சௌமிய சாகரம்

197 சுத்தமுள்ள சனிவாரந்தன்னில் மைந்தா சோதிரச மணியதுதான் மெத்த நன்று சித்தமுடன் தானிருந்து வாரந்தோறும் செப்பியசொல் தவறாமல் சித்தி யாக முத்தி பெறச்சொல்லுகிறேன்மைந்தா கேளு முதலான மனோன்மணியை மவுன மாக நித்தியமும் நிலையறிந்து சுத்த மாக நேமமுடன் மனோன்மணியால் சிவமே செய்யே. 750 செய்யப்பா சிவமதுதான் தினமும் செய்யில் சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும் மெய்யப்பாகர்மந்தான் விலகிப் போகும் வேதாந்த சித்தாந்த மெய்யுள் தங்கும் மையப்பாசுழுனைதனில் வாசி யேறும் மைந்தனே அஷ்டாங்கந் திட்டமாகும் பொய்யப்பா போகாது தன்னைப் பாரு பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே. 751 பொருந்தி மனங் கொண்டுசிவ யோகஞ் செய்யப் போதமய மானசிவ சத்தி பாதம் இருந்து நிதந்தன்மனமே சாட்சியாக ஏகாந்த மாயிருந்து பூசை செய்தால் வருந்திவரும் பிறப்பிறப்பும் மாய மாகும் மார்க்கமுள்ள செகசாட்சி மனதில் தங்கும் அருந்தவமாய் நின்றதொரு சாட்சி தானும் அரகராசின் மயமான ஆதியாமே. 752 ஆமென்ற ஆதியந்த மண்விண்ணாச்சு அதின் நடுவே யப்புடனே தீயுங் காலும் ஓமென்ற முச்சுடராய் விளங்கு தய்யா உறுதியுடன் தன்னகத்தி லொடுங்கிப் பாரு தாமென்ற பானுவது பருதி யாச்சு சதிரான காலதுதான் மதியு மாச்சு நாமென்ற தீயதுதான் சுடரு மாச்சு நாட்டமதில் கண்டறிந்து நயனம் பாரே. 753
197 சுத்தமுள்ள சனிவாரந்தன்னில் மைந்தா சோதிரச மணியதுதான் மெத்த நன்று சித்தமுடன் தானிருந்து வாரந்தோறும் செப்பியசொல் தவறாமல் சித்தி யாக முத்தி பெறச்சொல்லுகிறேன்மைந்தா கேளு முதலான மனோன்மணியை மவுன மாக நித்தியமும் நிலையறிந்து சுத்த மாக நேமமுடன் மனோன்மணியால் சிவமே செய்யே . 750 செய்யப்பா சிவமதுதான் தினமும் செய்யில் சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும் மெய்யப்பாகர்மந்தான் விலகிப் போகும் வேதாந்த சித்தாந்த மெய்யுள் தங்கும் மையப்பாசுழுனைதனில் வாசி யேறும் மைந்தனே அஷ்டாங்கந் திட்டமாகும் பொய்யப்பா போகாது தன்னைப் பாரு பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே . 751 பொருந்தி மனங் கொண்டுசிவ யோகஞ் செய்யப் போதமய மானசிவ சத்தி பாதம் இருந்து நிதந்தன்மனமே சாட்சியாக ஏகாந்த மாயிருந்து பூசை செய்தால் வருந்திவரும் பிறப்பிறப்பும் மாய மாகும் மார்க்கமுள்ள செகசாட்சி மனதில் தங்கும் அருந்தவமாய் நின்றதொரு சாட்சி தானும் அரகராசின் மயமான ஆதியாமே . 752 ஆமென்ற ஆதியந்த மண்விண்ணாச்சு அதின் நடுவே யப்புடனே தீயுங் காலும் ஓமென்ற முச்சுடராய் விளங்கு தய்யா உறுதியுடன் தன்னகத்தி லொடுங்கிப் பாரு தாமென்ற பானுவது பருதி யாச்சு சதிரான காலதுதான் மதியு மாச்சு நாமென்ற தீயதுதான் சுடரு மாச்சு நாட்டமதில் கண்டறிந்து நயனம் பாரே . 753