சௌமிய சாகரம்

51 பண்ணப்பா பூசைவிதி தன்னைக் காணார் பார்மகனே அமைத்தவிதி சித்த மாச்சு நண்ணப்பாசித்தமுள்ள மதிதான் மைந்தா நடுவான பீடமடா அண்டத்துச்சி கண்ணப்பாதானிறைந்த உச்சி மீதிற் கமலமென்ற ஆயிரத்தெண் இதழினுள்ளே முன்னப்பா அமுர்தமது கண்விட் டோடும் மூர்க்கமுடன் அந்தமுர்த பூசை பண்ணே . 191) பண்ணடாசிவபூசைசத்தி பூசை பத்தியுள்ள சுத்தமதாய் வாலை பூசை நண்ணடா பூரணமாம் பூசையோடு நாதாந்தச் சோதியடாயேக பூசை கண்ணடாதவறாமற் பூசைசெய்யக் கருமானஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு விண்ணடா நிறைந்தமலர் கண்ணே சூட்சம் வேதாந்த சூட்சமதை விரும்பிக் கேளே. 192 விரும்பி மனங் கொண்டுசிவ பூசை கேளு வேதாந்த சின்மயத்தை மெய்யிற் கொண்டு வரும்பிறவி தனையகற்றும் சிவமே தென்றால் வரையுடனே சொல்லுகிறேன் அகார மார்க்கம் அருந்தவமாய் நின்றதொரு அகார பீடம் ஆரறியப் போறார்கள் ஆதி விந்து திருந்தியதோர் விந்துவென்றால் கெங்கை கெங்கை திருவான கெங்கையடா அமுர்தந்தானே. 193 தானான அமுர்தமடா அகார மாச்சு சங்கையுட னகாரமதைத் தானேதானாய் வானான கேசரிதை தியானம் பண்ணி வரிசையுடனுதயமதில் தியானம் செய்தால் ஊனான தேகமதில் நின்ற பீடை உத்தமனே அப்போதே விலகிப் போச்சு வீணானபீடையது விலகிப் போனால் வேதாந்த தேகமது சித்தி யாச்சே. 194
51 பண்ணப்பா பூசைவிதி தன்னைக் காணார் பார்மகனே அமைத்தவிதி சித்த மாச்சு நண்ணப்பாசித்தமுள்ள மதிதான் மைந்தா நடுவான பீடமடா அண்டத்துச்சி கண்ணப்பாதானிறைந்த உச்சி மீதிற் கமலமென்ற ஆயிரத்தெண் இதழினுள்ளே முன்னப்பா அமுர்தமது கண்விட் டோடும் மூர்க்கமுடன் அந்தமுர்த பூசை பண்ணே . 191 ) பண்ணடாசிவபூசைசத்தி பூசை பத்தியுள்ள சுத்தமதாய் வாலை பூசை நண்ணடா பூரணமாம் பூசையோடு நாதாந்தச் சோதியடாயேக பூசை கண்ணடாதவறாமற் பூசைசெய்யக் கருமானஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு விண்ணடா நிறைந்தமலர் கண்ணே சூட்சம் வேதாந்த சூட்சமதை விரும்பிக் கேளே . 192 விரும்பி மனங் கொண்டுசிவ பூசை கேளு வேதாந்த சின்மயத்தை மெய்யிற் கொண்டு வரும்பிறவி தனையகற்றும் சிவமே தென்றால் வரையுடனே சொல்லுகிறேன் அகார மார்க்கம் அருந்தவமாய் நின்றதொரு அகார பீடம் ஆரறியப் போறார்கள் ஆதி விந்து திருந்தியதோர் விந்துவென்றால் கெங்கை கெங்கை திருவான கெங்கையடா அமுர்தந்தானே . 193 தானான அமுர்தமடா அகார மாச்சு சங்கையுட னகாரமதைத் தானேதானாய் வானான கேசரிதை தியானம் பண்ணி வரிசையுடனுதயமதில் தியானம் செய்தால் ஊனான தேகமதில் நின்ற பீடை உத்தமனே அப்போதே விலகிப் போச்சு வீணானபீடையது விலகிப் போனால் வேதாந்த தேகமது சித்தி யாச்சே . 194