சௌமிய சாகரம்

கண்டதொரு சகலகலை வேதந் தன்னைக் கடைந்தெடுத்துச்சவுமியசாகரமாய் பாடிக் கொண்டதொரு சூத்திரத்தைக் குருமுன்வைத்தேன் குருவான என்குருவும் நன்றாய்ப் பார்த்து விண்டதொரு சாகரந்தான் ஆதி சூட்சம் விளம்பரிது விளம்பரிது பதனம் பண்ணி அண்டகே சரமதிலே தவஞ்செய் யென்று ஆதிகுரு வேதியருஞ் சொன்னார் பாரே. 12 பாரப்பா சொல்மொழிகள் தவறொண்ணாது பக்தியுடன் உத்தரவு பெற்று வந்தால் நேரப்பாசவுமியமாம் பொருளுஞ் சொல்லி நிசமான சாகரத்தி னிலையுங் கூட்டித் தேரப்பாவென்று காயாதி யீந்து செய்ததொரு சாத்திரமும் மீவோமென்று மேரப்பாமேருநடு முடியிற் சென்றேன் விளம்பியதோர் சவுமியத்தைச் சொல்லக் கேளே! 13 சொல்லக்கேள் சவுமியசாகரத்தை மைந்தா சுகமான வடமொழியைத் தமிழ்தான் செய்தான் அல்லக்கே ளாதிமுதற் சொன்ன நூலின் அரிதரிது இதன் பெருமை யாருங் காணார் விள்ளக்கேள் வேதமென்ற சவுமியத்தை மேலான பதவியென்று பதனம் பண்ணி உள்ளத்திற் றன்னொளிவு போலே நீயும் உண்மையுடன் அந்திசந்தி பூசை பண்ணே ! 14 பண்ணப்பாசவுமியத்தைப் பூசை பண்ணு பரிவான சாகரத்தை யறிந்து கொள்ளு என்னப்பாவென்றுதன்னை மறந்தி டாதே யிகபரசாதனமுழுது மிதிலே சித்தி முன்னப்பா சொன்னசாத்தி ரங்க ளெல்லாம் முன்பின்னாய்ப் பூரணத்திற் சொக்கிச் சொன்னேன் கண்ணப்பா கண்மணிபோலிந்த நால்தான் கயிலாசமேருகிரித் தீபமாச்சே!
கண்டதொரு சகலகலை வேதந் தன்னைக் கடைந்தெடுத்துச்சவுமியசாகரமாய் பாடிக் கொண்டதொரு சூத்திரத்தைக் குருமுன்வைத்தேன் குருவான என்குருவும் நன்றாய்ப் பார்த்து விண்டதொரு சாகரந்தான் ஆதி சூட்சம் விளம்பரிது விளம்பரிது பதனம் பண்ணி அண்டகே சரமதிலே தவஞ்செய் யென்று ஆதிகுரு வேதியருஞ் சொன்னார் பாரே . 12 பாரப்பா சொல்மொழிகள் தவறொண்ணாது பக்தியுடன் உத்தரவு பெற்று வந்தால் நேரப்பாசவுமியமாம் பொருளுஞ் சொல்லி நிசமான சாகரத்தி னிலையுங் கூட்டித் தேரப்பாவென்று காயாதி யீந்து செய்ததொரு சாத்திரமும் மீவோமென்று மேரப்பாமேருநடு முடியிற் சென்றேன் விளம்பியதோர் சவுமியத்தைச் சொல்லக் கேளே ! 13 சொல்லக்கேள் சவுமியசாகரத்தை மைந்தா சுகமான வடமொழியைத் தமிழ்தான் செய்தான் அல்லக்கே ளாதிமுதற் சொன்ன நூலின் அரிதரிது இதன் பெருமை யாருங் காணார் விள்ளக்கேள் வேதமென்ற சவுமியத்தை மேலான பதவியென்று பதனம் பண்ணி உள்ளத்திற் றன்னொளிவு போலே நீயும் உண்மையுடன் அந்திசந்தி பூசை பண்ணே ! 14 பண்ணப்பாசவுமியத்தைப் பூசை பண்ணு பரிவான சாகரத்தை யறிந்து கொள்ளு என்னப்பாவென்றுதன்னை மறந்தி டாதே யிகபரசாதனமுழுது மிதிலே சித்தி முன்னப்பா சொன்னசாத்தி ரங்க ளெல்லாம் முன்பின்னாய்ப் பூரணத்திற் சொக்கிச் சொன்னேன் கண்ணப்பா கண்மணிபோலிந்த நால்தான் கயிலாசமேருகிரித் தீபமாச்சே !