சௌமிய சாகரம்

152 பூரணமாய் நின்றதொரு ரிஷி முனிவர் பொருந்திநின்ற ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக் காரணமாய்க் கருணையொளிப் பார்வை யாலே கனயோக மானசிவ தீட்சைகூடி, பாரணிந்த மீதினில னந்தங் கோடி பத்தியுடன் தானிருந்து பரத்திற் சென்று நேரணிந்து நிலையறிந்து நிலையில் நின்று நிசமான பூரணங்கண் டேறி னாரே. தெத்தம் ஏறியே பூரணத்திற் செல்லும் போது என்ன சொல்வேன் பிருதிவியைப் பிரமனுக்குத் தெத்தம் மாறியே அப்பதனை மாலினுக்குத் தெத்தம் மாகாகர் அக்கினியை ருத்திரற்குத் தெத்தம் தேறியே வாய்வுதனை மயேசுபரற்குத் தெத்தம் சிவசிவா ஆகாசந்தன்னைமைந்தா கூறியே சதாசிவற்குத் தெத்தம் பண்ணிக் கொண்டபின்பு அறிவுபூரணத்தைக் கேளே. 153 கேளப்பாரவிதனையே சூரியற்குத் தெத்தம் கிருபையுள்ள மதிதனையே சந்திரற்குத் தெத்தம் வாளப்பாசுடரான சோதிதனைமைந்தா மகத்தான செகசோதி யிடமே சேர்த்துச் சூளப்பா எங்குநின்ற பரத்தோடப்பா துலங்குதடா நட்சத்திரம் சோதி போலே காளப்பாதனையறிந்து யோகி யெல்லாங் கடாட்சமுடன் பராபரத்திற்கலந்தார்பாரே. 154 பாரப்பா உலகமெல்லாம் பரத்தினுட கூத்துப் பதிவான கூத்ததுவும் வாசியுட நேர்மை நேரப்பா வாசியது வன்னியுடன் கூடி நிசமான பூதவகை அஞ்சுண்டாச்சு பேரப்பா அஞ்சுவகைப் பூதத் தாலே பெருகிநின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறாய் வீறப்பாகொண்டரசந்தான்தானாக வேதாந்த முறைமைநெறியொன்று கேளே. 155
152 பூரணமாய் நின்றதொரு ரிஷி முனிவர் பொருந்திநின்ற ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக் காரணமாய்க் கருணையொளிப் பார்வை யாலே கனயோக மானசிவ தீட்சைகூடி பாரணிந்த மீதினில னந்தங் கோடி பத்தியுடன் தானிருந்து பரத்திற் சென்று நேரணிந்து நிலையறிந்து நிலையில் நின்று நிசமான பூரணங்கண் டேறி னாரே . தெத்தம் ஏறியே பூரணத்திற் செல்லும் போது என்ன சொல்வேன் பிருதிவியைப் பிரமனுக்குத் தெத்தம் மாறியே அப்பதனை மாலினுக்குத் தெத்தம் மாகாகர் அக்கினியை ருத்திரற்குத் தெத்தம் தேறியே வாய்வுதனை மயேசுபரற்குத் தெத்தம் சிவசிவா ஆகாசந்தன்னைமைந்தா கூறியே சதாசிவற்குத் தெத்தம் பண்ணிக் கொண்டபின்பு அறிவுபூரணத்தைக் கேளே . 153 கேளப்பாரவிதனையே சூரியற்குத் தெத்தம் கிருபையுள்ள மதிதனையே சந்திரற்குத் தெத்தம் வாளப்பாசுடரான சோதிதனைமைந்தா மகத்தான செகசோதி யிடமே சேர்த்துச் சூளப்பா எங்குநின்ற பரத்தோடப்பா துலங்குதடா நட்சத்திரம் சோதி போலே காளப்பாதனையறிந்து யோகி யெல்லாங் கடாட்சமுடன் பராபரத்திற்கலந்தார்பாரே . 154 பாரப்பா உலகமெல்லாம் பரத்தினுட கூத்துப் பதிவான கூத்ததுவும் வாசியுட நேர்மை நேரப்பா வாசியது வன்னியுடன் கூடி நிசமான பூதவகை அஞ்சுண்டாச்சு பேரப்பா அஞ்சுவகைப் பூதத் தாலே பெருகிநின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறாய் வீறப்பாகொண்டரசந்தான்தானாக வேதாந்த முறைமைநெறியொன்று கேளே . 155