சௌமிய சாகரம்
151
போடப்பாகவசமது நன்றாய்ச் செய்து
புத்தியுடன் மண்டலஞ்சென்றெடுத்துப் பாரு
நாடப்பாகவசமதை எடுத்துப் பார்க்க
நாதாந்த அண்டமது கட்டிப் போகுங்
கூடப்பாகட்டிநின்ற அண்டம் வாங்கிக்
கொடிதான பாஷாணந்தனக்குப் பூசி
ஆடப்பா ரவிதனிலே வைத்துப் பார்க்க
அறுபத்தி நால்வருந்தான் அடங்கும் பாரே. 574
சகலமும் கட்டினம் உருக்கினம்
பாரப்பா அடங்கிமிகக் கட்டிப் போகும்
பரிவான உபரசங்கள் நீறிப் போகும்
பேரப்பாகொண்டதொரு காரசாரம்
பிலமான அண்டமதால் மெழுகு மாகும்
ஆரப்பா அறிவார்கள் அண்டக் கூறு
அண்டமென்ற கேசரியை கண்டோன் காண்பாள்
நேரப்பா நின்றநிலை அண்ட மாச்சு
நிலையாது அண்டம்வெகு மாய மாச்சே. 575
ஆச்சப்பா மாயமென்ற அண்டத்துள்ளே
அடங்கிநின்ற ரவிமதியின் கூற்றைக் கேளு
மூச்சப்பா அடங்கிநின்ற வேகத்தாலே
மூழங்கிநின்ற உயிர்ப்பயிர்கள் மூர்க்கங் கொண்டு
நீச்சப்பா நிலைக்கநிலை காணாமற்றான்
நின்றிலங்கும் ரவிமதியில் அடங்கிப் போச்சு
பேச்சப்பா பேசினதும் ரவிமதியினாலே
பிலங்குறைந்து போனதுவும் ரவிமதிதான் காணே. 576
151
போடப்பாகவசமது
நன்றாய்ச்
செய்து
புத்தியுடன்
மண்டலஞ்சென்றெடுத்துப்
பாரு
நாடப்பாகவசமதை
எடுத்துப்
பார்க்க
நாதாந்த
அண்டமது
கட்டிப்
போகுங்
கூடப்பாகட்டிநின்ற
அண்டம்
வாங்கிக்
கொடிதான
பாஷாணந்தனக்குப்
பூசி
ஆடப்பா
ரவிதனிலே
வைத்துப்
பார்க்க
அறுபத்தி
நால்வருந்தான்
அடங்கும்
பாரே
.
574
சகலமும்
கட்டினம்
உருக்கினம்
பாரப்பா
அடங்கிமிகக்
கட்டிப்
போகும்
பரிவான
உபரசங்கள்
நீறிப்
போகும்
பேரப்பாகொண்டதொரு
காரசாரம்
பிலமான
அண்டமதால்
மெழுகு
மாகும்
ஆரப்பா
அறிவார்கள்
அண்டக்
கூறு
அண்டமென்ற
கேசரியை
கண்டோன்
காண்பாள்
நேரப்பா
நின்றநிலை
அண்ட
மாச்சு
நிலையாது
அண்டம்வெகு
மாய
மாச்சே
.
575
ஆச்சப்பா
மாயமென்ற
அண்டத்துள்ளே
அடங்கிநின்ற
ரவிமதியின்
கூற்றைக்
கேளு
மூச்சப்பா
அடங்கிநின்ற
வேகத்தாலே
மூழங்கிநின்ற
உயிர்ப்பயிர்கள்
மூர்க்கங்
கொண்டு
நீச்சப்பா
நிலைக்கநிலை
காணாமற்றான்
நின்றிலங்கும்
ரவிமதியில்
அடங்கிப்
போச்சு
பேச்சப்பா
பேசினதும்
ரவிமதியினாலே
பிலங்குறைந்து
போனதுவும்
ரவிமதிதான்
காணே
.
576