சௌமிய சாகரம்

301 பாரப்பா குண்டலிக்குள் மூல மொன்று பதிவான கேசரியின் மூல மொன்று நேரப்பாசாக்கிரத்தில் மூல மொன்று நிசமான விந்துவென்ற மூல மொன்று சாரப்பாசத்தியென்ற மூல மொன்று சகலகுரு பராபரமாம் மூல மொன்று சேரப்பா இசையறிந்து அதிலே மூலஞ் செயலறிந்து கொண்டவனே சித்த னாமே. 1137 சித்தமுடன்றானறிந்து யோக மூலம் திருவான மூலமடாசுழுனை மையஞ் சுத்தமுடன் சுழுனையிலே மணிநாவுன்னிச் சோதிதிரு மணிவாசற் குள்ளே சென்று சத்தமுடன் சேர்ந்தவரையகலத் தள்ளித் தன்மனமே சாட்சியதாய்த்தானத் தேகிப் பத்தமுடன் குருபதியில் நின்றாயானால் பரஞான கேசரியில் வாழ்வாய் கண்ணே . 1138 கண்ணேது காதேது மூக்கங் கேது? கருணையுடன் கண்டதெல்லாமழிந்து போச்சு ஒண்ணேது ஒன்றுமற்று நின்ற தேது? உற்றுப்பார் வெட்டவெளி யொன்று மில்லை விண்ணேது வெளியேது ஒளியங் கேது? வேதாந்த கேசரியில் நின்று பாரு எண்ணேது எழுத்தேது ஏக மேது? யேகநிராமயமான இடத்தைக் காணே. 1133 காணவே கேசரியில் மனத்தை வைத்துக் கருணையுடன் பூரணத்திற் கலந்து கொண்டு பூணவே புருவமையத் தமருக் குள்ளே புத்தியுடன் சித்தமாய் வாசி பூட்டிப் பேணவே கேசரியில் வாழ்ந்து கொண்டால் பேசாத மவுனமது கைக்குள் ளாச்சு தோணவே மவுனமது கைக்குள்ளானால் சுகசீவ பிராணகளைசுத்த மாமே.
301 பாரப்பா குண்டலிக்குள் மூல மொன்று பதிவான கேசரியின் மூல மொன்று நேரப்பாசாக்கிரத்தில் மூல மொன்று நிசமான விந்துவென்ற மூல மொன்று சாரப்பாசத்தியென்ற மூல மொன்று சகலகுரு பராபரமாம் மூல மொன்று சேரப்பா இசையறிந்து அதிலே மூலஞ் செயலறிந்து கொண்டவனே சித்த னாமே . 1137 சித்தமுடன்றானறிந்து யோக மூலம் திருவான மூலமடாசுழுனை மையஞ் சுத்தமுடன் சுழுனையிலே மணிநாவுன்னிச் சோதிதிரு மணிவாசற் குள்ளே சென்று சத்தமுடன் சேர்ந்தவரையகலத் தள்ளித் தன்மனமே சாட்சியதாய்த்தானத் தேகிப் பத்தமுடன் குருபதியில் நின்றாயானால் பரஞான கேசரியில் வாழ்வாய் கண்ணே . 1138 கண்ணேது காதேது மூக்கங் கேது ? கருணையுடன் கண்டதெல்லாமழிந்து போச்சு ஒண்ணேது ஒன்றுமற்று நின்ற தேது ? உற்றுப்பார் வெட்டவெளி யொன்று மில்லை விண்ணேது வெளியேது ஒளியங் கேது ? வேதாந்த கேசரியில் நின்று பாரு எண்ணேது எழுத்தேது ஏக மேது ? யேகநிராமயமான இடத்தைக் காணே . 1133 காணவே கேசரியில் மனத்தை வைத்துக் கருணையுடன் பூரணத்திற் கலந்து கொண்டு பூணவே புருவமையத் தமருக் குள்ளே புத்தியுடன் சித்தமாய் வாசி பூட்டிப் பேணவே கேசரியில் வாழ்ந்து கொண்டால் பேசாத மவுனமது கைக்குள் ளாச்சு தோணவே மவுனமது கைக்குள்ளானால் சுகசீவ பிராணகளைசுத்த மாமே .