சௌமிய சாகரம்

92 வாங்கியிரு மார்பினில் அணிந்து மைந்தா வணக்கமுடன் சிங்றீங் கிலியென் றேதான் ஓங்கியொரு மனதாகத் தியானம் பண்ணி உத்தமனே புருவநடு கமலத் தேத்தித் தாங்கிமிக ஓம், றீங், அம், மென்றோதிச் சங்கையுடன் மூலகணபதியைப் பார்த்துப் பாங்குபெறச்சிவசிவாவென்றமுர்த மூட்டிப் பத்தியுடன் சற்குருவே நமவென் றோதே! 344 ஓதிமனப் பூரணமாய் மைந்தா நீயும் உரிமையுடன் அமுதுகறி வர்க்க மெல்லாம் நீதியுடன் மூலமதுக் கற்புதமே செய்து நேர்மையுடன் சீஷர்களையருகழைத்துச் சோதியென்ற புருவமதில் திருநீறிட்டுச் சுகசீவ பிராணகளையமுர்த மீந்து ஆதிபரஞ் சோதிதனைத் தியானம் பண்ணி அமுதுகறி வர்க்கமெல்லாம் அவர்கட் கீயே! 345 ஈந்துமிக நிர்மாலிய மெல்லாங் கூட்டி இன்பமுடன் தூபதீ பங்கள் காட்டி ஆய்ந்து நின்ற அரதேசி பரதே சிக்கு அன்னமொடு பலகார மன்பாயீந்து சாய்ந்துமனம் போகாமல் நிலையில் நின்று சங்கையுடன் வாசிதாரனையைப் பற்றிப் பாய்ந்துமிக ஆதாரத்துள்ளே சென்று பராபரையே காரணியே அம்பரையே யென்னே!345 அம்பரையே அகண்டமே ஆதித் தாயே! ஆதியந்த மில்லாத அரூபத் தாயே! தம்பரையே சமரசமே மவுன ஞானச் சச்சுதானந்தவெளித் தாயே தாயே! நம்பரையே நாதாந்தக்கருணை வாழ்வே! நானென்றும் நீயென்றும் இல்லாதானே! உம்பரையே உம்பருக்கும் அரியயற்கு மெட்டா ஓங்காரங் கடந்து நின்ற ஒளியே யென்னே ! 347
92 வாங்கியிரு மார்பினில் அணிந்து மைந்தா வணக்கமுடன் சிங்றீங் கிலியென் றேதான் ஓங்கியொரு மனதாகத் தியானம் பண்ணி உத்தமனே புருவநடு கமலத் தேத்தித் தாங்கிமிக ஓம் றீங் அம் மென்றோதிச் சங்கையுடன் மூலகணபதியைப் பார்த்துப் பாங்குபெறச்சிவசிவாவென்றமுர்த மூட்டிப் பத்தியுடன் சற்குருவே நமவென் றோதே ! 344 ஓதிமனப் பூரணமாய் மைந்தா நீயும் உரிமையுடன் அமுதுகறி வர்க்க மெல்லாம் நீதியுடன் மூலமதுக் கற்புதமே செய்து நேர்மையுடன் சீஷர்களையருகழைத்துச் சோதியென்ற புருவமதில் திருநீறிட்டுச் சுகசீவ பிராணகளையமுர்த மீந்து ஆதிபரஞ் சோதிதனைத் தியானம் பண்ணி அமுதுகறி வர்க்கமெல்லாம் அவர்கட் கீயே ! 345 ஈந்துமிக நிர்மாலிய மெல்லாங் கூட்டி இன்பமுடன் தூபதீ பங்கள் காட்டி ஆய்ந்து நின்ற அரதேசி பரதே சிக்கு அன்னமொடு பலகார மன்பாயீந்து சாய்ந்துமனம் போகாமல் நிலையில் நின்று சங்கையுடன் வாசிதாரனையைப் பற்றிப் பாய்ந்துமிக ஆதாரத்துள்ளே சென்று பராபரையே காரணியே அம்பரையே யென்னே ! 345 அம்பரையே அகண்டமே ஆதித் தாயே ! ஆதியந்த மில்லாத அரூபத் தாயே ! தம்பரையே சமரசமே மவுன ஞானச் சச்சுதானந்தவெளித் தாயே தாயே ! நம்பரையே நாதாந்தக்கருணை வாழ்வே ! நானென்றும் நீயென்றும் இல்லாதானே ! உம்பரையே உம்பருக்கும் அரியயற்கு மெட்டா ஓங்காரங் கடந்து நின்ற ஒளியே யென்னே ! 347