேலிட்டு வடி த்து விடல் வேண்டும் . வடித்த சாதத்தில் கஞ்சியிருக்கு மேல் சோகத்தை விளைக்கு மாதலின் அக்கஞ்சி சுவறச் சிறிது நெரு ப்பை வெளியிற்றள்ளி அதன்மீது சாத பாத்திரத்தை வடியுமட்டும் வைத்தல் தகுதியாம் . இவ்வகை சமைக்காத அன் னம் எண்வகைக் குற்றங்களுக்குள்ளாகி உண்பவனை ரோகியாக்கும் . அதற்கு எண் வகைத் தோஷங்களாவன : அஸ்திரீதம் . பிச்சளம் அசுசி குவதிதம் சுஷுமிதம் தக்தம் வீரூபம் அநர்த்து ஜம் என்பன வாம் . இவற்றுள் அஸ்திரீதம் கஞ்சி சுற் றிக்கொண்ட அன்னம் . இதைப் புசிப் போர்க்கு ஆமயம் முதலிய ரோகங்களுண் டாம் . பிச்சளம் அளிந்த அன்னம் இதைப் புசிப்போர்க்குக் குன்மாதிரோகங் களுண்டாம் . அசுசி புழு மயிர் சேர்ந்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு வாய்தீர் ஒழுகல் உண்டாம் . குவதிகம் நருக்கரிசி பட்ட அன்னம் இதைப் புசிப்போர்க்கு அஜீரண ரோகமுண்டாம் . சுஷமி தம் சிறிது வெந்தும் வேகாத அன்னம் இதைப் புசிப்போர்க்கு இரத்தபீடனம் உண்டா கும் . தக்தமாவது காந்தின அன்னம் இதைப் புசிப்போர்க்கு இந்திரிய நாச முண்டாம் . விரூபம் விறைத்த அன்னம் இதைப் புசிப்போர்க்கு ஆயுள்க்ஷணம் உண் டாகும் . அனர்த்துஜம் பழஞ்சாதம் இதை உண்போர்க்கு அதி நித்திரை சீதாதிரோ கங்கள் உண்டாம் . இவ்வகை அன்னமும் பலகாரங்களும் சமைக்கும் அரிசியாவன . ஈர்க்குச் சம்பா புழுகு சம்பா கைவரைச் சம்பா செஞ்சம்பா மல்லிகைச்சம்பா குண்டுசம்பா . இலுப்பைப்பூச்சம்பா மணிச் சம்பா வளை தடிச் சம்பா கோரைச்சம்பா குறுஞ்சம்பா மிளகுசம்பா சீரகச்சம்பா காளான் சம்பா மைச்சம்பா கோடைச் சம்பா காடைச் சம்பா குன்று மணிச் சம்பா அன்னமழகி அரிசி கார் அரிசி மணக்கத்தை அரிசி வாலான் கருங்குரு வை சவ்வரிசி மூங்கிலரிசி கோதுமை யரிசி கம்பரிசி சாமையரிசி தினையரிசி சோள அரிசி வரகரிசி கேழ்வரகரிசி ; இவையன்றிக் கேடி லிச்சம்பா கவிங்கஞ் சம்பா கனகம் சம்பா கலப்புச்சம்பா கம் பஞ்சம்பா காடைக்கழுத்தன் சம்பா கோ டன் சம்பா பாசடைச்சம்பா சன்னசம்பா சின்னசம்பா சிறுமணிச் சம்பா சுரைக் காய்ச்சம்பா சுகு தாச்சம்பா செம்பாளைச் சம்பா சொரியஞ்சம்பா திருவாங்கச்சம் பா துய்யமல்லிகைச்சம்பா பாலாஞ்சம்பா பெருஞ்சம்பா பேய்வள்ளைச்சம்பா பை கோச்சம்பா மங்கஞ்சம்பா மணல்வாரிக் சம்பா மலைகுலிக்கிச்சம்பா மாவாம்பைச் சம்பா முனைவெள்ளைச்சம்பா கார்த்தி கைக்கார் முட்டைக்கார் சித்திரைக் கார் கருமோசனம் ' வெள்ளை மோசனம் வால்மோசனம் பொச்சாரி அருஞ்சோதி இரங்கமாட்டான் ஈசரக்கோவை பிச்ச வாரி செம்பாளை கல்லுண்டையரிசி புட் டரிசி குளிப்பியரிசி குச்சலாடியரிசி கௌரிகுங்கவரிசி முதலிய பலவாம் இவற்றால் பலவி தமாகிய சுத்தான்னங்கள் சித்ரான்னங்கள் பலகாரங்கள் செய்து இலைக்கறிகள் காய்கள் பிஞ்சுகள் கனி கள் பயறுகள் முதலியவற்றை ஐங்காய மிட்டுச் சமைத்த இணையுடன் அருந்துக . அவவாறு அருந்தின உடற்கு நோய்கள் வரா