சௌமிய சாகரம்

308 இறுக்கியந்தத் தாதுவைநீ யிறுக்கிப் பார்க்க ஏகாந்தச் சபைதனிலேயிருந்தாயானால் சுருக்கிநின்ற அஞ்சுபஞ்ச பூத மெல்லாஞ் சொன்னபடி யாடுமடாதுருவம் பாரு திருக்கறவே பூரணமாய்த்துருவம் பார்த்தால் செங்கமலச் சுழுனையிலே நின்றால் மைந்தா நெருக்கிநின்ற சுழுனையிலே அமுர்தஞ் சிந்தும் நேமமுடன் நீயிருந்து பூசை பண்ணே . 1165 பூசைமுறை தனையறிந்து சுளியில் நின்றால் பூரணமாயிதழ்கனிந்து அமுர்தம் பாயும் நேசமுடன் அமுர்தமதைக் கொண்டால் மைந்தா நேர்மையுடன் வாசியது நிலையில் நிற்கும் பாசமுடன் நிலையறிந்து வாசி பூட்டிப் பத்தியுடன் கேசரியில் பணிந்து நின்றால் ஆசையென்ற சத்தாதி விடைய மெல்லாம் அதையகற்றிப் பூரணமாய் அறிவில் நில்லே . 1165 நில்லடாசுளியறிந்து லிங்கத் தோரம் நேர்மையுள்ள தமர்வாசற் கண்ணிலேதான் உள்ளடா மதியமுர்தங் கசிந்து பாயும் உண்மையதாய் மவுனமுடன் உள்ளே கொண்டால் அல்லடா உன்தேசம் தங்கம் போலே அங்கனையே தோணுமடா ஆதி சோதி செல்லடாசோதியிலே மனதை வைத்துத் திருகுசுழு முனையதிலே சிந்தை வையே. 1167 சிந்தையது பூரணமாய்க் கொண்டாயானால் சிறப்பான மூப்பாலுந்திறமாய்க் காணும் சந்தேக மில்லாமல் முப்பால் தன்னில் தானிருந்து பூரணமாய்ச்சுளியைப் பாரு சொந்தமுள்ள சுளிதனிலே மனதை வைத்துச் சுகமான வாசியைநீசுடருக் கேத்தி அந்தமுடன் தானிருந்து தன்னைப் பாரு ஆனந்த மானசிவ சோதி பாரே. 1168
308 இறுக்கியந்தத் தாதுவைநீ யிறுக்கிப் பார்க்க ஏகாந்தச் சபைதனிலேயிருந்தாயானால் சுருக்கிநின்ற அஞ்சுபஞ்ச பூத மெல்லாஞ் சொன்னபடி யாடுமடாதுருவம் பாரு திருக்கறவே பூரணமாய்த்துருவம் பார்த்தால் செங்கமலச் சுழுனையிலே நின்றால் மைந்தா நெருக்கிநின்ற சுழுனையிலே அமுர்தஞ் சிந்தும் நேமமுடன் நீயிருந்து பூசை பண்ணே . 1165 பூசைமுறை தனையறிந்து சுளியில் நின்றால் பூரணமாயிதழ்கனிந்து அமுர்தம் பாயும் நேசமுடன் அமுர்தமதைக் கொண்டால் மைந்தா நேர்மையுடன் வாசியது நிலையில் நிற்கும் பாசமுடன் நிலையறிந்து வாசி பூட்டிப் பத்தியுடன் கேசரியில் பணிந்து நின்றால் ஆசையென்ற சத்தாதி விடைய மெல்லாம் அதையகற்றிப் பூரணமாய் அறிவில் நில்லே . 1165 நில்லடாசுளியறிந்து லிங்கத் தோரம் நேர்மையுள்ள தமர்வாசற் கண்ணிலேதான் உள்ளடா மதியமுர்தங் கசிந்து பாயும் உண்மையதாய் மவுனமுடன் உள்ளே கொண்டால் அல்லடா உன்தேசம் தங்கம் போலே அங்கனையே தோணுமடா ஆதி சோதி செல்லடாசோதியிலே மனதை வைத்துத் திருகுசுழு முனையதிலே சிந்தை வையே . 1167 சிந்தையது பூரணமாய்க் கொண்டாயானால் சிறப்பான மூப்பாலுந்திறமாய்க் காணும் சந்தேக மில்லாமல் முப்பால் தன்னில் தானிருந்து பூரணமாய்ச்சுளியைப் பாரு சொந்தமுள்ள சுளிதனிலே மனதை வைத்துச் சுகமான வாசியைநீசுடருக் கேத்தி அந்தமுடன் தானிருந்து தன்னைப் பாரு ஆனந்த மானசிவ சோதி பாரே . 1168