சௌமிய சாகரம்

290 நில்லடா நிலையறிந்து மணிநா வுன்னி நீமகனே பூரணத்தில் நின்றாயானால் உள்ளடா ஆதார மூல மெல்லாம் ஒளிவிளக்காய்த் தோன்றுமடா உன்னிப் பாரு கொல்லடா கருவிகர ணாதி யென்ற கொடுமலத்தைத்தானகற்றிக் குருவைப் போற்றிச் செல்லடாஞானகே சரியாள் பாதஞ் சிந்தைமன தொன்றாகத் தெளிவிற் காணே. 1093 காணுகிற உருவேது கருவு மேது? கருணைவளர் பூரணமாம் வாசி யேது? ஊணுகிற வாசியுட நிலையங் கேது? உற்றசிவ சக்தியுட மாய்கை யேது? பூணுகிற பொருளேது அருளங் கேது? பொருந்தி மனங் கொண்ட அண்ட பிண்ட மேது? தோணுகிற மாயமெல்லாஞ் சுழுனை யாட்டஞ் சுழுனைவழி தனையறிந்து சுகத்தைப் பாரே. 1094 பார்த்தனடாசுத்தவெளி பரத்தின் வீடு பதிவான நடுவீடு அண்டத்துச்சி காத்தனடாசுழுனைவழி நந்தி சேர்வை கண்ணறிந்து விண்ணதிலேகால்கொண் டூதிச் சேர்த்தனடா ரவிமதியைச்சுழுனைக் குள்ளே தீர்க்கமுடன்கால் நிறுத்தி மார்க்க மாகக் கூத்தனுட காலறிந்து மாத்தி வைத்தேன் குமுறுகின்ற சிலம்பொலியில் தேறி னேனே. 1095 சாபம் தேறவே சவுமியசாகரத்தைப் பார்த்துத் தெளிந்துகொண்டேன் இருவினையின் செயலைக் கண்டு மாறவே யெழுத்துவகை முன்னே சொன்னேன் மகத்தான சித்தரெல்லாம் மறைத்து வைத்தார் தேறவே ஓரெழுத்தைத் தியானித்தப்பா சிவபஞ்சாட் சரந்தன்னைச் செபித்துக் கொண்டு மீறவே மவுனமதை வெளியில் சொன்னால் வேகுமடா உண்சிரசு வெடிக்குந்தானே. 1096
290 நில்லடா நிலையறிந்து மணிநா வுன்னி நீமகனே பூரணத்தில் நின்றாயானால் உள்ளடா ஆதார மூல மெல்லாம் ஒளிவிளக்காய்த் தோன்றுமடா உன்னிப் பாரு கொல்லடா கருவிகர ணாதி யென்ற கொடுமலத்தைத்தானகற்றிக் குருவைப் போற்றிச் செல்லடாஞானகே சரியாள் பாதஞ் சிந்தைமன தொன்றாகத் தெளிவிற் காணே . 1093 காணுகிற உருவேது கருவு மேது ? கருணைவளர் பூரணமாம் வாசி யேது ? ஊணுகிற வாசியுட நிலையங் கேது ? உற்றசிவ சக்தியுட மாய்கை யேது ? பூணுகிற பொருளேது அருளங் கேது ? பொருந்தி மனங் கொண்ட அண்ட பிண்ட மேது ? தோணுகிற மாயமெல்லாஞ் சுழுனை யாட்டஞ் சுழுனைவழி தனையறிந்து சுகத்தைப் பாரே . 1094 பார்த்தனடாசுத்தவெளி பரத்தின் வீடு பதிவான நடுவீடு அண்டத்துச்சி காத்தனடாசுழுனைவழி நந்தி சேர்வை கண்ணறிந்து விண்ணதிலேகால்கொண் டூதிச் சேர்த்தனடா ரவிமதியைச்சுழுனைக் குள்ளே தீர்க்கமுடன்கால் நிறுத்தி மார்க்க மாகக் கூத்தனுட காலறிந்து மாத்தி வைத்தேன் குமுறுகின்ற சிலம்பொலியில் தேறி னேனே . 1095 சாபம் தேறவே சவுமியசாகரத்தைப் பார்த்துத் தெளிந்துகொண்டேன் இருவினையின் செயலைக் கண்டு மாறவே யெழுத்துவகை முன்னே சொன்னேன் மகத்தான சித்தரெல்லாம் மறைத்து வைத்தார் தேறவே ஓரெழுத்தைத் தியானித்தப்பா சிவபஞ்சாட் சரந்தன்னைச் செபித்துக் கொண்டு மீறவே மவுனமதை வெளியில் சொன்னால் வேகுமடா உண்சிரசு வெடிக்குந்தானே . 1096