சௌமிய சாகரம்

90 கண்கண்ட சிவரூபமிதுதானய்யா கருணைவளர் சாயுச்சிய பதமீதய்யா விண்கண்ட வெளிப்பூசைசரியை மார்க்கம் வேதாந்தச்சுளிமுனையில் மேவிப் பாரு முன்கண்ட காட்சியெல்லாம் அங்கே கண்டேன் முத்தியுள்ள பிறப்பிறப்பும் அங்கே கண்டேன் கண்கண்ட ஓங்கார வட்டந்தன்னில் காணுமடா எட்டுரெண்டும் கருவாய்க் காணே. 336 காணப்பா புலத்தியனே உனக்காய்ச் சொன்னேன் கருவான எட்டுரெண்டும் நாத விந்து பேணப்பா நாதவிந்து சத்திசிவ மாச்சு பெருகிநின்ற சத்திசிவந்தான்தானென்று பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு புத்தியுடன் சத்திசிவ பூசை கேளு தோணப்பாதனையறிந்து பூசைசெய்யச் சொல்லுகிறேன் கருமான சூட்சந்தானே! 337 தானான சூட்சமது என்ன வென்றால் தன்மையுடன் போம்வாய்வு சிவமதாகும் ஊனான உள்புகுதல் சத்தி யாகும் உண்மையுடனிதுவறிந்து தன்னைப் பார்த்துக் கோனான குருபீடம் புருவ மத்திக் குருவான அனுக்கிரகச்சுளினை மீதில் வானான கேசரமேதானேதானாய் மனங்குவிந்து பூசைசெய்யும் வகையைக் கேளே! 338 வகையான பூரகந்தான் அங்கென்றூது மகஸ்த்தான கும்பகந்தான் சிங்கென்றேத்தில் துகையான ரேசகந்தான் உங்கென்றய்யா சுத்தமுடன் யோகசாதனையைக் கேளு பகையாதே பூரகந்தான் வங்வங் கென்று பத்தியுடன் தானிருக்க மாத்திரைரெண்டாச்சு நகையாதே நாலுதிரம் அங்கென்றாக்கால் நன்மையுள்ள மாத்திரைதான் நாலு மாச்சே! 339
90 கண்கண்ட சிவரூபமிதுதானய்யா கருணைவளர் சாயுச்சிய பதமீதய்யா விண்கண்ட வெளிப்பூசைசரியை மார்க்கம் வேதாந்தச்சுளிமுனையில் மேவிப் பாரு முன்கண்ட காட்சியெல்லாம் அங்கே கண்டேன் முத்தியுள்ள பிறப்பிறப்பும் அங்கே கண்டேன் கண்கண்ட ஓங்கார வட்டந்தன்னில் காணுமடா எட்டுரெண்டும் கருவாய்க் காணே . 336 காணப்பா புலத்தியனே உனக்காய்ச் சொன்னேன் கருவான எட்டுரெண்டும் நாத விந்து பேணப்பா நாதவிந்து சத்திசிவ மாச்சு பெருகிநின்ற சத்திசிவந்தான்தானென்று பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு புத்தியுடன் சத்திசிவ பூசை கேளு தோணப்பாதனையறிந்து பூசைசெய்யச் சொல்லுகிறேன் கருமான சூட்சந்தானே ! 337 தானான சூட்சமது என்ன வென்றால் தன்மையுடன் போம்வாய்வு சிவமதாகும் ஊனான உள்புகுதல் சத்தி யாகும் உண்மையுடனிதுவறிந்து தன்னைப் பார்த்துக் கோனான குருபீடம் புருவ மத்திக் குருவான அனுக்கிரகச்சுளினை மீதில் வானான கேசரமேதானேதானாய் மனங்குவிந்து பூசைசெய்யும் வகையைக் கேளே ! 338 வகையான பூரகந்தான் அங்கென்றூது மகஸ்த்தான கும்பகந்தான் சிங்கென்றேத்தில் துகையான ரேசகந்தான் உங்கென்றய்யா சுத்தமுடன் யோகசாதனையைக் கேளு பகையாதே பூரகந்தான் வங்வங் கென்று பத்தியுடன் தானிருக்க மாத்திரைரெண்டாச்சு நகையாதே நாலுதிரம் அங்கென்றாக்கால் நன்மையுள்ள மாத்திரைதான் நாலு மாச்சே ! 339