சௌமிய சாகரம்

292 தானென்ற பூரணத்தின் சமாதி கேளு தரணிதனில் அறியார்கள் வெளியாய்ச் சொல்வேன் கோனென்ற அகாரமுடன் உகாரந் தொட்டுக் குருவான மகாரமொடு மூன்றுங் கூட்டி வானென்ற சஞ்சார சமாதி பண்ணும் வகையுடனே சிவதவத்தில் வணங்கி நில்லு ஊனென்ற அறிவுகொண்டு யோகம் பாரு உண்மையுள்ள மெஞ்ஞானம் உறுதி பாரே. 1101 உறுதிபார் புலத்தியனே சொல்வே னையா உற்றதொரு மூலத்தில் ஓமென் றேற்றிச் சுருதிமுடி வானபிரமதானந்தன்னில் சுத்தமுள்ள நங்இங்கென்றே வாங்கிக் கருதிப்பார் மாலினுட வீட்டில் வந்து கனமான மார்க்கமுடன் ஊங்கென்றேத்தித் துரிதம்பார் ருத்திரனில் சிங்றீங் கென்றே சொல்மயேஸ் வரனில்வங்றிங்கென்றோதே. 1102 ஓதியே மேல்நோக்கிச்சதாசிவத்தில் அப்பா உயரவே அங்சங் கென்றே நில்லு வாது செய்யும் வாசியைநீ மேலே வாங்கி மகத்தான அண்டவெளிதன்னில் நின்றால் வேதமுறை சுழுனையின்மையந் தன்னில் மேலான யோகமுடன் மந்தி ரங்கள் ஆதியென்ற பிராணாய ஞான போத மாம்முரசு பூரணமாம் அறிந்து கொள்ளே. 1103 அறிந்து கொண்டு யோகமதில் இருக்கும் போது அப்பனே கோமுகாசனம தாகிப் பிரிந்து கொண்டு மறுசத்தங் கேளாவில்லம் பிசகாமல் தவறாமல் இருந்து கொண்டு அறிந்து மனம் வேறுநினைப் பில்லா மற்றான் வங்குசிங்கு வாசலிலே மணிநாவுன்னிச் சொரிந்திடுமே அமுர்தரசம் சுழற்றல் மைந்தா துடராதே நமனும்வல் பிணியுந்தானே. 1104
292 தானென்ற பூரணத்தின் சமாதி கேளு தரணிதனில் அறியார்கள் வெளியாய்ச் சொல்வேன் கோனென்ற அகாரமுடன் உகாரந் தொட்டுக் குருவான மகாரமொடு மூன்றுங் கூட்டி வானென்ற சஞ்சார சமாதி பண்ணும் வகையுடனே சிவதவத்தில் வணங்கி நில்லு ஊனென்ற அறிவுகொண்டு யோகம் பாரு உண்மையுள்ள மெஞ்ஞானம் உறுதி பாரே . 1101 உறுதிபார் புலத்தியனே சொல்வே னையா உற்றதொரு மூலத்தில் ஓமென் றேற்றிச் சுருதிமுடி வானபிரமதானந்தன்னில் சுத்தமுள்ள நங்இங்கென்றே வாங்கிக் கருதிப்பார் மாலினுட வீட்டில் வந்து கனமான மார்க்கமுடன் ஊங்கென்றேத்தித் துரிதம்பார் ருத்திரனில் சிங்றீங் கென்றே சொல்மயேஸ் வரனில்வங்றிங்கென்றோதே . 1102 ஓதியே மேல்நோக்கிச்சதாசிவத்தில் அப்பா உயரவே அங்சங் கென்றே நில்லு வாது செய்யும் வாசியைநீ மேலே வாங்கி மகத்தான அண்டவெளிதன்னில் நின்றால் வேதமுறை சுழுனையின்மையந் தன்னில் மேலான யோகமுடன் மந்தி ரங்கள் ஆதியென்ற பிராணாய ஞான போத மாம்முரசு பூரணமாம் அறிந்து கொள்ளே . 1103 அறிந்து கொண்டு யோகமதில் இருக்கும் போது அப்பனே கோமுகாசனம தாகிப் பிரிந்து கொண்டு மறுசத்தங் கேளாவில்லம் பிசகாமல் தவறாமல் இருந்து கொண்டு அறிந்து மனம் வேறுநினைப் பில்லா மற்றான் வங்குசிங்கு வாசலிலே மணிநாவுன்னிச் சொரிந்திடுமே அமுர்தரசம் சுழற்றல் மைந்தா துடராதே நமனும்வல் பிணியுந்தானே . 1104