சௌமிய சாகரம்

85 ஆரூட சமாதி காணவே ஆரூட சமாதி தன்னைக் காலறிந்து புலத்தியனே சொல்லக் கேளு! பூணவே தத்வலய சமாதி பெற்றுக் புகழான சவ்விகற்ப சமாதி பெற்றுப் பேணவே நிருவிற்ப சமாதி பெற்றுப் பிலமாகச் சஞ்சாரசமாதி யாகித் தோணவே யாரூடசமாதி கொண்டால் சுத்தமென்ன அசுத்தமென்னரெண்டு மொன்றே 316 ஒன்றான ஆரூடசமாதி கேளு உருமையுள்ள புலத்தியனே அருமையாகக் கண்டதொரு காட்சியெல்லாம் அநித்ய மென்றுங் கால்மடித்து நடுவேறி முடிமே லாக விண்டதொரு பஞ்சறிவை யறிவால் நீக்கி வேதாந்தப் பரவெளியில் வேளிதன் னோடே நின்றாடிக் கொண்டு சிவ யோகியாகி நின்றதினாலாரூட சமாதி யாச்சே. 317 ஆச்சப்பா சமாதியஞ்சும் நன்றாய்ச்சொன்னோம் ஆதிதொடுத் தந்தவரை நன்றாய்ப் பாரு பேச்சப்பாதானறிந்து நன்றாய்ப் பாரு பெருகிநின்ற அஷ்டாங்கந் திட்டம் பாரு மூச்சப்பாமுன்னிலையாய் நிறுத்திக் கொண்டு முத்தியுள்ள நவக்கிரக சூட்சங் கண்டு பாச்சப்பா அனுக்கிரக பதியில் நின்று பாதாதி கேசமுதல் தன்னைப்பாரே. 318 தன்னைத்தான் தானறிந்து பார்க்கும் போது தத்துவமாய் நின்றதொரு தொண்ணூத்தாறும் எண்ணத்தான் துலையாத ஆசாபாசம் என்ன சொல்வேன் பஞ்சகர்த்தாபஞ்ச பூதம் கண்ணைத்தான் தானறிந்து கண்ணின் கண்ணும் கலையான ரவி மதியுஞ் சுடர்கள் மூன்றும் உன்னத்தானறிந்து மனதுன்னிப் பார்க்க உண்மையென்ற நிச்சயத்தை யுரைக்கொண்ணாதே.319
85 ஆரூட சமாதி காணவே ஆரூட சமாதி தன்னைக் காலறிந்து புலத்தியனே சொல்லக் கேளு ! பூணவே தத்வலய சமாதி பெற்றுக் புகழான சவ்விகற்ப சமாதி பெற்றுப் பேணவே நிருவிற்ப சமாதி பெற்றுப் பிலமாகச் சஞ்சாரசமாதி யாகித் தோணவே யாரூடசமாதி கொண்டால் சுத்தமென்ன அசுத்தமென்னரெண்டு மொன்றே 316 ஒன்றான ஆரூடசமாதி கேளு உருமையுள்ள புலத்தியனே அருமையாகக் கண்டதொரு காட்சியெல்லாம் அநித்ய மென்றுங் கால்மடித்து நடுவேறி முடிமே லாக விண்டதொரு பஞ்சறிவை யறிவால் நீக்கி வேதாந்தப் பரவெளியில் வேளிதன் னோடே நின்றாடிக் கொண்டு சிவ யோகியாகி நின்றதினாலாரூட சமாதி யாச்சே . 317 ஆச்சப்பா சமாதியஞ்சும் நன்றாய்ச்சொன்னோம் ஆதிதொடுத் தந்தவரை நன்றாய்ப் பாரு பேச்சப்பாதானறிந்து நன்றாய்ப் பாரு பெருகிநின்ற அஷ்டாங்கந் திட்டம் பாரு மூச்சப்பாமுன்னிலையாய் நிறுத்திக் கொண்டு முத்தியுள்ள நவக்கிரக சூட்சங் கண்டு பாச்சப்பா அனுக்கிரக பதியில் நின்று பாதாதி கேசமுதல் தன்னைப்பாரே . 318 தன்னைத்தான் தானறிந்து பார்க்கும் போது தத்துவமாய் நின்றதொரு தொண்ணூத்தாறும் எண்ணத்தான் துலையாத ஆசாபாசம் என்ன சொல்வேன் பஞ்சகர்த்தாபஞ்ச பூதம் கண்ணைத்தான் தானறிந்து கண்ணின் கண்ணும் கலையான ரவி மதியுஞ் சுடர்கள் மூன்றும் உன்னத்தானறிந்து மனதுன்னிப் பார்க்க உண்மையென்ற நிச்சயத்தை யுரைக்கொண்ணாதே . 319