அபிதான சிந்தாமணி

பகவதியார் | - 1001 பகழிக்கூத்தர் ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம, அவ தந்திரம், அவதானம், விவர் தாசியம் என் னும் (கஅ) வித வாதரோகங்களைத் தரு தற்கு ஒரு வித்தாகும் என்க. பகவதியார் - திருஞான சம்பந்த சுவாமிக ளுக்குத் தாய். சிவபாத இருதயருக்குத் தேவியார். | பகவத்கீதை - அருச்சுநன் பொருட்டுக் கண்ணன் உபதேசித்த ஞானயோக நூல். பகவன் - பெருஞ்சாகரன் புதல்வன். இவன் காசியாத்திரையின் பொருட்டுப் புறப்ப ட்டு மேலூர் அகரத்தில் தங்கினன். அவ் விடம் ஒரு பெண் வர அவளைப் புலைச்சி யென்று சட்டுவத்தால் அடித்துத் துரத் திக் காசியாத்திரை சென்று மீண்டு மறு படி அச்சத்திரம் வந்து தங்கி முன் சட்டு வத்தடியுண்ட பெண்ணைக்கண்டு மயல் பூண்டு அவளை வளர்த்தவரிடஞ் சென்று அவளை மணந்து மங்கலஸ்நானத்தின் பொ ருட்டு அவள் மயிரைவகிர்ந்து தாம் அடித்த அடியைக் கண்டு இவள் ஆதியாளென்று ஒடுகையில் அவளும் பின்றொடா இரு வரும் பாணர்சேரியில் ஒரு மண்டபத்திற் புணர்ந்தனர். இவ்விருவருக்கும் ஒளவை பிறந்தனள். கணவனுடன் செல்லவேண்டி ஆதி, குழந்தையை விட மனமிலாது மயங் குகையில் அக்குழந்தை என்னைவிட்டு நீங்க மயங்கற்க எனக் கவிகூறக் கேட்டு அப் புறம் கணவனுடன் சென்று பல இரவுகள் தங்கி ஆங்காங்கு உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளி, திருவள்ளுவர் முதவிய வரையும் பெற்று விட்டுச் சென்ற வன். இவனுக்கு ஞாளிதத்தன் எனவம் பெயர். பகவான் - ஐச்வரியம், வீரியம், புகழ், திரு ஞானம், வைராக்கியம் இவ்வாறு பெருங் குணங்களையுடைய கடவுளுக்குப் பெயர். பகழிக்கூத்தர் - இவர் சேதுமன்னர் அர சாட்சிக்குள்ளாகிய செம்பிநாட்டைச் சேர் ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பிரா மண குலத்தினராகிய தர்ப்பா தனரென்னு மறையவ ரருந்தவத்தால் அவருக்கு மைந்த ராகப் பிறந்து வளர்ந்து தமிழிலக்கிய விலக்கணங்களையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவராய் எல்லாரும் நன்கு மதிக்கத் தக்க வித்துவானாக விளங்கி யிருந்தனர். அங்கனமிருக்குங் காலத்தி லொருநாள் வயிற்று வலி நோயாற் பீடிக்கப்பட்டு பெரி தும் வருந்தி அந்நோய் நீங்குதற்குத் தக்க 126 மருந்துகள் பலவாகவுண்டும் ரீங்காமையால் இனி எம்பெருமானாகிய திருச்செந்தூரி லெழுந்தருளியிருக்குங் குமாரக்கடவுளைப் பாடி இந்கோயைத் தீர்த்துக்கொள்ளுவே னென்று நினைத்துப் பிரார்த்தித்து அக் கடவுள் மீது திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் எனப் பெயரிய பிரபந்தத்தைப் பாடி முடித்து நோய் நீங்கப் பெற்று மன மகிழ்ச்சியடைந்து திருவருளை வியந்து திருச்செந்தூருக்குச் சென்று முருகக்கட வுளைத் தரிசனஞ்செய்து அவர் சந்ததியிலே அநேக வித்வான்களும், அடியார்களும் குழ இருந்து அரங்கேற்றி ஆனந்த பரவச மடைந்து ஆராதித்தனர். பின்னர் சபையி லிருந்தவர் பகழிக்கூத்தருக்குச் செய்ய வேண்டிய மரியாதையொன்றேனும் செய் யாமற் பராமுகமாக இருந்துவிட்டனர். அங்கன மிருத்தற்குக் காரணம் இவர் வைணவரா யிருந்ததென்று சிலர் கூறுவர். பகழிக்கூத்தர் சபையார் செய்யு மரியாதை யைப் பொருட்படுத்தாது தமதிருப்பிடஞ் சென்று நித்திரை செய்வாராயினர். குமா சக்கடவுள் பகழிக்கூத்தாதுமெய்யன்பைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது திருமார்பில் விசேஷாலங்காரமாகச் சாத் தப்பெற்றிருந்த விலையுயர்ந்த மாணிக்கப் பதக்கத்தைக் கொண்டுவந்து நித்திரை செய்து சயனித்திருந்த பகழிக்கூத்தாது மார்பி லணிந்துவிட்டுச் சென்றனர். மறு நாள் திருவனந்தற் பூசைசெய்யவந்த பெரி யவர்களுங் கோவிலதிகாரிகளுஞ் சுவாமி மார்பிலிருந்த பதக்கத்தைக் காணாமல் மதி மயங்கி இதைத் திருடிச்சென்றவன் யாவ னென்று ஊரெங்குந் தேடுவாராய் எங்கும் காணாமல் பகழிக்கூத்தாது மார்பிலிருக்கக் கண்டு, இக்காரியஞ் செய்தவன் உயிர் தொறு மொளித்திருந்த நம் குமாரக்கட வுளேயன்றி வேறில்லையென்று முன்னை நாள் நிகழ்ச்சியாலறிந்து பகழிக்கூத்தரை வணங்கி உம்முடைய பெருமையை அறியா திருந்த எங்கள் அபராதத்தைப் பொறுத் துக்கொள்ளல் வேண்டுமென்று பிரார்த் தித்துப் பல்லக்கிலேற்றி அநேக விருது கள், வாத்தியங்கள் சூழ வெகு விநோதமாக நகர்வலஞ் செய்வித்துச் சாமி சந்நிதானத் திற் கொண்டுபோய்த் தீர்த்தம், விபூதி, சந்தனம், மாலை, பரிவட்டம் முதலியவை களா லுபசரித்தனுப்பினர். இவரைச் செங் குந்தர் மரபினர் என்றுங் கூறுகின் ஊர்.
பகவதியார் | - 1001 பகழிக்கூத்தர் ஊர்த்துவம் சம்பூகம் அவபேதம அவ தந்திரம் அவதானம் விவர் தாசியம் என் னும் ( கஅ ) வித வாதரோகங்களைத் தரு தற்கு ஒரு வித்தாகும் என்க . பகவதியார் - திருஞான சம்பந்த சுவாமிக ளுக்குத் தாய் . சிவபாத இருதயருக்குத் தேவியார் . | பகவத்கீதை - அருச்சுநன் பொருட்டுக் கண்ணன் உபதேசித்த ஞானயோக நூல் . பகவன் - பெருஞ்சாகரன் புதல்வன் . இவன் காசியாத்திரையின் பொருட்டுப் புறப்ப ட்டு மேலூர் அகரத்தில் தங்கினன் . அவ் விடம் ஒரு பெண் வர அவளைப் புலைச்சி யென்று சட்டுவத்தால் அடித்துத் துரத் திக் காசியாத்திரை சென்று மீண்டு மறு படி அச்சத்திரம் வந்து தங்கி முன் சட்டு வத்தடியுண்ட பெண்ணைக்கண்டு மயல் பூண்டு அவளை வளர்த்தவரிடஞ் சென்று அவளை மணந்து மங்கலஸ்நானத்தின் பொ ருட்டு அவள் மயிரைவகிர்ந்து தாம் அடித்த அடியைக் கண்டு இவள் ஆதியாளென்று ஒடுகையில் அவளும் பின்றொடா இரு வரும் பாணர்சேரியில் ஒரு மண்டபத்திற் புணர்ந்தனர் . இவ்விருவருக்கும் ஒளவை பிறந்தனள் . கணவனுடன் செல்லவேண்டி ஆதி குழந்தையை விட மனமிலாது மயங் குகையில் அக்குழந்தை என்னைவிட்டு நீங்க மயங்கற்க எனக் கவிகூறக் கேட்டு அப் புறம் கணவனுடன் சென்று பல இரவுகள் தங்கி ஆங்காங்கு உப்பை அதிகமான் உறுவை கபிலர் வள்ளி திருவள்ளுவர் முதவிய வரையும் பெற்று விட்டுச் சென்ற வன் . இவனுக்கு ஞாளிதத்தன் எனவம் பெயர் . பகவான் - ஐச்வரியம் வீரியம் புகழ் திரு ஞானம் வைராக்கியம் இவ்வாறு பெருங் குணங்களையுடைய கடவுளுக்குப் பெயர் . பகழிக்கூத்தர் - இவர் சேதுமன்னர் அர சாட்சிக்குள்ளாகிய செம்பிநாட்டைச் சேர் ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பிரா மண குலத்தினராகிய தர்ப்பா தனரென்னு மறையவ ரருந்தவத்தால் அவருக்கு மைந்த ராகப் பிறந்து வளர்ந்து தமிழிலக்கிய விலக்கணங்களையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவராய் எல்லாரும் நன்கு மதிக்கத் தக்க வித்துவானாக விளங்கி யிருந்தனர் . அங்கனமிருக்குங் காலத்தி லொருநாள் வயிற்று வலி நோயாற் பீடிக்கப்பட்டு பெரி தும் வருந்தி அந்நோய் நீங்குதற்குத் தக்க 126 மருந்துகள் பலவாகவுண்டும் ரீங்காமையால் இனி எம்பெருமானாகிய திருச்செந்தூரி லெழுந்தருளியிருக்குங் குமாரக்கடவுளைப் பாடி இந்கோயைத் தீர்த்துக்கொள்ளுவே னென்று நினைத்துப் பிரார்த்தித்து அக் கடவுள் மீது திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் எனப் பெயரிய பிரபந்தத்தைப் பாடி முடித்து நோய் நீங்கப் பெற்று மன மகிழ்ச்சியடைந்து திருவருளை வியந்து திருச்செந்தூருக்குச் சென்று முருகக்கட வுளைத் தரிசனஞ்செய்து அவர் சந்ததியிலே அநேக வித்வான்களும் அடியார்களும் குழ இருந்து அரங்கேற்றி ஆனந்த பரவச மடைந்து ஆராதித்தனர் . பின்னர் சபையி லிருந்தவர் பகழிக்கூத்தருக்குச் செய்ய வேண்டிய மரியாதையொன்றேனும் செய் யாமற் பராமுகமாக இருந்துவிட்டனர் . அங்கன மிருத்தற்குக் காரணம் இவர் வைணவரா யிருந்ததென்று சிலர் கூறுவர் . பகழிக்கூத்தர் சபையார் செய்யு மரியாதை யைப் பொருட்படுத்தாது தமதிருப்பிடஞ் சென்று நித்திரை செய்வாராயினர் . குமா சக்கடவுள் பகழிக்கூத்தாதுமெய்யன்பைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது திருமார்பில் விசேஷாலங்காரமாகச் சாத் தப்பெற்றிருந்த விலையுயர்ந்த மாணிக்கப் பதக்கத்தைக் கொண்டுவந்து நித்திரை செய்து சயனித்திருந்த பகழிக்கூத்தாது மார்பி லணிந்துவிட்டுச் சென்றனர் . மறு நாள் திருவனந்தற் பூசைசெய்யவந்த பெரி யவர்களுங் கோவிலதிகாரிகளுஞ் சுவாமி மார்பிலிருந்த பதக்கத்தைக் காணாமல் மதி மயங்கி இதைத் திருடிச்சென்றவன் யாவ னென்று ஊரெங்குந் தேடுவாராய் எங்கும் காணாமல் பகழிக்கூத்தாது மார்பிலிருக்கக் கண்டு இக்காரியஞ் செய்தவன் உயிர் தொறு மொளித்திருந்த நம் குமாரக்கட வுளேயன்றி வேறில்லையென்று முன்னை நாள் நிகழ்ச்சியாலறிந்து பகழிக்கூத்தரை வணங்கி உம்முடைய பெருமையை அறியா திருந்த எங்கள் அபராதத்தைப் பொறுத் துக்கொள்ளல் வேண்டுமென்று பிரார்த் தித்துப் பல்லக்கிலேற்றி அநேக விருது கள் வாத்தியங்கள் சூழ வெகு விநோதமாக நகர்வலஞ் செய்வித்துச் சாமி சந்நிதானத் திற் கொண்டுபோய்த் தீர்த்தம் விபூதி சந்தனம் மாலை பரிவட்டம் முதலியவை களா லுபசரித்தனுப்பினர் . இவரைச் செங் குந்தர் மரபினர் என்றுங் கூறுகின் ஊர் .