சௌமிய சாகரம்

பதிப்பாசிரியர் முன்னுரை அகத்தியர் நூலுக்கு மாற்றில்லை என்பார்கள். மருத்துவ மேதைகள் அறியவேண்டிய அறிந்த அடிமுடி அத்தனையும் முழுமையுடையது இந்நூல். தத்துவத்தில் சிறந்த சித்த மருத்துவர்கள் - மற்றைய மொழி மருத்துவர்களும் கற்க வேண்டிய நூலாகவே உள்ள பெருநூலாகும். இதற்குச் சுகத்தை அளிக்கக் கூடிய பெருங்கடல் வாகடம் எனக்கூறுவது பொருந்துமெனவே நம்புகிறேன். கடலுக்கு உவமை கடலேதான் கூற வேண்டியுள்ளது. கடலில் எல்லாம் கிடைக்கின்றன. விலை மதிப்பற்ற முத்துக்கள், மணிகள், கற்கள் என்பதுபோல் இதில் மனிதன் தன்னை , தான் சுமக்கும் உடலின் பூதக்கட்டுகள் ஐம்பூதக்கட்டுக்குள் இருக்கும் எலும்பு, மஞ்சை, இரத்தம் இவைகளின் கூற்றுக்கும், இயக்கத்திற்கும் காரண பூதங்கள் எவை எவை என்பனவெல்லாம் விளக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் சரியை கிரியை யோக ஞான வேதாந்த சாரங்களும் விவரிக்கப் பட்டுள்ளன. சித்தர்கள், ஞானிகள் மனித இனம் காணவேண்டிய அனுபவசாரங்கள் அத்தனையும் உள்ளன. நல் அறிஞர்கள் அனுபவித்து உணர வேண்டுகிறேன். திங்களொடும் செம்பரிதி தன்னோடும் விண்ணோடும் - உடுக்களோடும் - மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் என்று, தமிழ் மொழியின் தொன்மை குறித்துக் கூறப்படினும், தமிழ்மொழிகண்ட போராட்டங்கள் பல. ஒரு பக்கம் ஆங்கில ஆட்சியும் ஒரு பக்கம் பிறமொழிக் கலப்பு நெருக்கடியும் நேர்ந்ததால் அதுகண்ட ஆயகலைகள் அறுபத்து நான்கினில் தமிழ்மக்களின் நாகரீகம் பண்பாடு உண்ணல், உடுத்தல் முதலியவைகளுக்கு எடுத்துகாட்டாக, முதன்மையான சித்தர் கலையெனும் சித்தமருத்துவம், மருத்துவ நூல்கள் மறைந்தும், மாற்றம் படைத்தும் உலவியுள்ளன. இக்காலத்தில் இன்றும் முப்பு முடிக்கவும் கட்டுகள் கட்டுவதும் களங்குகள் காண்பதும் முற்றுப்பெறாது முயற்சியில் - ஆராய்ச்சியில் புறமருந்து - அகமருந்துகள் உள்ளன. இவை அனைத்தும் உள்ளன என்பதை ஆன்ற அறிஞர்கள் உணரக்கூடும்.
பதிப்பாசிரியர் முன்னுரை அகத்தியர் நூலுக்கு மாற்றில்லை என்பார்கள் . மருத்துவ மேதைகள் அறியவேண்டிய அறிந்த அடிமுடி அத்தனையும் முழுமையுடையது இந்நூல் . தத்துவத்தில் சிறந்த சித்த மருத்துவர்கள் - மற்றைய மொழி மருத்துவர்களும் கற்க வேண்டிய நூலாகவே உள்ள பெருநூலாகும் . இதற்குச் சுகத்தை அளிக்கக் கூடிய பெருங்கடல் வாகடம் எனக்கூறுவது பொருந்துமெனவே நம்புகிறேன் . கடலுக்கு உவமை கடலேதான் கூற வேண்டியுள்ளது . கடலில் எல்லாம் கிடைக்கின்றன . விலை மதிப்பற்ற முத்துக்கள் மணிகள் கற்கள் என்பதுபோல் இதில் மனிதன் தன்னை தான் சுமக்கும் உடலின் பூதக்கட்டுகள் ஐம்பூதக்கட்டுக்குள் இருக்கும் எலும்பு மஞ்சை இரத்தம் இவைகளின் கூற்றுக்கும் இயக்கத்திற்கும் காரண பூதங்கள் எவை எவை என்பனவெல்லாம் விளக்கப்பட்டுள்ளன . ஆதாரங்கள் சரியை கிரியை யோக ஞான வேதாந்த சாரங்களும் விவரிக்கப் பட்டுள்ளன . சித்தர்கள் ஞானிகள் மனித இனம் காணவேண்டிய அனுபவசாரங்கள் அத்தனையும் உள்ளன . நல் அறிஞர்கள் அனுபவித்து உணர வேண்டுகிறேன் . திங்களொடும் செம்பரிதி தன்னோடும் விண்ணோடும் - உடுக்களோடும் - மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் என்று தமிழ் மொழியின் தொன்மை குறித்துக் கூறப்படினும் தமிழ்மொழிகண்ட போராட்டங்கள் பல . ஒரு பக்கம் ஆங்கில ஆட்சியும் ஒரு பக்கம் பிறமொழிக் கலப்பு நெருக்கடியும் நேர்ந்ததால் அதுகண்ட ஆயகலைகள் அறுபத்து நான்கினில் தமிழ்மக்களின் நாகரீகம் பண்பாடு உண்ணல் உடுத்தல் முதலியவைகளுக்கு எடுத்துகாட்டாக முதன்மையான சித்தர் கலையெனும் சித்தமருத்துவம் மருத்துவ நூல்கள் மறைந்தும் மாற்றம் படைத்தும் உலவியுள்ளன . இக்காலத்தில் இன்றும் முப்பு முடிக்கவும் கட்டுகள் கட்டுவதும் களங்குகள் காண்பதும் முற்றுப்பெறாது முயற்சியில் - ஆராய்ச்சியில் புறமருந்து - அகமருந்துகள் உள்ளன . இவை அனைத்தும் உள்ளன என்பதை ஆன்ற அறிஞர்கள் உணரக்கூடும் .