சௌமிய சாகரம்

31 பாராளும் யோக்கியமா முனியே அய்யா பதிவான ரிஷிமுனிவர் சித்த ரெல்லாம் நேராக நின்றுதவம் பெற்ற பேரை நீள்புவியிற் பிறந்திடுவ தென்ற வாக்கியம் பேறாகச் சொல்லிமனக்கசடு நீக்கிப் பிறவாத நெறிகாட்டி அமுர்த மீந்து மாறாக அடிமையடைத் தாளு மென்று மார்க்கமுடன் அவர்பதத்தில் வணங்கினேனே. 112 வணங்கிமிக நிற்கையிலே வேதி யோனும் மகத்தான ஆதியந்த வரலாறு தன்னை மனங்குவிய யெந்தனுக்குச் சொன்னா ரய்யா மகத்தான ரகசியமடா மவுன ஞானம் எணங்கியதோர் அந்தரங்க மான சூட்சம் ஏகாந்த சூட்சமென்ற கதையைக் கேளு குணங்குறியு மாக்கியந்தக் குறியை நன்றாய்க் கூர்மையுடன் சொல்லுகிறேன் குணமாய்க் கேளே. 113 கேளப்பா நான் முகமாலிந்திர தேவர் கெடியான வேதமுதற் சமயத் தோருந் தேளப்பா தேடி அறியாத வஸ்து தெளிவானவெளியதுதான் பரம தாகுங் கேளப்பா பரமனுட வஸ்து தன்னைக் கிருபையுடன் அறிகுவதே ஆதி அந்தங் கேளப்பாஆதிவஸ்து மனுப்ப டைத்த கெதியைமிக அறிகுவதே விளக்கந்தானே. 14 தானென்ற ஆதியந்த விளக்கந்தன்னைச் சங்கையுடன் சொல்லுகிறேன் தயவாய்க் கேளு வானென்ற வுலகமதில் மைந்தாமைந்தா மகத்தான எழுவகையின் தோற்றந்தானுங் கோனென்ற செகமதிலே பிறக்கு முன்னே குருவான பரமிருந்து குறியை மைந்தா ஊனென்ற திருமுடியும் அடியுந் தன்னை உத்தமனே சொல்லுகிறேனுறுதி கேளே. 115
31 பாராளும் யோக்கியமா முனியே அய்யா பதிவான ரிஷிமுனிவர் சித்த ரெல்லாம் நேராக நின்றுதவம் பெற்ற பேரை நீள்புவியிற் பிறந்திடுவ தென்ற வாக்கியம் பேறாகச் சொல்லிமனக்கசடு நீக்கிப் பிறவாத நெறிகாட்டி அமுர்த மீந்து மாறாக அடிமையடைத் தாளு மென்று மார்க்கமுடன் அவர்பதத்தில் வணங்கினேனே . 112 வணங்கிமிக நிற்கையிலே வேதி யோனும் மகத்தான ஆதியந்த வரலாறு தன்னை மனங்குவிய யெந்தனுக்குச் சொன்னா ரய்யா மகத்தான ரகசியமடா மவுன ஞானம் எணங்கியதோர் அந்தரங்க மான சூட்சம் ஏகாந்த சூட்சமென்ற கதையைக் கேளு குணங்குறியு மாக்கியந்தக் குறியை நன்றாய்க் கூர்மையுடன் சொல்லுகிறேன் குணமாய்க் கேளே . 113 கேளப்பா நான் முகமாலிந்திர தேவர் கெடியான வேதமுதற் சமயத் தோருந் தேளப்பா தேடி அறியாத வஸ்து தெளிவானவெளியதுதான் பரம தாகுங் கேளப்பா பரமனுட வஸ்து தன்னைக் கிருபையுடன் அறிகுவதே ஆதி அந்தங் கேளப்பாஆதிவஸ்து மனுப்ப டைத்த கெதியைமிக அறிகுவதே விளக்கந்தானே . 14 தானென்ற ஆதியந்த விளக்கந்தன்னைச் சங்கையுடன் சொல்லுகிறேன் தயவாய்க் கேளு வானென்ற வுலகமதில் மைந்தாமைந்தா மகத்தான எழுவகையின் தோற்றந்தானுங் கோனென்ற செகமதிலே பிறக்கு முன்னே குருவான பரமிருந்து குறியை மைந்தா ஊனென்ற திருமுடியும் அடியுந் தன்னை உத்தமனே சொல்லுகிறேனுறுதி கேளே . 115