அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1818 முகமத்நபி நாள் பட்டும், உயிருடனே ஒரு சிலர் கொல்லப் பட்டும், அம்முஸ்லிம்களுள் ஒருவரேனும் இஸ்லாத்தைவிட்டுப் பிரிந்து விடவில்லை எனவே, அந்தக் குறைஷிகள் தங்களுடைய விக்கிரஹ ஆராதனைக்கும், வேறு பலதெய் வக் கொள்கைக்கும், தாங்கள் வகித்துவந்த மக்காவின் தலைமைப் பதவிக்கும் பேராப த்து விளைந்துவிட்டதெனக்கண்டு, இச்சன் மார்க்க முயற்சியை அடியோடு கல்லியெ றிந்துவிடுவதே சாலச் சிறந்ததெனக்கொ ண்டு, அதற்குரிய ஏற்பாடுகளை யெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். இவ்வாறு அந் தக் குறைஷிகள் செய்துவந்த பல சாம பேத தான தண்டங்களாலெல்லாம் அம் முஸ்லிம்களை ஒறுத்துப்பார்த்தும் ஒன் றும் பலியாது போய்விட்டமைகண்டு, அம் மக்காவாசிகள் சில தூதர்களை யனுப்பி நபிபெருமானுக்குப் பொன்னும், பெண் ணும், அரசபதவியுங் கூட அளிப்பதாகக் கூறினார்கள். இதற்கும் அந்தத் தீர்க்க தரிசி இணங்கி வராதது கண்டு, அவர்கள் அபூத்தாலிப்பிடம் சென்று, இந்த இயக்கம் இனி நிறுத்தப்படாவிடின் உள் நாட்டுக் கலகமே அதிகம் விளையுமென்று பயமுறு த்தினார்கள். அது சமயம் அபூத்தாலிப் வேண்டிக்கொண்டதற்கு நபிபெருமான், எதிரிகள் சூரியனைக் கொணர்ந்து தம் வல க்கரத்திலும், சந்திரனைக் கொணர்ந்து தம் இடக்கரத்திலும் வைத்தபோதிலும் தம் முடைய சத்திய சன்மார்க்கப் பிரசாரத்தை ஒரு சிறிதும் விட்டுவிட முடியாதென்றும், இம்முயற்சியில் இறுதிவரை வெற்றியே பெறாவிட்டால் தாம் மடிந்து தீருவதே ஷாத்தென்றும் உறுதிகூறினார். இவ்வாறு எல்லாம் ஒன்றும் பலியாதது கண்ட குறை ஷியரின் கொடுமை இன்னும் பன்மடங்கு மகா உக்கிரத்துடனே தலை விரித்தாடத் தொடங்கிற்று, ஆதலின், அவர்களுடைய இன்னல்களைச் சகிக்க இயலாது நபிப்பட் டம் வந்தபின் 5-வது ஆண்டில் 15 ஆண் களும் பெண்களும் சேர்ந்து செங்கடல் கடந்து அபிஸ்ஸீனியாவில் இருந்த நஜ் ஜாஷி என்னும் மன்னனது பாதுகாப்பிற் குள் சென்று தங்கிவிட்டார்கள். அப்பொ ழுதும் அவர்களைச் சும்மா விடாது குறைஷி கள் சிலரை அந்த மன்னனிடம் அனுப்பி அம் முஸ்லிம்களைத் திருப்பிக்கொண்டு வரு மாறு கட்டளையிட்டார்கள். ஆனால், அந்த நஜ்ஜாஷி மன்னன் வாதிப்பிரதிவாதிகளின் கட்சிகளைக்கேட்டுச் சன்மார்க்கர்களாகிய அம்முஸ்லிம்களைத் துன்மார்க்கர்களாகிய அந்தக் குறைஷியரிடம் திருப்பிக் கொடுப் பது முடியாதென்று மறுத்துவிட்டான். அதன்பின் சிறுகச் சிறுக 101, முஸ்லிம் ஆண் பெண்கள் வரை அந்த அபிஸ்ௗனி யாவுக்கே சென்று புகலிடம் தேடிக்கொண் டார்கள். பிறகு அபூஜஹ்ல் என்னும் கொடிய துஷ்டன் நபிபெருமானை ஒரு உதிரம் சொரிய அடித்துவிட்ட செய்திகேட்டு முஹம்மத் நபியின் சிறிய தந் தையாகிய ஹம்ஜாவும் அந்த அபூஜஹ்லைப் பதிலுக்குத் தமது தனுஸைக் கொண்ட டித்துவிட்டு இஸ்லாத்திலே சேர்ந்து கொ ண்டார். இச்செய்திகேட்ட குறைஷிக ளெல்லோரும் ஆத்திரமதிகம் கொண்டு விட்டார்கள். ஆதலின், அபூஜஹ்ல் உம ரென்னும் வாலிபரை அழைத்து முஹம் மதைக் கொன்று விட்டுவந்தால் தக்க சன் மானம் அளிப்பதாகக் கூறினான். ஆனால், ஆண்டவனது நாட்டம் வேறுவி தமாயிருந்த தனால், முஹம்மதைக் கொல்லச்சென்ற அந்த உமரே (பிறகு உலகப்பிரசித்தி பெற்று இரண்டாவது கலீபாவாய் விளங் கியவர்) தீனுல், இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார். இச்செய்தியும் கேட்டு அக் குறைஷியர் பட்ட அவதிக்கோர் அள வில்லை. அவ் விரோதிகள் எல் லாரும் சேர்ந்து கொண்டு முஹம்மத் நபி யையும் அவரைச் சேர்ந்த முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதார் ஆகிய எல்லா பனூஹா ஷிம் குடும்பத்தினரையும் ஒரு மலைக்கண வாய்க்குள்ளே அடைத்து மூன்றாண்டுகள் வரை ஜாதிக்கட்டென்னும் கட்டுப்பாட்டுக் குள்ளே ஒடுக்கிவைத்து விட்டார்கள். அந்த 3 ஆண் செழியும் வரை அவ்வடை பட்ட மக்கள் பட்டுவந்த பாட்டிற்கோர் அளவு சொல்லி முடியாது. இறுதியில் ஒரு சில மக்கா வாலிபர்களால் அக்கட்டுப் பாட்டுச் சீட்டுக்கிழித்தெறியப்பட்டு அடை பட்டிருந்தவர்களெல்லாரும் விடுதலை செய் யப்பட்டார்கள். அதன் பின் நபிப்பட்டம் வந்த 10-வது ஆண்டில் அபூத்தாலியும், கதீஜாப் பிராட்டியும் காலகதியடைந்து விட்டார்கள். இதனால் நபிபெருமானுக்குப் பக்கபலமென்பது ஒரு சிறிது அம் மக்காவின் கண் தளர்வுறத் தலைப்பட்டது ஈண்டு எதிரிகளும் அதிகம் துள்ளத் தொடங்கி விட்டார்கள். முஹம்மத் நபி
முகமத்நபி 1818 முகமத்நபி நாள் பட்டும் உயிருடனே ஒரு சிலர் கொல்லப் பட்டும் அம்முஸ்லிம்களுள் ஒருவரேனும் இஸ்லாத்தைவிட்டுப் பிரிந்து விடவில்லை எனவே அந்தக் குறைஷிகள் தங்களுடைய விக்கிரஹ ஆராதனைக்கும் வேறு பலதெய் வக் கொள்கைக்கும் தாங்கள் வகித்துவந்த மக்காவின் தலைமைப் பதவிக்கும் பேராப த்து விளைந்துவிட்டதெனக்கண்டு இச்சன் மார்க்க முயற்சியை அடியோடு கல்லியெ றிந்துவிடுவதே சாலச் சிறந்ததெனக்கொ ண்டு அதற்குரிய ஏற்பாடுகளை யெல்லாம் எடுத்துக்கொண்டார்கள் . இவ்வாறு அந் தக் குறைஷிகள் செய்துவந்த பல சாம பேத தான தண்டங்களாலெல்லாம் அம் முஸ்லிம்களை ஒறுத்துப்பார்த்தும் ஒன் றும் பலியாது போய்விட்டமைகண்டு அம் மக்காவாசிகள் சில தூதர்களை யனுப்பி நபிபெருமானுக்குப் பொன்னும் பெண் ணும் அரசபதவியுங் கூட அளிப்பதாகக் கூறினார்கள் . இதற்கும் அந்தத் தீர்க்க தரிசி இணங்கி வராதது கண்டு அவர்கள் அபூத்தாலிப்பிடம் சென்று இந்த இயக்கம் இனி நிறுத்தப்படாவிடின் உள் நாட்டுக் கலகமே அதிகம் விளையுமென்று பயமுறு த்தினார்கள் . அது சமயம் அபூத்தாலிப் வேண்டிக்கொண்டதற்கு நபிபெருமான் எதிரிகள் சூரியனைக் கொணர்ந்து தம் வல க்கரத்திலும் சந்திரனைக் கொணர்ந்து தம் இடக்கரத்திலும் வைத்தபோதிலும் தம் முடைய சத்திய சன்மார்க்கப் பிரசாரத்தை ஒரு சிறிதும் விட்டுவிட முடியாதென்றும் இம்முயற்சியில் இறுதிவரை வெற்றியே பெறாவிட்டால் தாம் மடிந்து தீருவதே ஷாத்தென்றும் உறுதிகூறினார் . இவ்வாறு எல்லாம் ஒன்றும் பலியாதது கண்ட குறை ஷியரின் கொடுமை இன்னும் பன்மடங்கு மகா உக்கிரத்துடனே தலை விரித்தாடத் தொடங்கிற்று ஆதலின் அவர்களுடைய இன்னல்களைச் சகிக்க இயலாது நபிப்பட் டம் வந்தபின் 5 - வது ஆண்டில் 15 ஆண் களும் பெண்களும் சேர்ந்து செங்கடல் கடந்து அபிஸ்ஸீனியாவில் இருந்த நஜ் ஜாஷி என்னும் மன்னனது பாதுகாப்பிற் குள் சென்று தங்கிவிட்டார்கள் . அப்பொ ழுதும் அவர்களைச் சும்மா விடாது குறைஷி கள் சிலரை அந்த மன்னனிடம் அனுப்பி அம் முஸ்லிம்களைத் திருப்பிக்கொண்டு வரு மாறு கட்டளையிட்டார்கள் . ஆனால் அந்த நஜ்ஜாஷி மன்னன் வாதிப்பிரதிவாதிகளின் கட்சிகளைக்கேட்டுச் சன்மார்க்கர்களாகிய அம்முஸ்லிம்களைத் துன்மார்க்கர்களாகிய அந்தக் குறைஷியரிடம் திருப்பிக் கொடுப் பது முடியாதென்று மறுத்துவிட்டான் . அதன்பின் சிறுகச் சிறுக 101 முஸ்லிம் ஆண் பெண்கள் வரை அந்த அபிஸ்ௗனி யாவுக்கே சென்று புகலிடம் தேடிக்கொண் டார்கள் . பிறகு அபூஜஹ்ல் என்னும் கொடிய துஷ்டன் நபிபெருமானை ஒரு உதிரம் சொரிய அடித்துவிட்ட செய்திகேட்டு முஹம்மத் நபியின் சிறிய தந் தையாகிய ஹம்ஜாவும் அந்த அபூஜஹ்லைப் பதிலுக்குத் தமது தனுஸைக் கொண்ட டித்துவிட்டு இஸ்லாத்திலே சேர்ந்து கொ ண்டார் . இச்செய்திகேட்ட குறைஷிக ளெல்லோரும் ஆத்திரமதிகம் கொண்டு விட்டார்கள் . ஆதலின் அபூஜஹ்ல் உம ரென்னும் வாலிபரை அழைத்து முஹம் மதைக் கொன்று விட்டுவந்தால் தக்க சன் மானம் அளிப்பதாகக் கூறினான் . ஆனால் ஆண்டவனது நாட்டம் வேறுவி தமாயிருந்த தனால் முஹம்மதைக் கொல்லச்சென்ற அந்த உமரே ( பிறகு உலகப்பிரசித்தி பெற்று இரண்டாவது கலீபாவாய் விளங் கியவர் ) தீனுல் இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார் . இச்செய்தியும் கேட்டு அக் குறைஷியர் பட்ட அவதிக்கோர் அள வில்லை . அவ் விரோதிகள் எல் லாரும் சேர்ந்து கொண்டு முஹம்மத் நபி யையும் அவரைச் சேர்ந்த முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதார் ஆகிய எல்லா பனூஹா ஷிம் குடும்பத்தினரையும் ஒரு மலைக்கண வாய்க்குள்ளே அடைத்து மூன்றாண்டுகள் வரை ஜாதிக்கட்டென்னும் கட்டுப்பாட்டுக் குள்ளே ஒடுக்கிவைத்து விட்டார்கள் . அந்த 3 ஆண் செழியும் வரை அவ்வடை பட்ட மக்கள் பட்டுவந்த பாட்டிற்கோர் அளவு சொல்லி முடியாது . இறுதியில் ஒரு சில மக்கா வாலிபர்களால் அக்கட்டுப் பாட்டுச் சீட்டுக்கிழித்தெறியப்பட்டு அடை பட்டிருந்தவர்களெல்லாரும் விடுதலை செய் யப்பட்டார்கள் . அதன் பின் நபிப்பட்டம் வந்த 10 - வது ஆண்டில் அபூத்தாலியும் கதீஜாப் பிராட்டியும் காலகதியடைந்து விட்டார்கள் . இதனால் நபிபெருமானுக்குப் பக்கபலமென்பது ஒரு சிறிது அம் மக்காவின் கண் தளர்வுறத் தலைப்பட்டது ஈண்டு எதிரிகளும் அதிகம் துள்ளத் தொடங்கி விட்டார்கள் . முஹம்மத் நபி