குமாரசுவாமியம்

307 நீர்சுவறல் இற்றுவிழல் வெலச்சாற்றின் மணத்தல் நேர்பாயா தசைந்துவிழல் நிலந்துளையா தயர்தல் சோர்தல் பிணி பணித்திடுதல் வயம்பகிர்தல் சுகமாய்த் தோன்றல்சுதற் கம்புயவா சத்துடன்பான் மணமும் சேர்தறனம் பிணநாற்றம் தரித்திரஞ்சத் துருவை செயித்தலரி சனங்காவி செல்வமதி கமுமாம் கார்நிறமுற் றழன்றெழுதல் சிதரிடன்மா ரணத்துக் காமிதன்மேல் மலத்தியல்புக் காதல்கடி நுதலே. 413 நீர்விடும்போது சுவறல், இற்றுவிழல் வெல்லச்சாற்றின் மணத்தல், நேர் பாயாது அசைந்து விழுதல், நிலந்துளையாத யற்றல், சோர்தல் இவையாகில் ரோகம் என்க. தாமரை வாசனையும் பால் வாசனையும்கலந்து வீழில் ஐஸ்வர்யம். பிண நாற்றம் தோன்றில் தரித்திரம். மஞ்சள் வாசனையாகில் சத்துரு ஜயம். நீலோத்பல வாசனையாகில் சௌபாக்கியம். நிறம் கறுத்து அழன்றெழுதல், சிதறிடல் இவையுமாகில் மரணம் என்க. இதன்மேல் மலத்தியல்பு சொல்லுவோம். அறலிருசாண் அளவதன்மேல் ஆகுததீர்க் காயுள் வாமுதகங் காற்குமுன்பாம் அதற்குளதைஸ் வரிய மிறுகல்ரோ கங்கழிதல் இற்றுவிழல் குதத்தில் எரிவொடனன் எழுதல்பிணி எப்பொழுதும் சுகமாய் உறலதுசற் றெனினும்பா னத்தலமொட் டாமல் உற்றிடல்சம் போகமதி கத்துளவாழ் உளதாம் மறிமலமுற் றுதிரம்பச்சென் றொழுகிடலூண் கழிதல் வானலில்போல் நிறம்காட்டல் மரணமலத் தியல்பே. 414 மலம் விடும்போது இருசாண் அளவும் அறாது வீழில் தீர்க்காயுள் என்க. வாய்வு, ஜலம் இரண்டும் முந்தாமல் மலம் முந்தில் ஐஸ்வரியம். இறுகி வீழில் அரோகம். கழிதல், இற்று வீழல், குதத்தில் எரிவோடு அனன்று எழுதல் இவையாகில் ரோகம். எப்போதும் சுகமாக உற்றிடல் சற்றெனினும் அபானத்தலம் ஒட்டாமல் விழில் சம்போகம் அதிகமான சௌபாக்கியம் என்க. ஆட்டுப்பிழுக்கை போல் உதிரம் பச்சை நிறமாகக் கழிதல், ஊன்கழிதல், பஞ்சவர்ணம்காட்டல் இவையாகில் மரணகாலம். திரிமல சம்பிரதாயப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் ஐம்பத்து ஒன்றுக்குக் கவி 414
307 நீர்சுவறல் இற்றுவிழல் வெலச்சாற்றின் மணத்தல் நேர்பாயா தசைந்துவிழல் நிலந்துளையா தயர்தல் சோர்தல் பிணி பணித்திடுதல் வயம்பகிர்தல் சுகமாய்த் தோன்றல்சுதற் கம்புயவா சத்துடன்பான் மணமும் சேர்தறனம் பிணநாற்றம் தரித்திரஞ்சத் துருவை செயித்தலரி சனங்காவி செல்வமதி கமுமாம் கார்நிறமுற் றழன்றெழுதல் சிதரிடன்மா ரணத்துக் காமிதன்மேல் மலத்தியல்புக் காதல்கடி நுதலே . 413 நீர்விடும்போது சுவறல் இற்றுவிழல் வெல்லச்சாற்றின் மணத்தல் நேர் பாயாது அசைந்து விழுதல் நிலந்துளையாத யற்றல் சோர்தல் இவையாகில் ரோகம் என்க . தாமரை வாசனையும் பால் வாசனையும்கலந்து வீழில் ஐஸ்வர்யம் . பிண நாற்றம் தோன்றில் தரித்திரம் . மஞ்சள் வாசனையாகில் சத்துரு ஜயம் . நீலோத்பல வாசனையாகில் சௌபாக்கியம் . நிறம் கறுத்து அழன்றெழுதல் சிதறிடல் இவையுமாகில் மரணம் என்க . இதன்மேல் மலத்தியல்பு சொல்லுவோம் . அறலிருசாண் அளவதன்மேல் ஆகுததீர்க் காயுள் வாமுதகங் காற்குமுன்பாம் அதற்குளதைஸ் வரிய மிறுகல்ரோ கங்கழிதல் இற்றுவிழல் குதத்தில் எரிவொடனன் எழுதல்பிணி எப்பொழுதும் சுகமாய் உறலதுசற் றெனினும்பா னத்தலமொட் டாமல் உற்றிடல்சம் போகமதி கத்துளவாழ் உளதாம் மறிமலமுற் றுதிரம்பச்சென் றொழுகிடலூண் கழிதல் வானலில்போல் நிறம்காட்டல் மரணமலத் தியல்பே . 414 மலம் விடும்போது இருசாண் அளவும் அறாது வீழில் தீர்க்காயுள் என்க . வாய்வு ஜலம் இரண்டும் முந்தாமல் மலம் முந்தில் ஐஸ்வரியம் . இறுகி வீழில் அரோகம் . கழிதல் இற்று வீழல் குதத்தில் எரிவோடு அனன்று எழுதல் இவையாகில் ரோகம் . எப்போதும் சுகமாக உற்றிடல் சற்றெனினும் அபானத்தலம் ஒட்டாமல் விழில் சம்போகம் அதிகமான சௌபாக்கியம் என்க . ஆட்டுப்பிழுக்கை போல் உதிரம் பச்சை நிறமாகக் கழிதல் ஊன்கழிதல் பஞ்சவர்ணம்காட்டல் இவையாகில் மரணகாலம் . திரிமல சம்பிரதாயப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் ஐம்பத்து ஒன்றுக்குக் கவி 414