குமாரசுவாமியம்

315 பாரிலுயிர்ப் பிறப்பிறப்பும் பல்குணமும் தொழிலும் பகருமவைக் குறுமிடரும் பல்கியநன் நலமும் தேரியுல கோரொழகும் சீர்கொள்விதிவி லக்கும் சேர்கதியும் மற்றவையும் சேர்த்துரைத்தாம் இந்நூல் ஏரியல நிகழ்கவென வியம்பியகத் தியனுக் கீறிலருள் சுரந்தவனை இருக்கையிலுய்த் திருந்தான் போரியலும் வேலனிறை பூரனன்வி சாகன் பூங்கடம்பன் எனதுளமாம் பூங்கமலா சாகன். 425 பூலோகத்தின்கண் சகல ஜீவராசிகளும் பிறந்திறக்கும் தன்மையும், அவற்றின் பலவகை குணகுணங்களும், தொழில்களும், இருவினைக்கு ஈடாய் அவற்றிற்குப் பொருந்தும் இன்ப-துன்பங்களும், இவ்வுலகின்கம் உள்ள யாவரும் தெளிந்து ஒழுகற்குரிய விதிவிலக்குகளும், மறுகையில் அவர்கள் அடையும் கதியும், உலகியல் நட்டமுட்டி சிந்தனை முதலிய மற்ற யாவையும் நினைக்குப் புலப்படும் வண்ணம் யாம் திரட்டிக்கூறி இந்நூலானது அழகோடும் கூடி இப்பூலோகத்தின்கண் என்றும் அழிவுறாது நிகழ்கவெனத் திருவாய் மலர்ந்தருளி அகத்தியமா முனிவருக்கு ஈறில்லாத தண்ணருள் சுரந்து, அவனைத் தனது இருப்பிடமாகிய பொதியாசலத்துக்குச் செல்கெனப் பணிந்து திருச்செந்தூரில் இனிது வீற்றிருந்தவன் போர்த் தொழிலை உடைய வெற்றி வேலாயுதத்தைத் தரித்தவனும் சர்வேசனும் சர்வபரி பூரணனும் விசாகன் எனும் திருப்பெயர் உடையவனும் வாசனை கமழாநின்ற கடப்பமாலையை உடையவனும், எனது இருதயகமலமாகிய ஆலயத்தின்கண் நீங்காமல் எழுந்தருளியிருப்பவனுமாகிய சுப்பிரமணியக் கடவுள். பதனபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் ஐம்பத்து நான்கிற்குக் கவி 425
315 பாரிலுயிர்ப் பிறப்பிறப்பும் பல்குணமும் தொழிலும் பகருமவைக் குறுமிடரும் பல்கியநன் நலமும் தேரியுல கோரொழகும் சீர்கொள்விதிவி லக்கும் சேர்கதியும் மற்றவையும் சேர்த்துரைத்தாம் இந்நூல் ஏரியல நிகழ்கவென வியம்பியகத் தியனுக் கீறிலருள் சுரந்தவனை இருக்கையிலுய்த் திருந்தான் போரியலும் வேலனிறை பூரனன்வி சாகன் பூங்கடம்பன் எனதுளமாம் பூங்கமலா சாகன் . 425 பூலோகத்தின்கண் சகல ஜீவராசிகளும் பிறந்திறக்கும் தன்மையும் அவற்றின் பலவகை குணகுணங்களும் தொழில்களும் இருவினைக்கு ஈடாய் அவற்றிற்குப் பொருந்தும் இன்ப - துன்பங்களும் இவ்வுலகின்கம் உள்ள யாவரும் தெளிந்து ஒழுகற்குரிய விதிவிலக்குகளும் மறுகையில் அவர்கள் அடையும் கதியும் உலகியல் நட்டமுட்டி சிந்தனை முதலிய மற்ற யாவையும் நினைக்குப் புலப்படும் வண்ணம் யாம் திரட்டிக்கூறி இந்நூலானது அழகோடும் கூடி இப்பூலோகத்தின்கண் என்றும் அழிவுறாது நிகழ்கவெனத் திருவாய் மலர்ந்தருளி அகத்தியமா முனிவருக்கு ஈறில்லாத தண்ணருள் சுரந்து அவனைத் தனது இருப்பிடமாகிய பொதியாசலத்துக்குச் செல்கெனப் பணிந்து திருச்செந்தூரில் இனிது வீற்றிருந்தவன் போர்த் தொழிலை உடைய வெற்றி வேலாயுதத்தைத் தரித்தவனும் சர்வேசனும் சர்வபரி பூரணனும் விசாகன் எனும் திருப்பெயர் உடையவனும் வாசனை கமழாநின்ற கடப்பமாலையை உடையவனும் எனது இருதயகமலமாகிய ஆலயத்தின்கண் நீங்காமல் எழுந்தருளியிருப்பவனுமாகிய சுப்பிரமணியக் கடவுள் . பதனபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் ஐம்பத்து நான்கிற்குக் கவி 425